Monday, March 31, 2014

காதல் ரோஜாவே - மனம் போன போக்கில்

படம் : காதல் ரோஜாவே (1997)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா






மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் இன்று தானே புதிர் போடுது


நீரில்லாத பாலையில் நிலவு போல நீயடி
நின்று காண இயலா வழிபோக்கன் நானடி

நீ மறுத்த போதிலும் உன்னை தொடரும் வெண்ணிலா
அமுத ஒளியை வீசும் தினம் உந்தன் காலடி

கடல் நீரில் தாகம் தீருமா
கதைகள் இங்கு வாழ்க்கையாகுமா
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்
யார் நம்மை சேர்த்து வைத்தது
நம் கையில் என்ன உள்ளது
புது அன்பு ஒன்று தானே விளையாடுது
அது நெஞ்சில் இன்று தானே புதிர் போடுது


காதல் வரிகள் பாடினால் கானல் வரிகள் ஆகுமா
உனது கைகள் மீட்டும் புது பொன்னின் வீணை நான்

வசந்த காலம் போனபின் குயில்கள் கூவ கூடுமோ
வந்து போகும் வசந்தம் வாழ்வில் என்று தோன்றுமோ

கடலோரம் ஆடும் நீரலை
ஒரு போதும் ஓய்வதில்லையே
மனம் போன போக்கில் போனேன் என் பாதையில்
விடிவெள்ளி ஒன்று கண்டேன் அதிகாலையில்

யார் நம்மை சேர்த்து வைத்தது

நம் கையில் என்ன உள்ளது

இது பிரிந்து போகும் நேரம் வழி அனுப்பவா
உன்னை அறிந்து கொண்ட நேரம் நீ சென்று வா


என்னமோ ஏதோ - Shut Up Your Mouth

படம்: என்னமோ ஏதோ (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: தீபக், ஸ்ருதிஹாசன்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி






ஓ... ஹோஹ்ஹ்ஹ் ஹ்ஹ்ஹ்... நநயே ...
ஓஹோ... ஒஹோஒ...

Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth, ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை !@#$
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்

ஹேய் யோடா யோடா யோவ்டா கோவம் ஏனோடா?
ஹேய் யோடா யோடா யோவ்டா பக்கம் நீ வாடா 
ஹேய் யோடா யோடா யோவ்டா சீற்றம் ஏனோடா?
ஹேய் ஹையோ ஹையய்யோடா ஆட நீ வாடா

Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth,  ஒன் சட்டி பானை

Caffine-ல் விழிகள் செய்தான்
Cocoa-வில் இதழை செய்தான் 
Cocktail-லாய் மண்ணில் வந்த பெண்ணே நான் தான் 
நீ வந்து பருக தானே உன்னை செய்தான் 

Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்
வாய கொஞ்சம் மூடு... ஒன் சட்டி பானை... சட்டி பானை 


ஹன்னன்ன... ஹே... ஹேய்...

அழகென்ற ஒன்று தான் அழுகைக்கெல்லாம் மூலம்
அலைபாயும் நெஞ்சமே அழிவுக்கெல்லாம் மூலம்

அலைபாய்கிறாய் அலைபாய்கிறாய் எனதழகில் நீ சாய்கிறாய் 
குளிர்காயவா குளிர்காயவா? எனதருகில் நீ மேய்கிறாய் 
அழிந்தாலுமே இவள் வேண்டுமே இமைக்காமல் பார்க்கிறாய் 

Shut Up Your Mouth, ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth, ஒன்... ஒன்... ஒன்...


அடி வாங்கி நெஞ்சிலே மீண்டும் மீண்டும் காயம் 
விலங்காக மாறினேன் இதிலே என்ன மாயம்?

மிருகங்களின் ரணம் போக்குதல் என் தொழிலாய் கொண்டேனடா
ஒரு ஊசியாய் உன்னில் ஏறியே ரணமாற்ற வந்தேனடா 
வலி என்பதை வலி கொண்டுதான் எடுப்பேனே பாரடா 

Shut Up Your Mouth... Hey Let Your Body Shout

ஹேய் யோடா யோடா யோவ்டா போதை ஏனோடா?
ஹேய் யோடா யோடா யோவ்டா என் கண்ணால் தான்டா 
ஹேய் யோடா யோடா யோவ்டா நேற்றே வேணான்டா
ஹேய் யோடா உந்தன் மூச்சு காற்றே நான் தான்டா

Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்
Shut Up Your Mouth... ஒன் சட்டி பானை கவுத்


இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா - உன் செல்ஃபோனுல

படம்: இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013)
இசை: சித்தார்த் விபின்
பாடியவர்: நரேஷ் ஐயர்
பாடல்வரிகள்: மதன் கார்க்கி 




லவ் பண்ணுன பொண்ணு விட்டுட்டு போயிட்டா 
அவள வெறுப்பேத்தாம அவளுக்காக
ஒரு நிமிசம் ப்ரே பண்ணுங்கடா 
அவளோட பேரன்ஸ்க்காக ப்ரே பண்ணுங்கடா 
அவ புருஷனுக்காக ப்ரே பண்ணுங்கடா 
அவ புள்ளிக்குட்டிக்களுக்கும் சேத்து ப்ரே பண்ணுங்கடா 
ப்ரே பண்ணுங்க...

ஓம் போக ஓம் போக ஓம் மதத ஓம் ஜனக
ஓம் பொண்ணே ஒனக்கா தான்
ஒன் தவிர ஒன் தவிர ஒன் பேர் முன்னால
தெனம் ப்ரே பண்ணுவேன்
ஓம் ஸ்வாகா மாகா ங்கொக்கா மொக்கா
பொண்ணே ஒனக்காகத் தான் 
தெனம் ப்ரே பண்ணுவேன் ங்கொக்கா... மொக்கா...


உன் செல்போனுல பேலன்ஸ் மறஞ்சிடும்டி 
உன் லேப்டாப் எல்லாம் வைரஸ் நெஞ்சிடும்டி
உன் ஏடிஎம் கார்ட் ரெண்டும் தொலைஞ்சிடும்டி
அது கிடைச்சாலும் பின் நம்பர் மறந்திட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்


காலேஜ் பசங்கெல்லாம் ஆண்டினு அழைக்க
வேண்டி ப்ரே பண்ணுவேன்
டிரெய்னேஜ் குழியில நீ விழுந்து குளிக்க
தோண்டி ப்ரே பண்ணுவேன்
தூங்க போனா தூங்க முடியாம தான்
கொசு புடிங்கிட ப்ரே பண்ணுவேன்
அதையும் மீறி நீயும் தூங்க போனா
பவர் ஸ்டார் கனவில் வந்து டான்ஸ் ஆட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்


ஒன் பெஸ்ட் ஃப்ரெண்டுக்கு அழகான புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
வழுக்க தலையோட உனக்கொரு புருஷன்
கிடைக்க ப்ரே பண்ணுவேன்
பொண்ணுங்க பத்து நீயும் பெத்து போட
நான் சத்தியமா ப்ரே பண்ணுவேன்
அந்த பத்தும் லவ் பண்ணாமலே
என்ன போல மாப்பிளய நீயும் தேட ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் அங்க ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்


நீ பைக்குல போனா போலீஸ் நிறுத்துனும்டி
நீ ஜாக்கிங் போனா நாய் தொறத்தனும்டி
ன் கேர்ள் ப்ரண்ட்ஸ் எல்லாம் பேயா மாறனும்டி
ன் பாய் ப்ரண்டெல்லாம் கேயா மாறத்தான் ப்ரே பண்ணுவேன்
நீ எங்க போனாலும் நான் ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்
எல்லா சாமியும் நல்லா ப்ரே பண்ணுவேன்

ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்.... 
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்.... 
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்.... 
ப்ரே பண்ணுவேன்.... ப்ரே பண்ணுவேன்.... 
ப்ரே பண்ணுவேன்....

Sunday, March 30, 2014

ரம்மி - கூட மேலே

படம்: ரம்மி (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: பிரசன்னா, வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடல்வரிகள்: யுகபாரதி




ஹா... ஹ.. ஹா...  ஹா... ஹா... 

கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவளே…
ஒங்கூட கொஞ்சம் நானும் வாரேன்
கூட்டிக்கிட்டு போனா என்ன…
ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா
நீ வாயேனு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா…
நீ வேணானு சொன்னாலே போவேடி சேதாரமா…


கூட மேலே கூடவச்சு கூடலூரு போறவள…
நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
துவக்கள தேச்சி வச்சா துரு ஏறுமா
நான் போறேனே சொல்லாம வாரேனே ஒன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா…


சாதத்துல கல்லு போல
நெஞ்சிக்குள்ள நீ இருந்து
சரிக்காம சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில்
சிக்கி கிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர கொல்லுற

அதிகம் பேசாம அளந்து தான் பேசி
எதுக்கு சடை பின்னுற

சல்லி வேர ஆணி வேராக்குற
செத்த பூவ வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு
பொய்யான வழி சொல்லுற

கூட மேலே கூடவச்சு
கூடலூரு போறவளே

நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன


ஹேஹே... ஹே... ஹே... ஹேய்...
எங்கேவேனா போய்க்க நீ
என்ன விட்டு போய்டாம
இருந்தாலே அது போதுமே

தண்ணியத்தான் விட்டுபுட்டு
தாமரையும் போனதுனா
தரைமேல தலை சாயுமே

மறஞ்சி போனாலும் மறந்து போகாத
நினைப்புத்தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்கத்தான் இன்பமே

நீ பாக்காம போனாலே
கெடையாது மறுஜெம்மமே

ஹா.. ஹா... ஹா.. ஹா... 

கூட மேலே கூடவச்சு
ம்... ஹ... கூடலூரு... கூடலூரு போறவளே... 

ம்... நீ கூட்டிக்கிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ... ஒத்தையில நீயும் போனா அது நியாயமா
உன்னுடனே நானும் வாறேன் ஒரு ஓரமா

நான் போறேனே சொல்லாம வாரேனே உன் தாரமா
நீ தாயேனு கேட்காம தாரேனே தாராளமா


Wednesday, March 26, 2014

என்னமோ ஏதோ - புதிய உலகை

படம்: என்னமோ ஏதோ (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: வைக்கம் விஜயலட்சுமி
பாடல்வரிகள்: மதன் கார்க்கி




புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன்... என்னை விடு
விழியின் துளியில் நினைவைக் கரைத்து
ஓடிப் போகிறேன்... என்னை விடு
பிரிவில் தொடங்கிப் பூத்ததை 
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான் மீளப் போகிறேன் 
தூரமாய்...... வாழப்போகிறேன்

புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன்... என்னை விடு
விழியின் துளியில் நினைவைக் கரைத்து 
ஓடிப் போகிறேன்... என்னை விடு


மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய்
உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நாளும் காணும் ஆசையில்

புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன்... என்னை விடு


யாரும் தீண்டிடா இடங்களில் மனதைத் தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்
உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இன்று வேண்டாம் என்றே பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா 

புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன்... என்னை விடு
பிரிவில் தொடங்கிப் பூத்ததை 
பிரிவில் முடிந்து போகிறேன்
மீண்டும் நான்.. மீளப் போகிறேன் 
தூரமாய்....... வாழப்போகிறேன்
புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன்...
என்னை விடு....


ஜில்லா - கண்டாங்கி கண்டாங்கி

படம்: ஜில்லா (2014)
இசை: D.இமான்
பாடியவர்கள்: விஜய், ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள்: வைரமுத்து





ஹும்... ஹும்... ஹும்... ஹும்...
ஹும்... ஓ... ஆ... ஆ...

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

ஏ... கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா... ஒ...ஒ... ஒஹோ...

ஓ... கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா...

அடி உன் வீடு தல்லாகுளம்
என் வீடு தெப்பகுளம்
நீரோடு நீரு சேரட்டுமே
அழகர் மலகோயில் யானை வந்து
அல்வாவ திண்பது போல்
என் ஆச உன்ன திண்ணட்டுமே


ஒத்தைக்கு ஒத்த அழைக்கும் அழகு
ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது
புத்திக்குள்ள அரிக்குது
நெத்திகுள்ள துடிக்குது

வெள்ள முழி வெளிய தெரிய
கள்ள முழி முழிக்கும் பொழுது
என் உசுரு ஒடுங்குது
ஈர கொழ நடுங்குது

சின்ன சின்ன பொய்யும் பேசுற
ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

நீ பாத்தாக்க தென்னமட்ட
பாஞ்சாக்க தேக்கங்கட்ட
பாசாங்கு வேணாம் சுந்தரரே

நீ தேயாத நாட்டு கட்ட
தெரியாம மாட்டிக்கிட்ட
என் ராசி என்றும் மன்மதனே


கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி
நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி
என் உசுர பறிக்குற
என்ன செய்ய நினைக்குற

அம்பு விட்டு ஆள அடிக்குற
தும்ப விட்டு வால பிடிக்குற

தாலி இல்லாத சம்சாரமே
தடையில்லா மின்சாரமே
விளக்கேத்த வாடி வெண்ணிலவே

எந்தன் மார்போட சந்தனமே
மாராப்பு வைபோகமே
முத்தாட வாயா முன்னிரவே

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

இந்த கண்ணுக்கு அஞ்சுலட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா...

கண்டாங்கி கண்டாங்கி

ஹும்... ஹும்... ஹும் ஹும்...

கண்டாலே கிறுகேத்தும்

கஞ்சா வச்ச கண்ணு

பாண்டிய நாடு - ஒத்த கடை ஒத்தகடை மச்சான்

படம் : பாண்டிய நாடு (2013)
இசை : D.இமான்
பாடியவர்கள் : சூரஜ் சந்தோஷ், ஹரிஹரசுதன்
பாடல் வரிகள் : வைரமுத்து





ஒத்தகடை ஒத்தகடை மச்சான்
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
அவ பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்

ஜெயிச்சா ஜோடி வரும்
தோத்தா தாடி வரும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு
ஜெயிச்சா மாலை மாத்து
தோத்தா ஆள மாத்து
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு

ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்த கடை ஒத்தகடை மச்சான் 
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்


கண்ண காட்டி வலைவிரிக்கும்
கண்ண கட்டி கழுத்தறுக்கும்
ஒத்த உறவ கூட்டி வந்து
மொத்த உறவ கொண்டுபுடும்
இதான் மச்சான் லவ்வு
இதில் என்னாத்துக்கு டவ்வு

செல்போனுக்கு செலவிழுத்து
செல்வம் எல்லாம் கரைச்சிபுடும்
அஞ்சு நிமிஷம் சுகம் குடுத்து
ஆயுள் முழுக்க அழுக விடும்
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு
ஜெயிச்சா தாலி கயிறு
மச்சி தோத்தா தூக்கு கயிறு

ஒத்த கடை ஒத்தகடை மச்சான் 
இவன் ஒத்த கண்ண ஒருத்தி மேல வெச்சான்
பிச்சிக்கிட்டு பிச்சிக்கிட்டு போனா
இவன் பித்துக்குளி பித்துக்குளி ஆனான்


ஹோய்... 
ஒத்த கடை ஒத்த கடை மச்சான்
நான் ஒத்த கண்ண ஒருத்தி மேல வைச்சேன்
ஓடி போன ஓடி போன பொண்ண
இப்ப ஒத்துக்கிட ஒத்துக்கிட வெச்சேன்
ஜெயிச்சா இன்பம் வரும்
தோத்தா ஞானம் வரும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்கை ஜவ்வு

எலியும் புலியடிக்கும்
புழுவும் படமெடுக்கும்
இதான் மச்சான் லவ்வு
இது இல்லா வாழ்கை ஜவ்வு
நாரும் பூவாகும்டா
மச்சி மோரும் பீராகும் டா
வெறும் நாரும் பூவாகும்டா
மச்சி மோரும் பீராகும் டா


Tuesday, March 18, 2014

நிமிர்ந்து நில் - நெகிழியினில்

படம்: நிமிர்ந்து நில் (2014)
இசை: G.V.பிரகாஷ்  
பாடியவர்கள்: ஹரிசரண், சைந்தவி 
பாடல்வரிகள்: மதன் கார்க்கி




ஹா... ஹா....
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட வழி சேர்த்திட
விரல் கோர்த்திடு உயிரே

நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்

நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்


ஹோ....ஓ  ஹோ....ஓ 
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

ஹே... பவழப் பாறை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்

உண்மையில் உன் உண்மையில்
என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில் 
தனிமையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கனக்கும்

ஹே... நெகிழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முள்ளை போலே நின்றேன்
நெருங்கி வரப் பார்க்கிறாய்


ஹோ....ஓ ஹோ....ஓ
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுதென்
மடமை உணர்ந்தேன்

மாற்றிட எனை மாற்றிட 
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய்
இதை எங்கு நான் உரைக்க

எனை ஏற்றிடு உனை ஊற்றிடு 
உயிரேற்றிடு உயிரே


நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உனை ஏன் தேடினேன்

ஹோ....ஓ ஹோ....ஓ
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...
ஓ ஓ... ஓ ஓ... ஹோ ஓ ஓ...
ஹோ ஓ ஓ... ஹோ ஓ ஓ...

Popular Posts