Wednesday, July 31, 2013

மூன்று பேர் மூன்று காதல் - ஆஹா காதல் கொஞ்சி

படம்: மூன்று பேர் மூன்று காதல் (2013)
இசை: யுவன்ஷங்கர்ராஜா
பாடியவர்கள்: நந்தினி ஸ்ரீகர்
பாடல்வரிகள்: நா.முத்துக்குமார்



ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்கின்றதே
வினா தாளில் வெற்றிடம் திண்டாடுதே
காதல் கேட்கும் கேள்வியா
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே


நதியில் விழும் இலை இந்த காதலா
கரையை தொட இத்தனை மோதலா
விழுந்தது நானா எழுந்திடுவேனா
எழுந்திடும் போதும் விழுந்திடுவேனா
உன்னை பார்ப்பதை நான் அறியேன்
உன்னை பார்கிறேன் வேறறியேன்
என்னுடன் நீயா உன்னுடன் நானா
நானே நீயா நீயே நானா
இது என்ன ஆனந்தமோ தினம் தினம் சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே


எதுவோ என்னை உன்னிடம் ஈர்த்தது
அது தான் உன்னை என்னிடம் சேர்த்தது
தொலைந்தது நானா கிடைத்திடுவேனா
கிடைத்திடும் போதும் தொலைந்திடுவேனா
பெண்கள் மனம் ஒரு ஊஞ்சல் இல்லை
ஊஞ்சல் தன்னால் அசைவதில்லை
இழுப்பது நீயா வருவது நானா
திசை அறியாது திரும்பிடுவேனா
காதலின் பொன் ஊஞ்சலில் அசைவது சுகம் சுகம்
ஆஹா காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே
ஆளை மிரட்டி கள்ளதனம் காட்டுதே


Sunday, July 28, 2013

தங்கமீன்கள் - ஆனந்த யாழை

படம்: தங்கமீன்கள் (2013)
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல் வரிகள்: நா.முத்துகுமார்




மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று

ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய்


தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேட்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்


உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பாக்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேக்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம்... தீட்டுகிறாய்


Thursday, July 25, 2013

பாலா - பூ பூவாய் புன்னகைக்கும்

படம் : பாலா (2002)
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் :  உன்னி மேனன், கங்கா
பாடல்வரிகள்: அறிவுமதி



ஆ... ஆ... ஆஆ
ஹா ஆ... ஆஆ... ஆ ஆ
ஆ ஆ ஆ... ஆ ஆஆ... ஆ
ஆஆஆ... ஆ ஆ ஆ...

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை


எங்கள் இல்லத்திலே இன்ப நாடகம்தான்
இங்கே தேவையில்லை தொலைக்காட்சி
எங்கள் உள்ளத்திலே தினம் பூ மழைதான்
நாங்கள் செல்வதில்லை மலர்காட்சி
மழை வந்தால் அதில் நனைவோம்
அன்னை துவட்டும் சுகமும் கிடைக்க
வெயில் வந்தால் அதில் அலைவோம்
தந்தை அரட்டும் இனிமை ரசிக்க
கால்கொண்ட ரோஜா துள்ளி துள்ளி வந்து
தூணுக்கு பின்னால் நின்று சிரிக்கிறதே

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே


ஆ... ஆ... ஆஆ
ஆ... ஆ... ஆஆ
ஆ... ஆ... ஆஆஆஆ

தாய் கட்டுகின்ற நூல் சேலையிலே
யார் போர்த்தயென்று அடம்பிடித்தோம்
மொட்டைமாடியிலே ஒரு தட்டினிலே
நெய் சோறு வச்சு உயிர் ருசித்தோம்
ஒரே ஒரே மின் விசிறி
அதன் அடியில் தூங்கி கிடைப்போம்
இன்னும் தந்தை தோளில்
சிறு குழந்தையாக இருப்போம்
பூமியில் சொர்க்கம் உள்ளதென்று சொன்னால்
வேறெங்கும் இல்லை அது எங்கள் இல்லமே...

பூ பூவாய் புன்னகைக்கும் இவள்
எங்கள் வீட்டு புது கவிதை
ஹே... தாலாட்ட தொட்டில் மட்டும் இல்லை
இவள் எங்கள் கை குழந்தை
புல்வெளிகளில் நீ போனால்
வெண்பனிதுளி கால் கீறும்
நம் இதயங்கள் நான்கோடும்
இருப்பதெல்லாம் ஒரு துடிப்பே


Wednesday, July 24, 2013

Thooral Ninnu Pochu - Bhoopalam Isaikkum

படம்: தூறல் நின்னு போச்சு (1982)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், உமா ரமணன்
பாடல் வரிகள்: முத்துலிங்கம்

Image result for Thooral Ninnu Pochchu



பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்
இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே

மாலை அந்திமாலை இந்த வேளை மோகமே

நாயகன் ஜாடை நூதனமே

நாணமே பெண்ணின் சீதனமே

மேகமழை நீராட தோகை மயில் வாராதோ


தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது... நநநநநநந


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே
பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ

பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவோ

மன்மதன் கோயில் தோரணமே

மார்கழி திங்கள் பூமுகமே

நாளும் இனி சங்கீதம்

பாடும் இவள் பூந்தேகம்

அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம்... நநநநநநந


பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்

இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே

பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்


Chembaruthi - Nila Kayum

படம்: செம்பருத்தி (1992)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S.ஜானகி
பாடல் வரிகள் : வாலி






நிலா காயும் நேரம் சரணம்
உலா போக நீயும் வரணும்

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்

பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும்

காண்பவை யாவுமே தேன்
அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்


தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து

தேவர் கூட்டம் பூ தூவி பாடும் நல்ல வாழ்த்து

கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும்

காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும்

நினைத்தால் இதுப் போல் ஆகாததேது


அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது


நெடு நாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்


மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட

மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட

அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும்

அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போகும்

நடக்கும் தினமும் ஆனந்த யாகம்


சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம்


அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்

அன்பே நீயே அழகின் அமுதே
அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்

பார்வையில் புது புது கவிதைகள் மலர்திடும்

காண்பவை யாவுமே தேன்

அன்பே நீயே அழகின் அமுதே

அன்பே நீயே அழகின் அமுதே

நிலா காயும் நேரம் சரணம்

உலா போக நீயும் வரணும்


Chembaruthi - Nadandhal

படம் : செம்பருத்தி (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல் வரிகள் : பிறைசூடன்





நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி...


இறக்கை உள்ள குஞ்சு இது கூடு ஒன்னும் தேவையில்லை

புத்தியுள்ள பிள்ளை இது கெட்டு நிற்கப்போவதில்லை
தாயொருத்தி இருந்தா ஒரு தந்தை உண்டு கேளம்மா
தந்தை ஒன்னு இருந்தா பெத்த பாட்டி இன்றி போகுமா
தெருவோரம் கிடந்தும் அநாதை இல்லை
உறவென்னை வெறுத்தால் தினம் தருவேன் தொல்லை
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி...


ஆனைகட்டி போரடித்த அப்பன் சுப்பன் காணவில்லை

அன்று முதல் இன்று வரை அக்கணமும் வாழவில்லை
வெட்ட வெட்ட வாழைதான் அது அள்ளித்தரும் வாழ்வைத்தான்
வெட்டி போட்ட மண்ணு தான் அதை கட்டிக்காத்தா பொன்னுதான்
நாம் வாழும் வாழ்வே அது சிலகாலம் தான்
உறவோடு வாழ்ந்தால் அது பூக்கோலம் தான்
கெட்டாலும் பட்டாலும் உன் பேரன் தான்
என்னடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி

நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
படுத்தால் ஆறடி போதும்
இந்த நிலமும் அந்த வானமும்
அது எல்லோருக்கும் சொந்தம்
அடி சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
சொல்லடி ஞானப்பெண்ணே
உண்மை சொல்லடி ஞானப்பெண்ணே
நடந்தால் இரண்டடி இருந்தால் நான்கடி
நடந்தால் இரண்டடி...

Sandhitha Velai - Pen Kiliye Pen Kiliye

படம்: சந்தித்த வேளை (2000)
இசை: தேவா
பாடியவர்கள்: உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள்: வைரமுத்து






தீப தீப தீப தீப தீப தீபபப... கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...
தீப தீப தீப தீப தீப தீபபப...கார்த்திகை
தீப தீப தீப தீப தீப தீபபப...

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு
பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
உள்மனம் பேசாமல் உண்மை தோன்றாது

வாய்மொழி எல்லாமே வாய்மை சொல்லாது
பெண்கிளி பொய் சொன்னால் ஆண்கிளி தூங்காது

ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று


பெண் கண்களே நாடகம் ஆடுமா
பெண் நெஞ்சமே பூடகம் ஆகுமா

யார் சொல்லியும் பெண் மனம் கேட்க்குமா
கை தட்டினால் மொட்டுக்கள் பூக்குமா

விடை கேட்டேன் கேள்வி தந்தாய்
இது புதிரான புதிர் அல்லவா

கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா

உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை

மூடாத பூவுக்குள் என்றும் தேன் இல்லை

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


என் நெஞ்சிலே ஆயிரம் ஓசைகள்
 உன்  காதிலே கேட்கவே இல்லையா

நீ ஆழி போல் அலைகளை ஏவினாய்
நான் கரையைப்போல் மௌனமாய் நேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அறிதாரமா

உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா

நிலவை பிழிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே அங்கே மீன் இல்லை
ஆண்கிளியே ஆண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண்கிளியே பெண்கிளியே பாடுகிறேன் ஒரு பாட்டு
என்  பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சைக்கொடி காட்டு


Saturday, July 20, 2013

நாயகன் - நீ ஒரு காதல்

படம்: நாயகன் (1987)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, K.S.சித்ரா
பாடல்வரிகள்: புலமைபித்தன்



Nayagan poster.jpg




நீ ஒரு காதல் சங்கீதம்
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
நீ ஒரு காதல் சங்கீதம்


வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது

காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது

இசை மழை எங்கும்...
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்


பூவைச்சூட்டும் கூந்தலில் எந்தன்
ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்

தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்

கடற்கரைக் காற்றே...
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு

மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே

நீ ஒரு காதல் சங்கீதம்

நீ ஒரு காதல் சங்கீதம்

வாய் மொழி சொன்னால் தெய்வீகம்

நீ ஒரு காதல் சங்கீதம்


சிங்காரவேலன் - இன்னும் என்னை என்ன

படம் : சிங்காரவேலன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல் வரிகள் : R.V.உதயகுமார்





இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்
இன்பம் இன்பம் சிங்கார லீலா...
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...


பாடி வரும் வான் மதியே பார்வைகளின் பூம்பனியே
தேவ சுக தேன் கனியே மோக பரிபூரணியே

பூவோடு தான் சேர இளங்காற்று போராடும் போது
சேராமல் தீராது இடம் பார்த்து தீர்மானம் போடு

புதுப்புது விடுகதை தொடத் தொட தொடர்கிறதே

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...
என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...
உன்னை சேர்த்தாள் பாவை இன்னும் அங்கு ஏதோ தேவை
சொல்லு சொல்லு சிங்கார வேலா...


தேன் கவிதை தூதுவிடும் நாயகனே மாயவனே
நூலிடையை ஏங்கவிடும் வானமுத சாதனனே

நீ தானே நான் பாடும் சுகமான ஆகாச வாணி
பாடாமல் கூடாமல் உறங்காது ரீங்காரத் தேனீ

தடைகளை கடந்து நீ மடைகளை திறந்திடவா

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே...

ஆஹா... என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே...

கைகள் தானாய் கோர்த்தாய்
கட்டி முத்தம் தேனாய் வார்த்தாய்

சொல்லு சொல்லு சிங்கார வேலா...

இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்
அன்பே... அன்பே... அன்பே... அன்பே...

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய்
முன்பே... முன்பே... அன்பே...


Popular Posts