Saturday, June 29, 2013

சகுனி - மனசெல்லாம் மழையே

படம்: சகுனி (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: சோனு நிகம், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்








மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே
என் நெஞ்சில் வந்து தங்கி சாரல் அடித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....
என் கண்ணில் வந்து நின்று என்னை பறித்தாய்
என்னாகும் உயிரே உயிரே....

இரவில் வந்தது சந்திரனா
என் அழகே வந்தது உன் முகம்தான்
வெண்ணிலவோ வளர்ந்ததும் தேய்ந்திடுமே
உன் அழகோ தேய்ந்திடாத வெண்ணிலா
மழையே மனம் உன்னாலே பூப்பூக்குதே
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


வானில் போகும் பறவைகளாய் நீயும் நானும் திரிந்திடலாம்
உலகையே மறக்கலாம்

ஹா... வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம்
பறக்கலாம் மிதக்கலாம்
காற்றாகி கைகோர்த்து போவோமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்
மனசெல்லாம் மழையே நனைகிறேன் உயிரே


காதலாகி கரைந்துவிட்டால் காலம் நேரம் மறந்திடுமே
வானிலை... மாறுமே...

ஏழு வண்ண வானவிலில் நூறு வண்ணம் தோன்றிடுமே
யாவுமே... மாயமே...
வெயிலோடு மழை வந்து தூறுமே

முகிலாகி அங்கும் இங்கும் ஊஞ்சல் ஆடுவோம்

மனசெல்லாம் மழையே...


தலைவா - யார் இந்த சாலையோரம்

படம்: தலைவா (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்


Thalaivaa film official poster.jpg



யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே

யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது

காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது


தீர தீர ஆசை யாவும் பேசலாம் 

மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம்

என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் 

இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் 

என்னாகிறேன் இன்று ஏதாகிறேன் 


எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன் 


எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது

அது பறந்தோடுது வானிலே

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது


மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே

அது மலையை விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே

வைரம் போல பெண்ணின் மனது உலகிலே

அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே

கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி


என் பாதையில் இன்று உன்காலடி


நேற்று நான் பார்ப்பதும் இன்று நீ பார்ப்பதும்

நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது

இன்று பேசாமல் கண்கள் பேசுது

நகராமல் இந்த நொடி நீள

எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

குளிராலும் கொஞ்சம் அனலாலும்

இந்த நெருக்கம் தான் கொல்லுதே

எந்தன் நாளானது இன்று வேறானது

வண்ணம் நூறானது வானிலே



Wednesday, June 26, 2013

சின்ன ஜமீன் - ஒரு மந்தாரப்பூ

படம்: சின்ன ஜமீன் (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ & K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி





ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா


நித்தம் நித்தம் நான் குளிக்கும் மஞ்சளுக்கு
ஒன்ன விட்டா யாருமில்ல காவலுக்கு

நெஞ்சுக்குள்ள உன்னை வச்சேன் பத்திரமா
நான் ரசிக்கத் தீட்டி வச்சேன் சித்திரமா

உன்னால ராத்திரி தூக்கம் கெட்டுப் போவுது

ஒத்தையில தூங்குனா என் உடம்பு நோவுது

ஒன்ன விட்டு அஞ்சு நிமிஷம் என்னால் வாழ ஆவாது

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா


வெத்தலைய பாக்கு வச்சு நான் கொடுப்பேன்
நீ சுவைச்சு மிச்சம் மீதி நான் எடுப்பேன்

செம்பெடுத்துப் பால் நிரப்பி நான் கொடுப்பேன்
நீ குடிச்ச மிச்சம் மீதி நான் குடிப்பேன்

ஒண்ணாகச் சேர்ந்துதான் சந்திரனைப் பாக்கணும்

உண்டான ஏக்கத்தை ரெண்டு பேரும் தீர்க்கணும்

நள்ளிரவில் நாம கலந்தா கோழி கூவக் கூடாது

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...
அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

மலையோரம் மாந்தோப்பு மாந்தோப்பில் பூங்காத்து
சுகமாக வீசும் சாயங்கால வேளையில்

ஒரு மந்தாரப்பூ வந்தா மந்திரமா ஹோ...

அவ முத்தம் ஒண்ணு தந்தா தந்திரமா

சிங்கம் II - புரியவில்லை இது

படம் : சிங்கம் II  (2013)
இசை : தேவிஸ்ரீபிரசாத்
பாடியவர்கள் : ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள் : விவேகா






புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை
அதை மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அது விழுந்த காரணம் தோனவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை


காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் ஆகவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை


ஹோ... சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் ஏதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை
புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை


Tuesday, June 25, 2013

தாலாட்டு பாடவா - வராது வந்த

படம் : தாலாட்டு பாடவா (1990)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : அருண் மொழி, S.ஜானகி
பாடல்வரிகள் : வாலி





முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
கலா தறாவ தம் சகம் விலாசி லோக ரக்ஷகம்
அனாயகைக நாயகம் வினாசி தேப்ர தைத்யகம்

நதாசு பாசு நாஷ்யகம் நமாமி தம் விநாயகம்
முதாக ராத்த மோதகம் சதா விமுக்தி சாதகம்
வராது வந்த நாயகன்.. ஒரே சிறந்த ஓர் வரன்


வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்
வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்
வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


தொடாமலும் படாமலும் உலாவும் காதல் வாகனம்
வராமலும் தராமலும் விடாது இந்த வாலிபம்

உன்னோடுதான் பின்னோடுதான் வந்தாடும் இந்த மோகனம்
கையோடுதான் மெய்யோடுதான் கொஞ்சாமல் என்ன தாமதம்

உன் பார்வை யாவும் நூதனம் பெண்பாவை நீயும் சீதனம்

உன் வார்த்தை அன்பின் சாசனம் பெண் உள்ளம் உந்தன் ஆசனம்

அள்ளாமலும் கிள்ளாமலும் தள்ளாடும் இந்த பூவனம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


கல்யாணமும் வைபோகமும் கொண்டாடும் நல்ல நாள் வரும்
அந்நாளிலே பொன்னாளிலே என் மாலை உந்தன் தோள் வரும்

சல்லாபமும் உல்லாசமும் கண் காணும் நேரம் சொபனம்
சொல்லமாலும் கொள்ளமாலும் திண்டாடும் பாவம் பெண்மனம்

இந்நேரம் அந்த ஞாபகம் உண்டாக நீயும் காரணம்

கண்ணார நாமும் காணலாம் செவ்வாழை பந்தல் தோரணம்

என் ஆசையும் உன் ஆசையும் அந்நாளில் தானே பூரணம்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்
தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்

வரம் தரும் உயர்ந்தவன் கரம் கரம் இணைந்தவன்
இவன் தலைவி நாயகன்

வராது வந்த நாயகன் ஒரே சிறந்த ஓர் வரன்

தராதரம் புரிந்தவன் நிரந்தரம் நிறைந்தவன்


காதலுக்கு மரியாதை - விழியில்

படம் : காதலுக்கு மரியாதை (1997)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: விஜய், பவதாரணி
பாடல்வரிகள் : பழனி பாரதி





விழியில் விழி மோதி இதயக்கதவு இன்று திறந்ததே...

இரவு பகலாகி இதயம் கிளியாகிப் பறந்ததே...
ஏ... காதல் நெஞ்சே யாரோடு சொல்வேன்...
வந்து போன தேவதை நெஞ்சை அள்ளிப் போனதே...
நெஞ்சை அள்ளிப் போனதே...

ஓ பேபி பேபி... என் தேவ தேவி
ஓ பேபி பேபி... என் காதல் ஜோதி
ஒரு பார்வை வீசிச் சென்றாள் ஹோ உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்
ஓ பேபி பேபி... என் தேவ தேவி


பார்வை விழுந்ததும் உயிர் வரை தேகம் நனைந்தது

ஸ்வாசம் முழுவதும் பூக்களின் வாசம் நிறைந்தது
நேற்று இந்த மாற்றம் எந்தன் நெஞ்சில் இல்லை
காற்று எந்தன் காதில் கவிதை சொல்லவில்லை
ஹோ... இருதயம் இருபக்கம் துடிக்குதே
அலைவந்து அலைவந்து அடிக்குதே
எனக்குள்ளே தான்....
ஓ பேபி பேபி... என் தேவ தேவி
ஓ பேபி பேபி... என் காதல் ஜோதி


ஜீவன் மலர்ந்தது புது சுகம் எங்கும் வளர்ந்தது
தேவன் எழுதிடும் தீர்ப்புகள் இதுதான் புரிந்தது
ஊரைக் கேட்கவில்லை பேரும் தேவையில்லை
காலம் தேசம் எல்லாம் காதல் வானியில்லை
ஓ... தேவதை தரிசனம் கிடைத்ததே
ஆலய மணி இங்கு ஒலித்ததே
என்னைத் தந்தேன்..

ஓ பேபி பேபி... என் தேவ தேவி
ஓ பேபி பேபி... என் காதல் ஜோதி
ஒரு பார்வை வீசிச் சென்றாள் ஹோ உலகம் விடிந்ததிங்கே
வார்த்தை பேசவில்லை எல்லாம் புரிந்ததிங்கே
இனி இதயமெல்லாம் தினமும் தினமும் மழை தான்
ஓ பேபி பேபி... என் தேவ தேவி
ஓ பேபி பேபி... என் காதல் ஜோதி


Friday, June 21, 2013

நீதானா அந்தக்குயில் - பூஜைக்கேத்த பூவிது

படம்: நீதானா அந்தக்குயில் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கங்கை அமரன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து






பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது


சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது


கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது



பாவாடை கட்டயில பாத்தேனே மச்சம்
ஆனாலும் நெஞ்சுக்குள்ள ஏதோ அச்சம்


நோகாம பாத்துப்புட்ட வேறென்ன மிச்சம்
கல்யாணம் கட்டிக்கிட்டா இன்னும் சொச்சம்


அச்சு வெல்லப் பேச்சுல ஆளத் தூக்குற
கொஞ்ச நேரம் பாருன்னா கூலி கேக்குற


துள்ளிப் போகும் புள்ளி மான மல்லு வேட்டி இழுக்குது
மாமன் பேசும் பேச்சக் கேட்டு வேப்பங்குச்சி இனிக்கிது


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
பூத்தது யாரத பாத்தது



ஊரெல்லாம் உன்னப் பத்தி வெறும் வாய மெல்ல
தோதாக யாருமில்ல தூது சொல்ல


வாய் வார்த்தை பொம்பளைக்கி போதாது புள்ள
கண் ஜாடை போல ஒரு பாஷையில்ல


சுத்திச் சுத்தி வந்து நீ சோப்பு போடுற
கொட்டிப் போன குடுமிக்கு சீப்பு தேடுற


என்னப் பார்த்து என்ன கேட்ட ஏட்ட ஏன்டி மாத்துற
கால நேரம் கூடிப் போச்சு மாலை வந்து மாத்துற


பூஜைக்கேத்த பூவிது நேத்துத்தான பூத்தது
அட பூத்தது யாரத பாத்தது

மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது


சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது


கொக்கு ஒண்ணு கொக்கி போடுது ஹோய்


பூஜைக்கேத்த பூவிது


நேத்துத்தான பூத்தது


பூத்தது யாரத பாத்தது



Thursday, June 20, 2013

என்றென்றும் காதல் - ஓ தென்றலே

படம்:  என்றென்றும் காதல் (1999)
இசை: மனோஜ் பட்நாகர்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அனுராதாஸ்ரீராம்





தந்தானே தந்தானே தன்னா
தந்தானே தந்தானே தன்னா
தந்தானே தந்தானே தன்னா

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேச வா

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
தாய் மண்ணின் வாசமெல்லாம் என்னோடு பேச வா
நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை
நான் நடக்கும் அந்த சாலை பூ உதிர்க்கும் அந்த சோலை
நலங்கள் சொல்லும் ஓ தென்றலே... ஓஓ தென்றலே...


முதல் காதல் முதல் முத்தம் ரெண்டும் மறக்குமா
ஓ... முதல் காதல் பூ முத்தம் ரெண்டும் மறக்குமா
நெஞ்சில் தங்கும் ஞாபகங்கள் வண்ணம் இழக்குமா
நான் இல்லை என்னிடம், நெஞ்சமோ உன்னிடம் 
இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா
இடம் காலம் மாறும் போதும் என் பாசம் மாறுமா
தழுவிக்கொள்ளு ஓ... தென்றலே... ஓ... தென்றலே...


கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
ஆ.. ஆ... கிளிகள் காணும் நேரத்தில் மீனாட்சி ஞாபகம்
நிலவில் நானும் பார்க்கின்றேன் நினைவில் ஆடும் பூமுகம்
தாய்மையின் சாயலை உன்னிடம் பார்க்கிறேன்
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை
என் நெஞ்சில் தவிக்கும் நினைவை என் கண்ணில் மிதக்கும் கனவை எடுத்துச்சொல்லு

ஓஓ தென்றலே என் தோளில் சாய வா
காதல் நெஞ்சின் ஆசைலெல்லாம் உன்னோடு பேசவா
ஓஓ தென்றலே... ஓஓ தென்றலே...  ஓஓ தென்றலே...

ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்...
ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்... ம்ம்ம்ம்...


Popular Posts