Thursday, January 31, 2013

Vazhvey Maayam - Vazhvey Maayam

படம் : வாழ்வே மாயம் (1982)
இசை : கங்கை அமரன்
பாடியவர்கள் : K.J. ஜேசுதாஸ்

பாடல்வரிகள் : வாலி

Image result for Vazhvey Maayam



வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


யாரார்க்கு என்ன வேஷமோ 
இங்கே  யாரார்க்கு எந்த மேடையோ
ஆடும் வரைக் கூட்டம் வரும்
ஆட்டம் நின்றால் ஓட்டம் விடும்
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
தாயாலே வந்தது தீயாலே வெந்தது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பிறந்தாலும் பாலை ஊற்றுவார்
இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்
உண்டாவது ரெண்டால தான்
ஊர்போவது நாளால தான்
கருவோடு வந்தது தெருவோடு போவது
கருவோடு வந்தது தெருவோடு போவது
மெய் என்று மேனியை யார் சொன்னது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்


நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

வேஷம் கலைக்கவும் ஓய்வு எடுக்கவும் வேளை நெருங்குதம்மா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பாதைகள் பல மாறியே வந்த பயணம் முடியுதம்மா
தாய் கொண்டு வந்ததை தாலாட்டி வைத்ததை
நோய் கொண்டு போகும் நேரமம்மா


Vazhvey Maayam - Vanthanam En

படம் : வாழ்வே மாயம் (1982)
இசை :  கங்கை அமரன்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வாலி


Image result for Vazhvey Maayam



வந்தனம் என் வந்தனம்

நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்
வந்தனம் என் வந்தனம்... ம்ம்ம்ம்...


ஒரு ராத்திரி ஒரு காதலி விளையாடத்தான் போதுமா

ஒரு சூரியன் பல தாமரை உறவாடினால் பாவமா
மனம் ஒரு வந்தினம் தினம் ஒரு பெண்ணிடம்
என் வானம் தன்னில் நூறு வெண்ணிலா
அந்த நூறில் ஒன்று இந்த பெண்ணிலா
sorry....
வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்


திரனதீந்தனன திரனதீந்தனன திரனன திரனன திரனன திரனன
திரனதீந்தனன திரனதீந்தனன திரன திரன திரன திரன ஹா..


பாதங்களில் சதங்கைகளின் நாதங்களைக் கேட்கிறேன்

பூப்பந்தலா பொன்னூஞ்சலா புரியாமல் நான் பார்க்கிறேன்
பழைய பால் புளித்தது புதிய தேன் இனித்தது
இளம் தென்றல் வீசும் தங்க மாளிகை
இதில் தங்கிப் போக என்ன வாடகை
Extremely sorry... one minute...

வந்தனம் என் வந்தனம்
நீ மன்மதன் ஓதிடும் மந்திரம்
புன்னகை சுந்தரம் பூமுகம் பொன்னிறம்
உன்னிடம் உள்ளமே அர்ப்பணம்
சமர்ப்பணம்


Wednesday, January 30, 2013

வாலி - ஓ சோனா... ஓ சோனா...

படம் : வாலி (1999)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து





நனனன... நனனன... நன... நனன...
நனனன... நனனன... நன... நனன... 
நனனன... நனனன... நன... நனன...
நனனன... நனனன... நன... நனன...


ஓ சோனா... ஓ சோனா...
ஓ சோனா... ஐ லவ் யூ... லவ் யூ டா...
ஓ சோனா... ஓ சோ...னா...
ஓ சோனா... ஐ லவ் யூ... லவ் யூ டா...
வாசல் வந்த வெண்ணிலவு அல்லவா
அவள் வயதுக்கு வந்த தங்கம் அல்லவா
வாழை தண்டு பூக்கள் தோட்டம் அல்லவா
அவளினை காதல் செய்த கதையினை சொல்லவா
ஓ சோனா... ஓ சோனா...
ஓ சோனா... ஐ லவ் யூ... லவ் யூ டா... ஆஆ... ஆஆ...

ஹே... ஹே... ஹே...

=============================================================
ஒரு நாள் அவ மவுத்ஆர்கன் ப்ளே பண்ணிட்டு இருந்தா
நான் உக்காந்து கேட்டுட்டு இருந்தேன்
உனக்கு ப்ளே பண்ண தெரியுமானு கேட்டா
நான் தெரியும்னு சொன்னேன்

ஏ... நிறுத்து, ஏன் தெரியும்னு சொன்ன
தெரியாதுனு சொல்ல வேண்டியது தானே

ஏன்... தெரியுறத தெரியுனுதானே சொல்லனும்
எனக்கு பொய் சொல்றதுலாம் பிடிக்காது

அய்யோ... மக்கு இந்த மாதிரி விஷயத்துல பொய் சொல்லலாம்
பொம்பளங்களுக்கு தெரியும்னு சொல்ற ஆம்பளங்க விட
தெரியாதுனு சொல்ற ஆம்பளங்க-ல தான் ரொம்ப பிடிக்கும்
நீ மட்டும் தெரியாதுனு சொல்லிருதனா
அவளே உனக்கு சொல்லி கொடுத்துருப்பா
அப்பிடி இப்பிடி ஆயி பெரிய ரொமான்ஸே நடந்துருக்கும்
நீ மிஸ் பண்ணிட்ட

இல்லையே அன்னைக்கு ரொமன்ஸ் நடந்துதே

நீ தெரியும்னு சொல்லி ரொமன்ஸ் நடந்துதா

ஆமா

எப்டி

அவ மவுத்ஆர்கன் கொடுத்தா நான் கிட்ட போயி வாங்கினேன்
வாங்கிட்டு, மவுத்ஆர்கன பாத்தேன், அவள பாத்தேன்
மவுத்ஆர்கன கீழ வச்சுட்டு
உன் மவுத்தே ஆர்கன் மாதிரிதான் இருக்கு
அப்புறம் எதுக்கு மவுத்ஆர்கன்-னு சொல்லி
கிஸ் பண்ணிட்டேன்
=============================================================

ஓ சோனா... ஓ சோ...னா...
ஓ சோனா... ஐ லவ் யூ... லவ் யூ டா...

ஹே... ஹே... ஹே...
ஹே... ஹே... ஹே...
ஒ யயய.... ஒ யயய ...
ஒ யயய.... ஒ... ஒ...
ஒ யயய.... ஒ யயய ...
ஒ யயய.... ஒ... ஒ...


ஒரு மாலை நேரத்தில் மழை கொட்டும் மாதத்தில்
அவள் நனைகையில் எந்தன் ஜீவன் கரைய கண்டேன்
அவள் பெண்மை வளைத்து அதை நாலாய் மடித்து
என் மடியென்னும் கூட்டுக்குள்ளே ஒளித்துகொண்டேன்
மழை நின்றும் பெண் எழவே இல்லை
என்ன செய்தோம் அது நினைவே இல்லை
என்ன வியப்பு... மாலை போல் என்னை அள்ளி தழுவி கொண்டாள்
மார்போடு ஏதோ பட்டு நழுவி கொண்டாள்
ஐ லவ் யூ சோனா... சோனா....


ஓ சோனா... ஓ சோ...னா...
ஓ சோனா... ஐ லவ் யூ... லவ் யூ டா...

ஹே... ஹே... ஹே... ஹே...
ஹே... ஹே... ஹே... ஹே...
ஹோ... ஹோ... ஹோ... ஹோ... ஹோ...
ஹோ... ஹோ... ஹோ... ஹோ... ஹோ...
ஹோ... ஹோ... ஹோ...

ஐ லவ் யூ... லவ் யூ...


சின்ன தம்பி - தூளியிலே ஆடவந்த

படம் : சின்ன தம்பி (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ
பாடல்வரிகள் : வாலி






ஒ... ஒஹோ... ஒஹோ...

ஒ... ஒஹோ... ஒஹோ... 

தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட
தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே


பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
பாட்டெடுத்து நான் படிச்சா காட்டருவி கண்ணுறங்கும்
பட்டமரம் பூ மலரும் பாறையிலும் நீர் சுரக்கும்
ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் படிச்சேன்
ஏழு கட்ட எட்டுக் கட்ட தெரிஞ்சா நான் படிச்சேன்
நான் படைச்ச ஞானமெல்லாம் யார் கொடுத்தா சாமி தான்
ஏடெடுத்துப் படிச்சதில்ல சாட்சியிந்த பூமி தான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
சோறுபோடத் தாயிருக்கா பட்டினியப் பார்த்ததில்ல
தாயிருக்கும் காரணத்தால் கோயிலுக்குப் போனதில்ல
தாயடிச்சு வலிச்சதில்ல இருந்தும் நானழுவேன்
நானழுக தாங்கிடுமா ஒடனே தாயழுவா
ஆக மொத்தம் தாய் மனசு போல் நடக்கும் பிள்ள தான்
வாழுகிற வாழ்க்கையிலே தோல்விகளே இல்லை தான்
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


தூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே
ஆழியில் கண்டெடுத்த அற்புத ஆணிமுத்தே
தொட்டில் மேலே முத்து மால
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட
வண்ண பூவா விளையாட சின்னத்தம்பி எச பாட


Sunday, January 27, 2013

7am Arivu - Yamma Yamma

படம் : ஏழாம் அறிவு (2011)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : S.P.பாலசுப்பிரமணியன், ஸ்வேதா மேனன்
பாடல்வரிகள் : கபிலன்





யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆண்ணோட காதல் கை ரேகை போல
பெண்ணோட காதல் கை குட்டை போல

கனவுக்குள்ள அவளை வச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாளே
புல்லாங்குழல கையில் தந்தாளே
என் முச்சுக்காத்தை வாங்கி போனாளே


பொம்பளைய நம்பி கெட்டு போனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்
இப்ப கடைசியில் நின்னேன்
முத்தெடுக்க போனா உன் மூச்சடங்கும் தன்னா
காதல் முத்தெடுத்த பின்னால்
மனம் பித்தமாகும் பெண்ணால்

அவ கைய விட்டு தான் போயாச்சு
கண்ணும் ரெண்டுமே பொய்யாச்சு
காதல் என்பது வீண் பேச்சு
மனம் உன்னாலே புண்ணா போச்சு
காதல் பாதை கல்லு முள்ளுடா
அத கடந்து போன ஆளே இல்லடா
காதல் ஒரு போத மாத்திரை
அத போட்டுக்கிட்டா மூங்கில் யாத்திரை

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா


ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹா ஹா ஹா... ஹா ஹா ஹா...
ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா ... ஹே ஹே ஹே...
ஹா ஹா ஹா ... ஹே ஹே ஹே...


ஓட்ட போட்ட முங்கில் அது பாட்டு பாட கூடும்
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும்
மனம் உன்னை பத்தி பாடும்
வந்து போனது யாரு ஒரு நந்தவன தேரு
நம்பி நோந்து போனேன் பாரு
அவ பூவு இல்ல நாரு

என்னை திட்டம் போட்டு நீ திருடாதே
எட்ட நின்னு நீ வருடாதே
கட்டெறும்ப போல் நெருடாதே
மனம் தாங்காதே தாங்காதே

வானவில்லின் கோலம் நீயம்மா
என் வானம் தாண்டி போனதெங்கம்மா
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம்பூச்சி சாயம் போச்சம்மா

எங்கேயும் காதல் - லோலிடா

படம்: எங்கேயும் காதல் (2011)
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: கார்த்திக், பிரசாந்தினி
பாடல்வரிகள்: தாமரை





லோலிடா... ஹ... லோலிடா...
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே

ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... 
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... ஆ...
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... 
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... ஆ...

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும் போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிடா... ஹ... லோலிடா...
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே

பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிடா... ஹ... லோலிடா...
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே



ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... 
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... ஆ...
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... 
ஹீம்... ஹீம்... ஹீம்... ஹீம்... ஆ...

கொட்டும் போதே மழை கொட்டா விட்டால் பிழை
வயசே வானமாக்கி பார்க்கிறாய்
பெண்கள் எல்லாம் செடி பற்றி கொள்ளும் கொடி
என்றே தப்பு தப்பாய் சொல்கிறாய்

நான் நால் பக்கம் நீர் சூழ்ந்த தீவல்லவா
யார் வந்தாலும் சாய்கின்ற தேரல்லவா
நான் அலை நுரை அடை காக்கும் கடல் அல்லவா
என் ஆகாய மதில் கூட பல வெண்ணிலா
ஒ... பொன்மஞ்சள் மஞ்சள் பெண்ணே எங்கே செல்கிறாய்
மின்னஞ்சல் போலே வந்து சென்று கொல்கிறாய்
நீ வேகம் காட்டி போகும்போது நோகுதே
உன் தூரம் கூட பக்கமாக மாறுதே
லோலிடா... ஹ... லோலிடா...
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே


தானாய் வந்தால் ருசி தள்ளி சென்றால் ரசி
ன்னும் வாழ்க்கை இன்பம் அல்லவா
முத்தம் என்றால் சிரி கட்டி கொண்டால் நெரி
கண்ணை மூடி கொண்டு கிள்ளவா

நீ சொல்லும் பல நூறில் நானில்லையே
உன் ஆழகான பல பூவில் தேனில்லையே
உன் வெல்லத்தில் நான் ஒன்றும் கரும்பில்லையே
நீ ருசி பார்க்க தலை தாய்தும் வரம்பில்லையே

ஒ... லோலிடா... ஹ... லோலிடா...
உன் கறை இல்லாத கண்கள் வெட்டி தள்ளுதே
உண்மையை சொல்லட்டா
உன் முலாம் பூசாத பேச்சில் எல்லாம் உள்ளதே


Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - யார் என்று

படம் : விஸ்வரூபம் (2013)
இசை: ஷங்கர் : இஷான்-லொய்
பாடியவர்கள் : சுராஜ் ஜெகன்
பாடல்வரிகள் : வைரமுத்து





எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்

நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

யார் என்று புரிகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா

யாருக்கும் அடிமையில்லை
இவன் யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கும் காயம் இல்லை

எவன் என்று நினைத்தாய் எதை கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில் வெளிப்படும் புதுரூபம்


நெருப்புக்கு பிறந்தான் நித்தம் நித்தம் வளர்ந்தான்
வேளை வந்து சேரும் போது வெளிப்படும் சுயரூபம்

விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோ...மே
விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோம்

சின்ன சின்ன அணுவாய் மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே வெளிப்படும் விஸ்வரூபம்

என்ன ரூபம் எடுப்பான் எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி எடுப்பான் விஸ்வரூபம்

யார் என்று புரிகிறதா இவன் தீயென்று தெரிகிறதா
தடைகளை வென்றே சரித்திரம் படைத்தவன்
ஞாபகம் வருகிறதா


யாருக்கும் அடிமையில்லை
இவன் யாருக்கும் அரசனில்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுதும்
காற்றுக்கும் காயம் இல்லை

ரூபம்... ரூபம்... ரூபம்...
ரூபம்... ரூபம்... ரூபம்...
ரூபம்... ரூபம்... ரூபம்... விஸ்வ...ரூபம்


விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோ...மே
விஸ்வல்லா...ஹூ ரக்... விஸ்வல்லா... மேதை
அவரது அடிமைகள் ஆனோம்


கோ - நெற்றிப் பொட்டில்

படம் : கோ (2011)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்
பாடியவர் : 
 நரேஷ் ஐயர்
பாடல் வரி : மதன் கார்க்கி






நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும்

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்


ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்

ஹே... மாற்றம் தேடியே... ப ப ப்... ப ப ப ப ப
தினமொரு நேற்றைத் தோற்கிறோம்... ப...  ப ப்... ப 
ஹே... வேற்றுப் பாதையில் பூமி சுற்றப் பார்க்கிறோம்
விளக்கேற்றும் சுழற்காற்றாய் செல்வோமே!!!

நெற்றிப் பொட்டில் பற்றிய எண்ணம்
எட்டுத் திக்கும் பரவ விரும்பும்
புற்றைக்கட்டும் எறும்புகள் நாங்கள்
சத்தம் போட்டால் உலகம் திரும்பும் திரும்பும்

ஏன் பிறந்தோம் என்றே இருந்தோம்
கண் திறந்தோம் அவ்வான் பறந்தோம்


Cafe beach - லும்... ஹோஒ... ஹோ ஹோ ஹோஒ....
கனவிலே கோட்டைக் கட்டினோம்... ஒ... ஹோ ஹோ ஹோஒ....
Facebook wall - லும்  எங்கள் கொள்கை தீட்டினோம்
இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே


Cafe beach - லும்... ஹோஒ... ஹோ ஹோ ஹோஒ....
கனவிலே கோட்டைக் கட்டினோம்... ஒ... ஹோ ஹோ ஹோஒ....
Facebook wall - லும்  எங்கள் கொள்கை தீட்டினோம்
இணைந்தோமே முனைந்தோமே பார்ப்போமே


Friday, January 25, 2013

வனஜா கிரிஜா - ஒத்தையிலே

படம்: வனஜா கிரிஜா (1994)
இசை: இளையராஜா
பாடியவர்கள் : K.S.சித்ரா
பாடல்வரிகள் : பஞ்சு அருணாசலம்







ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழி துணைக்கு நானும் வரவா
உங்க வாய் துணைக்கு பேச்சு தரவா
இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன


சாலையிலே இல ஆடுது சாமி வச்ச பூமரம்
உன்பேரத்தான் பாடுது அம்மன் கோவில் கோபுரம்
வானம் பாத்து நிக்காமலே வளர்ந்த பயிரு யாராலைய்யா
வாய்க்கால் நீரு வத்தாமலே ஓடி வருது உன்னாலைய்யா
இங்கு எல்லாமே நீ தானய்யா... நீ இல்லாம ஊரேதய்யா

ஆ... ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன


ஏறெடுத்து பாத்துட்டா ஏவல் செய்ய ஆள் வரும்
கண்ணசைச்சி காட்டிட்டா கைய கட்டி ஊர் வரும்
உந்தன் பக்கம் நானும் வர என்ன தவம் செஞ்சேனய்யா
ஒட்டுரவா நானிருப்பேன் இட்ட பணி செய்வேனய்யா
உந்தன் துணையாக நானில்லையா
இனி தனியாக நீயில்லைய்யா

ஆ... ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன
உங்க வழி துணைக்கு நானும் வரவா
உங்க வாய்... துணைக்கு... பேச்சு தரவா
இந்த கன்னி பொண்ணு காதில் கொஞ்சம் சொல்லிப்போடுங்க
ஒத்தையிலே நின்னதென்ன என் மன்னவனே மன்னவனே
சுத்தி நின்ன சுத்தம் எல்லாம் இப்போ எட்டி நின்னு பாப்பதென்ன



Popular Posts