Tuesday, April 30, 2013

காதல் வேதம் - மலையும் நதியும்

ஆல்பம்: காதல் வேதம் (1998)
இசை: உத்பால் பிஸ்வாஸ்
பாடியவர்: ஹரிஹரன், சுஜாதா
பாடல் வரி: வைரமுத்து






மலையும் நதியும் நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு

வானும் மண்ணும் நீரும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு

பாதி ஜீவன் பிரியும் போது மீதி வாழுமா
சகியே... பிரியாதிரு
பெண்மையே... பிரியாதிரு


முள்ளிலே கிடந்தாலும் ஆணி மேல் நடந்தாலும்
முள்ளிலே கிடந்தாலும் ஆணி மேல் நடந்தாலும்
கண்மணி மெய் தீண்டினால் காயங்கள் பூவாகும்
காதலி கண் ஜாடையில் சிலுவையும் சிறகாகும்
எந்த மாதமும் பௌர்ணமியே... தேயாதிரு
அங்குலமும்... நீங்காதிரு


வானும் மண்ணும் நீரும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் நீ... பிரியாதிரு
உயிரே... பிரியாதிரு



வண்டு வந்து தேனுண்டால் பூவின் வலி யார் கண்டார்
நேசம் மட்டும் நீ கண்டாய் நெஞ்சின் வலி யார் கண்டார்
பூக்களில் கண்ணீர் துளி பொங்குதே யார் தந்தார்
சிந்திய கண்ணீரிலும் உன் முகம் தானாடுது
காதல் ஒரு போர் போன்றது என்பதே நான் கண்டது
கண்கள் கேட்குதே காதலனே... பிரியாதிரு
கண் திரையில் மறையாதிரு


மலையும் நதியும் நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்
காற்று நின்றாலும் நீ... பிரியாதிரு
சகியே... பிரியாதிரு



சூரியனும் அணைந்தாலும் சந்திரனும் அவிந்தாலும்
சூரியனும் அணைந்தாலும் சந்திரனும் அவிந்தாலும்
உன் கண்ணில் சந்திரனுண்டு இரவோடு வலம் வருவேன்
மறு கண்ணில் சூரியனுண்டு பகலோடு வலம் வருவேன்
உந்தன் கண்களை காதலியே... மூடாதிரு
கையருகே... நீங்காதிரு


மலையும் நதியும் நிலமும் ஒரு நாள்
மறையும் காலம் வந்தாலும்

காற்று நின்றாலும் நீ... பிரியாதிரு

நீ என்றும்... பிரியாதிரு



Sunday, April 28, 2013

வசூல்ராஜா MBBS - காடு திறந்தே

படம்: வசூல்ராஜா MBBS (2004)
இசை: பரத்வாஜ்
பாடியவர்கள்: ஹரிஹரன், சாதனா சர்கம்
பாடல்வரிகள்: வைரமுத்து






காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது

ஆஆ... ஆஆஆ... ஆஆ... 

ஆஆ... ஆஆ...


காடு திறந்தே கிடக்கின்றது
காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது
அடடா... நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ
ஹோஓ...


நெஞ்சை விட்டு வந்த வார்த்தை ஒன்று

தொண்டைக்குள் சூழ் கொண்டதோ

உன்னை விட்டு உடல் மீளவில்லை

என் கால்கள் வேர் கொண்டதோ

பூமிக்கு வந்த பனித்துளி நான்
சூரியனே என்னைக் குடித்துவிடு

யுகம் யுகமாய் நான் எரிந்து விட்டேன்

பனித்துளியே என்னை அணைத்து விடு
உறவே... உயிரே... உணர்வே......
நெஞ்சில் வரும் காதல் வலி பூவில் ஒரு சூறாவளியோ 
ஹோ.... ஓ...

லலலல... லலலல...
லலலல... லல்லல்ல...
ஆஆ... ஆஆஆ... ஆஆ... 


சிற்றின்பத்தின் சின்ன வாசல் வழி

பேரின்பம் நாம் அடைவோம்

கால் தடங்கள் அற்ற பூமியிலே
காற்றாக நாம் நுழைவோம்

சித்திரை மாதத்தை நான் நனைத்து
கோடையில் உனக்கொரு குளிர் கொடுப்பேன்

மார்கழி மாதத்தை நான் எரித்து
முன்பனிக் காலத்தில் அனல் கொடுப்பேன்

அடியே... சகியே... சுகியே......
நெஞ்சில் வரும் காதல் வழி பூவில் ஒரு சூறாவளியோ 
ஹோ.... ஓ...

காடு திறந்தே கிடக்கின்றது

காற்று மலர்களை புடைக்கின்றது
கண்கள் திறந்தே கிடக்கின்றது
காதல் உயிர்களை உடைக்கின்றது

அடடா... நெஞ்சில் ஒரு காதல் வலி பூவில் ஒரு சூறாளியோ
ஹோ... ஹோ... ஹோஓ...

Sunday, April 21, 2013

பரதேசி - அவத்த பையா

படம் : பரதேசி (2013)
இசை : G.V.பிரகாஷ்
பாடியவர்கள் : யாசின், வந்தனா சீனிவாசன்
பாடல்வரிகள் : வைரமுத்து








அவத்த பையா செவத்த பையா அழிச்சாட்டியம் ஏனடா
கவச்சி மேலே ஆசப்பட்ட கரிச்சாங்குஞ்சு நானடா
சரட்டையில் பெஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெஞ்சிருக்க
கஞ்சியில் கரைஞ்ச உப்புக்கல்லு போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க
நம்ம பூமி வரண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு வாழ்க்கை நனைஞ்சிருக்கு

ஓஓஓ... அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அழிச்சாட்டியம் ஏனடி


வென்னி தண்ணி காச்சவா ஒன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில ஒன் காஞ்ச மூஞ்சி தேய்க்கவா

கொட்டான் குச்சியில் மேலு தேச்சி குளிக்க வையடி
ஏ ஆக்குள் பக்கம் மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி ஆறாதடி தொடாதடி

ஓஓஓ... அவத்த பையா செவத்த பையா அழிச்சாட்டியம் ஏனடா


கூத்து பாக்க போகலாம் கூட வாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன் கொஞ்சம் நெல்லு சோறு தாரியா

எள்ளு போட்ட ஈசல் தாரேன் உன்ன தருவியா
நான் முந்தி போட்ட மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா 
முத்தாடையா முட்டா பையா

அவத்த பொண்ணே செவத்த பொண்ணே அழிச்சாட்டியம் ஏன்னடி 
இழுத்து வச்சு கழுத்தறுக்க இளிச்சவாயன் நானடி
கயித்த அறுத்த கன்னுக்குட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்
கருவா சிறுக்கி சீலையில் இறுக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பலிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே பூனை விழுந்திருச்சே



Tuesday, April 16, 2013

உன்னை நினைத்து - என்னைத் தாலாட்டும்

படம் : உன்னை நினைத்து (2002)
இசை : சிற்பி
பாடியவர்கள் : உன்னிமேனன், சுஜாதா





என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீயென்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீயென்பதா
உன்னை நான் என்பதா

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா


நதியாக நீயும் இருந்தாலே நானும்
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்

இரவாக நீயும் நிலவாக நானும்
நீயிருக்கும் நேரம் வரை உயிர் வாழ்கிறேன்

முதல் நாள் என் மனதில் விதையாய் நீ இருந்தாய்
மறு நாள் பார்க்கையிலே வனமாய் மாறி விட்டாய்
நாடித்துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்
நெஞ்சில் நீ வாழ்கிறாய்

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா


பூலோகம் ஓர் நாள் காற்றின்றி போனால்
எந்தன் உயிர் உந்தன் மூச்சு காற்றாகுமே

ஆகாயம் ஓர் நாள் விடியாமல் போனால்
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே

அன்பே நான் இருந்தேன் வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய் பேசும் ஓவியமாய்
தீபம் நீயென்றால் அதில் நானே திரியாகின்றேன்
தினம் திரியாகின்றேன்

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீயென்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீயென்பதா
உன்னை நான் என்பதா

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைச் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா


உன்னை நினைத்து - யார் இந்த

படம் : உன்னை நினைத்து (2002)
இசை : சிற்பி
பாடியவர்கள் : ஹரிஹரன்





யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

பனிகூட உன் மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை


அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
ஒரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை 


Unnai Ninaithu - Sil Sil Sil Silala

படம்: உன்னை நினைத்து (2002)
இசை: சிற்பி
பாடியவர்: ஹரிஹரன், சுஜாதா
பாடல்வரிகள்: பா.விஜய்






சில் சில் சில் சில்லல்லா...
சில் சில் சில் சில்லல்லா...


சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ மின்னலா
சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ மின்னலா
நீ காதல் ஏவாளா 
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா 
பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நான் மின்னலா


நீயிருக்கும் நாளில் எல்லாம் 
இமயத்தின் மேலே இருப்பேன்
நீயுமிங்கு இல்லா நாளில் 
என் மீது இமயம் இருக்கும்

அகிம்சயாய் அருகில் வந்து 
வன்முறையில் இறங்குகிறாய்

சிற்பமே என்னடி மாயம் 
சிற்பியை செதுக்குகிறாய்

ஒரு சுவாசம் போதுமே 
நாமும் வாழலாம்

சில் சில் சில் சில்லல்லா
 சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நான் மின்னலா


காதல் ஒரு ஞாபக மறதி 
என்னையே நானும் மறந்தேன்
உன்னையே நீயும் மறந்தாய் 
மறந்ததால் ஒன்றாய் இணைந்தோம்

உன்னைப் போல் கவிதை சொன்னால்
உலகமே தலையாட்டும்

நம்மைப் போல் காதலர் பார்த்தால் 
தாஜ்மகால் கைதட்டும்

காதலெனும் புள்ளியில் பூமி உள்ளதே
சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ மின்னலா

சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நான் மின்னலா

நீ காதல் ஏவாளா 
உன் கண்கள் கூர் வாளா
நீ சாரலா இசை தூறலா 
பூஞ்சோலையானவளா

சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நான் மின்னலா

சில் சில் சில் சில்லல்லா 
சொல் சொல் நீ மின்னலா

Monday, April 15, 2013

கடல் - அடியே... அடியே... என்ன

படம்: கடல் (2013)
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: சித் ஸ்ரீராம்
பாடல்வரிகள்: வைரமுத்து







மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... எங்க நீ கூட்டிப் போற
என்ன எங்க நீ கூட்டிப் போற


பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறேனே
பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறேனே
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற

மீனத் தூக்கி றெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே எங்கிருந்து வந்தாயோ நீ
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற

ஓ... உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற

ஓ... பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி இழுத்துப் போறாயே நீ
சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில கலஞ்சு போவாயோ நீ
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற
அடியே... அடியே... என்ன எங்க நீ கூட்டிப் போற



Sunday, April 14, 2013

வானத்தைப்போல - எங்கள் வீட்டில் எல்லா நாளும்

படம்: வானத்தைப்போல (2000)
இசை: S.A.ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம், அருண்மொழி, சுஜாதா





எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள்
அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய்
சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை
நெஞ்சில் பூமழை...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை


எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான்
உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள்
அண்ணனை வாழ்த்துங்கள்...

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே
இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம

எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

Thursday, April 11, 2013

சேட்டை - அகலாதே அகலாதே

படம்: சேட்டை (2013)
இசை: S. தமன்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ் & மேகா
பாடல்வரிகள்: மதன்கார்க்கி




அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே
அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச்சுட முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே

ஏராளமாக காதல் தாராளமாக நானும்
வேறேன்ன கேட்கிறாய் ஓஓஓ...
நாவில் வீழும் தேனை நீ தின்ன தானே திணறுகிறாய்

ஹே அதிரடி பூவே நீ வரும் வரை
வாழ்வினில் ருசிகரம் ஏதும் இல்லை
தத்தளிக்கிறேன் தீ தெளிக்கிறாய்
நீ இங்கு தருவது பெருந்தொல்லை

தினம் தினம் வானம் சென்று
பறக்கும் விமானம் ஒன்று
உன்னை உன்னை மோதும் இப்போது
சுடச்சுட முத்தம் என்று
கிசு கிசு செய்தி ஒன்று
அடிக்கடி வந்தால் தப்பேது

காற்றிலே ஒரு பஞ்சை போல
காதலில் என் நெஞ்சம் வீழ
மேகமாய் நான் ஆனேன் உன்னாலே

அகலாதே அகலாதே அழகே நீ அகலாதே
என் கண்ணை விட்டு பெண்ணே அகலாதே
நீ இல்லை என்றால் வாழ்வே நிகழாதே


உதயம் NH4 - யாரோ இவன்

படம்: உதயம் NH4 (2013)
இசை: G.V.பிரகாஷ்
பாடியவர்கள்: G.V.பிரகாஷ், சைந்தவி
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்







யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்
யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

உன் காதலில் கரைகின்றவன்
உன் பார்வையில் உறைகின்றவன்
உன் பாதையில் நிழலாகவே வருகின்றவன்

என் கோடையில் மழையானவன்
என் வாடையில் வெயிலானவன்
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


எங்கே உன்னை கூட்டிச்செல்ல
சொல்வாய் எந்தன் காதில் மெல்ல

என் பெண்மையும் இளைப்பாறவே
உன் மார்பிலே இடம் போதுமே

ஏன் இன்று இடைவெளி குறைகிறதே

மெதுவாக இதயங்கள் இணைகிறதே

உன் கைவிரல் என் கைவிரல் கேட்கின்றதே

யாரோ இவன் யாரோ இவன்
என் பூக்களின் வேரோ இவன்
என் பெண்மையை வென்றான் இவன்
அன்பானவன்

நநந... நநந... நநந... நநந...
நநந... நநந... நநந... நநந...


உன் சுவாசங்கள் என்னைத் தீண்டினால்
என் நாணங்கள் ஏன் தோற்குதோ

உன் வாசனை வரும் வேளையில்
என் யோசனை ஏன் மாறுதோ

நதியினில் ஒரு இலை விழுகிறதே 

அலைகளில் மிதந்தது அது தவழ்கிறதே 

கரை சேருமா உன் கை சேருமா எதிர்காலமே 

நநந... தரரரா... ரரரரா... ரரரா...
தரரரா...  தரரரா... தரரரா... 

எனக்காவே பிறந்தானிவன் 
எனை காக்கவே வருவானிவன் 
என் பெண்மையை வென்றான் இவன் 
அன்பானவன் 
என் கோடையில் மழையானவன் 
என் வாடையில் வெயிலானவன் 
கண் ஜாடையில் என் தேவையை அறிவான் இவன்


Tuesday, April 9, 2013

காதல் ரோஜாவே - இளவேனில்

படம் : காதல் ரோஜாவே (1997)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா







ஹாஹா... ஹாஹா... ஹாஹா... ஹா...ஆ....
ஹாஹா... ஹாஹா... ஹாஹா... ஹா...ஆ....


இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
புரியாதோ இளம் பூவே உன் மோகம்
நெருப்பாக கண்ணில் நீர் வந்தது
பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே
காதல் ரோஜாவே பாதை மாறாதே
நெஞ்சம் தாங்காது.....ஓ.... ஓ....
இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது


என் மேனி நீ மீட்டும் பொன் வீணை என்று
அந்நாளில் நீ தான் சொன்னது
கையெந்தி நான் வாங்கும் பொன் வீணை இன்று
கை மாறி ஏனோ சென்றது
என் போன்ற ஏழை முள்ளில் விழும் வாழை
உண்டானக் காயம் ஆறக்கூடுமா
காதல் ரோஜாவே கனலை மூட்டாதே
நீ கொண்ட என் நெஞ்சை தந்தால் வாழ்த்துவேன்

இளவேனில் இது வைகாசி மாதம்
விழியோரம் மழை ஏன் வந்தது
பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப்போகுமோ தென்றலே

ஹாஹா......ஆஹாஹா........ஆஹாஹா....
ஹா...ஆ.... ஹா...ஆ.... ஹா...ஆ....
ஹா... ஆ.... ஹா...ஆ....

கண்ணான கண்ணே உன் வாய் வார்த்தை நம்பி
கல்யாண தீபம் ஏற்றினேன்
என் தீபம் உன் கோயில் சேராது என்று
தண்ணீரை நானே ஊற்றினேன்
உன்னோடு வாழ இல்லையொரு யோகம்
நான் செய்த பாவம் யாரைச் சொல்வது
காதல் ரோஜாவே நலமாய் நீ வாழ்க
நீ சூடும் பூமாலை வான் போல வாழ்கவே

இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்
பூஞ்சோலை இது உன்னோடு வாழும்
இமைக்காமல் எனை ஏன் பார்க்கிறாய்
பனி மூட்டம் வந்ததால் மலர் தோட்டம் நீங்கியே
திசை மாறிப் போகுமோ தென்றலே
காதல் ராஜாவே உன்னைக் கூடாமல்
கண்கள் தூங்காது ஆ... ஆ...
இளவேனில் இள ராகங்கள் பாடும்
இளங்காற்றே எங்கே போகிறாய்



Kadhal Rojave - Ninaitha Varam

படம் : காதல் ரோஜாவே (1997)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், சுனிதா சாரதி








நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு 
அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் 
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம் 
இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு 
அதை எடுத்துச் செல்லும் காற்று
கோல மேனி தான் 
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம் 
இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு 
அதை எடுத்துச் செல்லும் காற்று


நூறு நூறு ஆண்கள் உண்டு பார்க்கிறேன்
இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன்

வானில் நூறு கோடி உண்டு தாரகை
ஒளி வீசும் நிலவு போல எந்தன் காரிகை

ஆகாயம் காணாத தேவன்

ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா

நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு



பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம்
அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈந்த சீதனம்

சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா
அட தென்றல் மோதி இமயம் என்ன சரியுமா

வீணாக வாய் வார்த்தை ஏனோ

வேறாரும் என் அன்பை நெருங்க முடியுமா

நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு
இனிக்கும் ஸ்வரம் கேட்டு 
அதை எடுத்துச் செல்லும் காற்று

கோல மேனி தான் 
எந்தன் கனவில் தோன்றுமே
வரம் தாராதோ பூமரம் 
இனி தீராதோ காதல் தாகம்

நினைத்த வரம் கேட்டு 
மனம் படிக்கும் ஒரு பாட்டு

இனிக்கும் ஸ்வரம் கேட்டு 
அதை எடுத்துச் செல்லும் காற்று



Popular Posts