Saturday, December 29, 2012

Kadhalan - Ennavale Adi Ennavale

படம் : காதலன் (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
பாடல்வரிகள்: வைரமுத்து





என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று
உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்
எந்தன் கழுத்து வரை இன்று காதல் வந்து
இரு கண் விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும்
இன்று வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும்
உருவமில்லா ஒரு உருண்டையும் உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால்
ஒரு நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பது போல்
ஒரு கலக்கமும் தோன்றுதடி
இது சொர்கமா நரகமா சொல்லடி உள்ளபடி
நான் வாழ்வதும் விடைகொண்டு போவதும்
உந்தன் வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


கோகிலமே நீ குரல் கொடுத்தால்
உனைக் கும்பிட்டுக் கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு
உந்தன் கூந்தலில் மீன் பிடிப்பேன்
வெண்ணிலவே உனைத் தூங்க வைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
வருட வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
என் காதலின் தேவையை காதுக்குள் ஓதி வைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள்
புதுக் கவிதைகள் என்றுரைப்பேன்…

என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்


Friday, December 28, 2012

ஒரு கைதியின் டைரி - பொன் மானே

படம்: ஒரு கைதியின் டைரி (1985)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: உன்னி மேனன், உமா ரமணன்
பாடல்வரிகள்: வைரமுத்து






பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ
காதல் பால்குடம் கள்ளாய்ப் போனது
ரோஜா ஏனடி முள்ளாய்ப் போனது
பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ



காவல் காத்தவன் கைதியாய் நிற்கிறேன் வா

ஊடல் என்பது காதலின் கௌரவம் போ

ரெண்டு கண்களும் ஒன்று ஒன்றின் மேல் கோபம் கொள்வதா
லல... லலல... லல... லலல...லல... லலல...

ஆண்கள்... எல்லாம்... பொய்யின் வம்சம்

கோபம்... கூட... அன்பின் அம்சம்

நாணம் வந்தால் ஊடல் போகும் ஓஹோ...

பொன் மானே கோபம் ஏனோ
பொன் மானே கோபம் ஏனோ


உந்தன் கண்களில் என்னையே பார்கிறேன் வா

ரெண்டு பௌர்ணமி கண்களில் பார்கிறேன் வா

உன்னை பார்ததும் எந்தன் பெண்மைதான் கண்ணை திறந்ததே
லல... லலல... லல... லலல...லல... லலல...

கண்ணே... மேலும்... காதல்... பேசு

நேரம்... பார்த்து... நீயும்... பேசு

பார்வை பூவை நெஞ்சில் வீசு ஓஹோ....

பொன் மானே.... ஓஹோ....
கோபம்... ஓஹோ....
எங்கே... ஓஹோ.... ஓஹோ.... ஓஹோ....


பொன் மானே.... ஓஹோ....
கோபம்... ஓஹோ....
எங்கே... ஓஹோ.... ஓஹோ.... ஓஹோ....


பூக்கள் மோதினால் காயம் நேருமா
தென்றல் கிள்ளினால் ரோஜா தாங்குமா

ல... லல... லல... லல....
ல... லல... லல... லல....

Thanga Magan - Raathiriyil Poothirukkum

படம் : தங்கமகன் (1983)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
பாடல்வரிகள் : புலமைப்பித்தன்

Image result for thanga magan rajini




ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்

கைவிரலில் ஒரு வேகம் கண்ணசைவில் ஒரு பாவம்

வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்
வானுலகே பூமியிலே வந்தது போல் காட்டும்

ஜீவந‌தி நெஞ்சினிலே ஆடும் மோதும் ஓடும் புதிய அனுபவம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே

மன்னவனின் பசியாற மாலையிலே பரிமாற

வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே
வாழையிலை நீர் தெளித்து போடடி என் கண்ணே

நாதசுரம் ஊதும் வரை நெஞ்சம் இன்னும் கொஞ்சம் பொறுமை அவசியம்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ
ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே
சேலை சோலையே பருவ சுகம் தேடும் மாலையே

பகலும் உறங்கிடும்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

ராஜசுகம் தேடி வர  தூது விடும் கண்ணோ


ஆனந்தம் - என்ன இதுவோ


படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடல்வரிகள் : விவேகா








என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது
கண்களால் சுவாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிபாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ... காதலி
என் தலையணை நீயென நினைத்துக்கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன்அணைத்துக்கொள்வேன்
கோடை கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

*********************************************************
This part is in audio part only

புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ... காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி


Thursday, December 27, 2012

சிநேகிதியே - ராதை மனதில்


படம் : சிநேகிதியே (2000)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : சுஜாதா, சித்ரா, சங்கீதா சஜித்
பாடல்வரிகள் : வைரமுத்து





ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க


கொள்ளை நிலவடிக்கும் வெள்ளை ராத்திரியில்
கோதை ராதை நடந்தாள்
மூங்கில் காட்டில் ஒரு கானம் கசிந்தவுடன்
மூச்சு வாங்கி உறைந்தாள்
பாடல் வந்த வழி ஆடை பறந்ததையும்
பாவை மறந்து தொலைத்தாள்
நெஞ்சை மூடி கொள்ள ஆடை தேவை என்று
நிலவின் ஒளியை இழுத்தாள்
நெஞ்சின் ஓசை ஒடுங்கிவிட்டாள்
நிழலை கண்டு நடுங்கிவிட்டாள்
கண்ணன் தேடி வந்த மகள்
தன்னை தொலைத்து மயங்கிவிட்டாள்
தான் இருக்கின்ற இடத்தினில் இருதயம் காணவில்லை
எங்கே எங்கே சொல் சொல்
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுபிடிக்க

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க
கண்ணா வா கண்டுப்பிடிக்க


கண்ணன் ஊதும் குழல் காற்றில் தூங்கி விட்டு
காந்தம் போல இழுக்கும்
மங்கை வந்தவுடன் மறைந்து கொள்ளுவது
மாய கண்ணன் வழக்கம்
காடு இருண்டு விட கண்கள் சிவந்து விட
காதல் ராதை அலைந்தாள்
அவனை தேடி அவள் தன்னை தொலைத்து விட்டு
ஆசை நோயில் விழுந்தாள்
உதடு துடிக்கும் பேச்சு இல்லை
உயிரும் இருக்கும் மூச்சு இல்லை
வந்த பாதை நினைவு இல்லை
போகும் பாதை புரியவில்லை
உன் புல்லாங்குழல் சத்தம் வந்தால்
பேதை ராதை ஜீவன் கொள்வாள்
கண்ணா இங்கே வா  வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..

ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ
கண் ரெண்டும் தந்தியடிக்க கண்ணா வா கண்டுப்பிடிக்க


கன்னம் தீண்டியதும் கண்ணன் என்று
அந்த கண்ணி கண்கள் விழித்தாள்
கன்னம் தீண்டியது கண்ணன் அல்ல
வெறும் காற்று என்று திகைத்தாள்
கண்கள் மூடிக்கொண்டு கண்ணன் பேரை
சொல்லி கைகள் நீட்டி அழைத்தாள்
காட்டில் தொலைத்துவிட்ட கண்ணின்
நீர் துளியை எங்கு கண்டுப்பிடிப்பாள்
கிளியின் சிறகு வாங்கிக்கொண்டு
கிழக்கு நோக்கி சிறகடித்தாள்
குயிலின் குரலை வாங்கிக்கொண்டு
கூவி கூவி அவள் அழைத்தாள்
அவள் குறை உயிர் கரையும் முன்
உடல் மண்ணில் சரியும் முன்
கண்ணா கண்ணா நீ வா
கண்ணீரில் உயிர் துடிக்க கண்ணா வா உயிர் கொடுக்க..



நீதானே என் பொன்வசந்தம் - காற்றை கொஞ்சம்

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்







காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க

மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்
உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க


நேரில் பார்த்து பேசும் காதல் ஊரில் உண்டு ஏராளம்
நெஞ்சுனுள்ளில் பேசும் காதல் நின்று வாழும் எந்நாளும்
தள்ளி தள்ளி போனாலும் உன்னை எண்ணி வாழும்
ஒர் ஏழை எந்தன் நெஞ்சத்தை பாரடி
தங்க மெத்தை போட்டாலும் உன் நினைவில் எந்நாளும்
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா வா
மீதி வைத்த கனவை எல்லாம் பேசி தீர்க்கலாம்
ஆஹா... ஹே... ஹே... ஹே... ஹே...

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க


நேற்று எந்தன் கனவில் வந்தாய் நூறு முத்தம் தந்தாயே
காலை எழுந்து பார்க்கும் போது கண்ணில் நின்று கொண்டாயே
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில்
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி
உன்னை பார்த்த நாள்தொட்டு எண்ணம் ஓடும் தறிக்கெட்டு
இன்னும் என்ன செய்வாயோ  சொல்லடி
என்னை இன்று மீட்கத்தான் உன்னை தேடி வந்தேனே
மீட்டதொடு மீண்டும் நான் உன்னில் தொலைகிறேன்
யே... ஹே... ஹே... ஹே...


காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க
சுற்றும் பூமி நிற்க சொன்னேன்


சுற்றும் பூமி நிற்க சொன்னேன்


உன்னை தேடி பார்க்க சொன்னேன்
என்னை பற்றி கேட்க சொன்னேன்
என் காதல் நலமா என்று

காற்றை கொஞ்சம் நிற்க சொன்னேன்
பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
ஓடி வந்து உன்னை சந்திக்க
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன்
மேகம் அள்ளி வைக்க சொன்னேன்
கண்ணை மூடி உன்னை சிந்திக்க

Tuesday, December 25, 2012

சாட்டை - அடி ராங்கி ராங்கி


படம் : சாட்டை (2012)
இசை : இமான்
பாடியவர் : சந்தோஷ் ஹரிஹரன்
பாடல்வரிகள் : யுகபாரதி





அடி ராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...
அடி ராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...
ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறைஞ்ச
அய்யோ பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே


என்னானதோ ஏதானதோ ஒண்ணும் புரியாமலே
அல்லாடுறேன் உன்னாலே நான் சொல்ல தெரியாமலே
அன்னம் தண்ணி தேவையில்ல உன்ன பத்தி பேசுனா
அட்ட கத்தி கூட வெட்டும் உன்ன சொல்லி வீசுனா
அழகாலே நிதம் நீயே என்ன கட்டி வச்சு அடிக்கிறியே
என்ன ஓடா ஒடைக்கிறியே காடா கொளுத்துறியே
அடி ராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...
         

காப்பி தண்ணி போல என்ன கண்ணு ரெண்டும் ஆத்துதே
மூடி வச்ச ஆசை எல்லாம் பொத்துகிட்டு ஊத்துதே
மொத்ததுல என்ன நீயே பித்துக்குளி ஆக்குற
வெட்டிப் பய என்ன கூட புத்தகமா மாத்துற
உறி போல குறி பாத்து என்ன சில்லு சில்லா ஒடைக்கிறியே
என்ன நாரா கிழிக்கிறியே நல்லா கொழப்புறியே


அடி ராங்கி என் ராங்கி ராங்கி... நீ போற என் உசுர வாங்கி...

ஒறங்காம கிடக்கேனே நீ என்னதுக்கு கண்ணுக்குள்ள நொழஞ்ச
தவறேதும் புரியாம நீ என்னதுக்கு நெஞ்ச வந்து அறஞ்ச
என்ன பாடா படுத்துறியே பாயா சுருட்டுறியே


Sunday, December 23, 2012

நீதானே என் பொன்வசந்தம் - என்னோடு வா வா

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : கார்த்திக்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்






என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்

நீ... என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்லச்சண்டை.... போடுகிறாய்
தள்ளி நின்று... தேடுகிறாய்
ஹா... ஹா ஹா... அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா...
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
என்னோடு... வா வா என்று... சொல்லமாட்டேன்
போகமாட்டேன்...


கன்னம் தொடும் கூந்தல் ஒதுக்க நீ சாய்வது
என்னைக்கொஞ்சம் பார்க்கத்தானடி
கண்னை மூடி தூங்குவதைப்போல் நீ நடிப்பது
எந்தன் குரல் கேட்கத்தானடி
இன்னும் என்ன சந்தேகம் என்னை இனி
என்னாளும் தீயாக பார்க்காதடி..
சின்னப்பிள்ளை போல நீ அடம்பிடிப்பது என்ன சொல்ல
என்னை விட யாரும் இல்லை அன்பு செய்து உன்னை வெல்ல
சண்டை போட்ட நாட்களைத்தான் எண்ணிச்சொல்ல
கேட்டுக்கொண்டால் கணக்கும் பயந்து நடுங்கும்...

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
என்னோடு... வா வா என்று... சொல்லமாட்டேன்
போகமாட்டேன்...


காதலுக்கு இலக்கணமே தன்னால் வரும்
சின்ன சின்ன தலைக்கணமே
காதல் அதை பொறுக்கனுமே
இல்லையெனில் கட்டிவைத்து உதைக்கனுமே
உன்னுடைய கையாலே தண்டனையை
தந்தாலே என் நெஞ்சம் கொண்டாடுமே
கன்னத்தில் அடிக்கும் அடி முத்தத்தாலே வேண்டுமடி
மற்றதல்லாம் உன்னுடைய இதழ்களின் இஷ்டப்படி
எந்த தேசம் போன போதும் என்னுடைய சொந்த தேசம்
உனது இதயம் தானே...

என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்
செல்லச்சண்டை.... போடுகிறாய்
தள்ளி நின்று... தேடுகிறாய்
ஹா... ஹா ஹா... அன்பே என்னை தண்டிக்கவும்
புன்னகையில் மன்னிக்கவும் உனக்கு உரிமை இல்லையா...
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன்


நீதானே என் பொன்வசந்தம் - பெண்கள் என்றால்

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர் : யுவன் சங்கர் ராஜா
பாடல்வரிகள் : நா. முத்துக்குமார்





பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ... ஹோ...
கண்ணீர் வரும் பின்னாலே ஹோ... ஹோ...
என்ன சொல்லி என்ன பெண்ணே நெஞ்சம் ஒரு காத்தாடி
தத்தி தத்தி உன்னிடத்தில் தாவுதடி கூத்தாடி

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா


இதற்கு தானா ஆசை வைத்தாய் இதயம் கேட்குதே
இவளுக்காக துடிக்க வேண்டாம் என்று வெறுக்குதே
மதிக்கெட்ட என்னிடம் மனம் நொந்து சொன்னது
மரணத்தை போல் இந்த பெண் இவள் என்றது
தீயை போன்ற பெண் இவள் என்று தெரிந்து கொண்டதே என் மனம்
அன்பில் செய்த ஆயுதங்கள் பெண்ணிடத்தில் உண்டு ஏராளம்

பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா
பெண்ணின் காதல் கண்ணின் மைதானா
பெண்களின் காதலின் அர்த்தம் இனி
முள்ளின் மேல் தூங்கிடும் பனித்துளி
காலை வெயில் வந்தாலே
ஓடிப் போகும் தன்னாலே
காதல் வரும் முன்னாலே ஹோ... ஹோ...


நீதானே என் பொன்வசந்தம் - சற்று முன்பு பார்த்த

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர் : ரம்யா NSK
பாடல்வரிகள் : நா. முத்துக்குமார்




சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
ஒஹோ... உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ... ஒஹோ...
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக


ஏங்கி ஏங்கி நான் கேட்பது உன்னைத் தானடா
தூங்கி போனதாய் நடிப்பது இன்னும் ஏனடா
வாங்கி போன என் இதயத்தின் நிலைமை என்னடா
தேங்கி போன ஒர் நதியென இன்று நானடா
தாங்கி பிடிக்க உன் தோள்கள் இல்லையே
தன்னந்தனி காட்டில் எந்தன் காதல் வாட

சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக


சேர்ந்து போன நம் சாலைகள் மீண்டும் தோன்றுமா
சோர்ந்து போன என் கண்களின் சோகம் மாறுமா
ஓய்ந்து போன நம் வார்த்தைகள் மேலும் தொடருமா
காய்ந்து போன என் கன்னத்தில் வண்ணம் மலருமா
தேய்ந்த வெண்ணிலா திரும்ப வளருமா
தொட்டு தொட்டு பேசும் உந்தன் கைகள் எங்கே


சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக
நெஞ்சம் துடிப்பதும் மின்னல் அடிப்பதேன் சொல்
ஒஹோ... உன்னை பிரித்திட என்னை எரித்து நீ செல்
எல்லாம் நீ பொய் என்று சொல்வாயா ஒ... ஒஹோ...
சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக
காலம் இன்று காதல் நெஞ்சை கீறி போக


நீதானே என் பொன்வசந்தம் - முதல் முறை பார்த்த

படம் : நீதானே என் பொன்வசந்தம் (2012)
இசை : இளையராஜா
பாடியவர் : சுனிதி சவுகான்
பாடல்வரிகள் : நா. முத்துக்குமார்




முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்... சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்... மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்


நீந்தி வரும் நிலாவினிலே ஓர் ஆயிரம் ஞாபகங்கள்
நீண்ட நெடும் கனாவினிலே நூறாயிரம் தீ அலைகள்
நெஞ்சம் எழும் வினாக்களுக்கு என் பதிலென்ன பல வரிகள்
சேருமிடம் விலாசத்திலே உன் பார்வையின் முகவரிகள்
ஊடலில் போனது காலங்கள் இனி தேடிட நேரங்கள் இல்லையே
தேடலில் நீ வரும் ஓசைகள் அங்கு போனது உன் தடம் இல்லையே
காதல் என்றால் வெறும் காயங்களா அது காதலுக்கு அடையாளங்களா
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்
பொன்வசந்தம் பொன்வசந்தம்

முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்
இதயத்தில் ஏனோ ஓர் பாரம்
மழை வரும் மாலை நேரத்தில் மனதினில் வந்து போகிறாய்
விழியினில் ஏனோ ஈரம்
சில நேரம் மாயம் செய்தாய்... சில நேரம் காயம் செய்தாய்
மடி மீது தூங்க வைத்தாய்... மறுநாளில் ஏங்க வைத்தாய்
வெயிலோ மழையோ வலியோ சுகமோ ஏது நீ

நீதானே என் பொன்வசந்தம்
நீதானே என் பொன்வசந்தம்

Thursday, December 20, 2012

Love Birds - Naalai Ulagam

படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள் : வைரமுத்து





நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்

கண்களை திறந்து காலங்கள் மறந்து
கடைசியில் வானத்தை பார்த்துக்கொள்வேன்
மண்டியிட்டு அமர்ந்து மண்ணகம் குனிந்து
கடைசியில் பூமிக்கு முத்தம் வைப்பேன்
உன் மார்பினில் விழுந்து மை விழி கசிந்து
நீ மட்டும் வாழ தொழுகை செய்வேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே... என்ன செய்வாய்


நாளை உலகம்.....
நாளை உலகம் இல்லை என்றானால்
அன்பே என் செய்வாய்

ஒரு நூறாண்டு வாழ்ந்திடும் வாழ்வை
ஒரு நாளில் வாழ்ந்துக் கொள்வேன்
உன் இதழ்களின் மேலே இதழ்களை
சேர்த்து இரு விழி மூடிக் கொள்வேன்
மரணத்தை மறக்கும் மகிழ்ச்சியை தந்து
மரணத்தை மரிக்க வைப்பேன்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்
நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்


காதலின் தேவை இருக்கின்ற வரைக்கும்
பூலோகம் அழிவதில்லை

ஆயிரம் மின்னல் தெறிக்கின்ற போதும்
வானம் கிழிவதில்லை

கடல் நிலமாகும் நிலம் கடல் ஆகும்
நம் பூமி மறைவதில்லை

உடல்களும் போகும் உணர்வுகள் போகும்
உயிர் காதல் அழிவதில்லை
நாளை உலகம் இல்லை என்றானால்
உயிரே என்ன செய்வாய்

வானயும் வணங்கி மண்ணையும் வணங்கி
உனை நான் தழுவி கொள்வேன்
ஆயிரம் பூவில் படுக்கையும் அமைத்து
உனையும் அணைத்து உயிர் தரிப்பேன்
என்னுயிர் மண்ணில் பிரிகிற வரைக்கும்
உன்னுயிர் காத்து உயிர் துறப்பேன்

நாளை உலகம் இல்லை என்றானால்
அழகே என்ன செய்வாய்



கலைஞன் - தில்லுபருஜானே

படம் : கலைஞன் (1993)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ, K.S. சித்ரா
பாடல்வரிகள் : வாலி





தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா...
ஆஜா ஆஜா... அரரரே... ஆஜா ஆஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
 

மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்
ஆடைகட்டி வந்ததென்ன மெல்ல

க‌ண்ண‌ன் நீதானென்று மீரா வந்தாளிங்கு
காதல் கதை ஜாடைகளில் சொல்ல

மாலை கண் மயங்கும் வேளை மங்கை நதி

மங்கை நதி பொங்கி வரும் கங்கை நதி

ஏதோ காமம் செய்த சூதோ அச்சம்விட

அச்சம்விட அவனொரு பானம்விட

புது லீலைகள் தான் அதிகாலை வரை தான்
அடி காதலி கண்மணி
ஆஜா ஆஜா... கையணைக்க... ஆஜா ஆஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே


உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு
கூடுவிட்டு உன்னை தொட்டுக் கொஞ்சும்

சொன்னால் போதுமடி வாம்மா நானும் ரெடி
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்

வாங்கு தோளிரண்டில் தாங்கி சொல்லிக்கொடு

சொல்லிக்கொடு பாடங்களை அள்ளிக்கொடு

ஏக்கம் என்னையும் தான் தாக்கும் முத்தமிட்டு

முத்தமிட்டு கட்டிக்கொள்ளு கட்டில் மெட்டு

சிறு நூலிடைதான் ஒரு இன்பக்கதை தான்
உந்தன் தேவையை வாங்கிட
ஆஜா ஆஜா... என்ன வேணும்... ஆஜா அஜா...

தில்லுபருஜானே தில்லு தீவானே தித்திக்கிற தேனே
உள்ளபடி நானே உனைச் சேர்ந்தேனே ஒட்டியிருப்பேனே
போதும் இனி பேச்சு அனல் வீசுது மூச்சு
ஒரு மாதிரி ஆச்சுது
ஆஜா ஆஜா...
ஆஜா ஆஜா... அரரரே... ஆஜா ஆஜா...

ஆஹா... ஓஹோய்....
ஏ ஹே... ஆஹா...


ஹலோ - இந்த நிமிஷம்

படம் : ஹலோ (1999)
இசை : தேவா
பாடியவர்கள் : .ஹரிஹரன், K.S. சித்ரா
பாடலாசிரியர்: வைரமுத்து


Hello





இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலைவனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்


இப்படியே இப்படியே இருந்து விடக்கூடாதா
என் கண்ணில் உன் இமைகள் பொருந்தி விடக்கூடாதா ...ஆ

இப்படியே இப்படியே இறந்து விடக் கூடாதா
இப்படியே காலங்கள் உறைந்து விடக் கூடாதா

வெட்டவெளி பூவனமாய் மலர்ந்துவிடக் கூடாதா
வின்மீண்கள் நிலவாகா வளர்ந்துவிடக் கூடாதா

அன்பே உன் பக்கத்தில் அணைக்கின்ற வெப்பத்தில்
உயிருள்ள காலம் வரை ஊடாட கூடாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்


நிம்மதியே நிம்மதியே நெஞ்சை விட்டுப் போகாதே
என் உயிரை தீ குழியில் எறிந்து விட்டுப் போகாதே ...ஆ

பல்லவியே பல்லவியே பாடல் விட்டுப் போகாதே
வாசல் வரை வந்த நதி வற்றிவிடக் கூடாதே

மனம் கொண்ட நம்பிக்கை மாறிவிடக் கூடாதே
மார்போடு உன் சூடு ஆறிவிடக் கூடாதே

அன்பே உன் கண் சிந்தும் ஆனந்த கண்ணீரில்
என்னோடு என் உயிரும் கரைந்துவிடல் ஆகாதா

இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்
பாலை வனத்தில் ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு பால் நிமிஷம்
வாழ்வின் கடைசி அந்த நிமிஷம் வரைக்கும்
வாசனை வீசும் பூ நிமிஷம்
இந்த நிமிஷம் என் நிமிஷம்
எந்தன் வாழ்வில் பொன் நிமிஷம்


Wednesday, December 19, 2012

ப்ரியமானவளே - ஜுன் ஜுலை

படம் : ப்ரியமானவளே (2000)
இசை : S.A. ராஜ்குமார்
பாடியவர் : சங்கர் மகாதேவன், ஹரிணி
பாடல் வரி : வாலி





ஜுன் ஜுலை மாசத்தில் ரோஜாபூவின் வாசத்தில்
ஜுனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராசூட் கட்டிதான் விண்ணில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் ஹோர்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ப்ரீ கே.ஜி (Pre K.G) பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
இனிஷ்யல் கேட்டுதான் அது மெல்ல சிரிக்கும்

கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே... ஹே...
கிடைப்பான் கிடைப்பான் கிடைப்பான் ஹே... ஹே...

ஜுன் ஜுலை மாசத்தில் ரோஜாபூவின் வாசத்தில்
ஜுனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராசூட் கட்டிதான் விண்ணில் பறக்கும்


வானத்தின் உச்சிக்கு நிலவு வந்த நேரத்தில்
நீ என்னை தொட்டாக்கா பொண்ணு பொறப்பா

கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே... ஹே...

பூவெல்லாம் பூவெல்லாம் பூக்க போகும் நேரத்தில்
நான் உன்னை தொட்டாக்கா பையன் பொறப்பான்

மயிலும் மயிலும் ஒண்ணு கூடும் நேரத்தில்
நாம சேர்ந்தா அட ரெட்ட பிள்ளதான்

சீனத்தில் பொண்ணும்தான் அடி ஒரே நேரத்தில்
அஞ்சாறு பெத்தாளாம் அத தாண்ட வேண்டாமா

ஜுன் ஜுலை மாசத்தில் ரோஜாபூவின் வாசத்தில்
ஜுனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராசூட் கட்டிதான் விண்ணில் பறக்கும்


கல்லுக்கு கல்லுக்கு சிற்பி தொட்டா சந்தோஷம்
பொண்ணுக்கு புருஷந்தான் தொட்டா சந்தோஷம்

கிடைப்பா கிடைப்பா கிடைப்பா ஹே... ஹே...

மீனுக்கு மீனுக்கு பாசி கண்டா சந்தோஷம்
ஆணுக்கு அப்பா-வா ஆனா சந்தோஷம்

தொட்டில் கட்டி பாட்டு சொன்னா சந்தோஷம்

எட்டி நின்னு அத பாத்தா சந்தோஷம்

தாய்பாலு தரும்போது இந்த ஜென்ம சந்தோஷம்

இன்னொரு ஜுனியர் தந்தா ரொம்ப சந்தோஷம்

ஜுன் ஜுலை மாசத்தில் ரோஜாபூவின் வாசத்தில்
ஜுனியர் சூரியன் கையில் கிடைக்கும்
மனம் பாராசூட் கட்டிதான் விண்ணில் பறக்கும்
ஆரஞ்சு கன்னத்தில் ஆப்பிள் போன்ற வண்ணத்தில்
பால் நிலா வீட்டுக்குள் பாதம் பதிக்கும்
எந்தன் ஹோர்மோன்கள் எல்லாமே துள்ளி குதிக்கும்
ப்ரீ கே.ஜி (Pre K.G) பட்டர்ப்ளை நாளை கையில் கிடைக்கும்
இனிஷ்யல் கேட்டுதான் அது மெல்ல சிரிக்கும்



Tuesday, December 18, 2012

மனம் கொத்தி பறவை - போ போ


படம் : மனம் கொத்தி பறவை (2012)
இசை : D. இமான்
பாடியவர்கள் : ஜாவித் அலி
பாடல்வரிகள் : யுகபாரதி






போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணா போ


எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணாம் ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணா போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ போ போ நீ எங்க வேணா போ
போ போ போ நீ ஒன்னும் வேணா போ


தங்கமே என்னிடம் என்ன குற கூறு
வத்தியே விட்டதே கண்ணுக்குள்ளம் நீரு
ஓய்ந்திடாமலே சிறு வயதில் ஊஞ்சல் ஆடினோம்
மாறிடாமலே நடு வயதில் ஊரைக்கோடினோம்
ஒரு நாள் கூட நீங்காமல் கேலி பேசினோம்
நம்மை வேறாக பார்த்தோரை ஏனோ ஏசினோம் செல்வமே
போ போ போ நீ கூடு விட்டு போ
போ போ போ நீ கூறும் கெட்டு போ


ஓ... கல்லடி பட்டு நான் கண்டதில்ல காயம்
சொல்லடி பட்டு நான் நிற்பதென்ன நியாயம்
காதலோடு நீ இருந்திடவே காவலாகினேன்
கானலாகி நீ பறந்திடவே சாகபோகிறேன்
உன்னை சேராமல் வாழ்ந்தாலே ஏது நிம்மதி
எனை ஏற்காமல் போனாலே போடி உன் விதி உன் விதி

எனக்கு ஒன்னும் கவலை இல்லை போடி தங்கம் போ
நீ யார வேணா ஜோடி சேரு சோகம் இல்ல போ
போ போ போ நீ தாலி கட்டி போ
போ போ போ நான் வாழாவெட்டி போ
நூறு ஜென்மம் ராணி போல வாழ போற பூமானே
என்ன போல எவனும் இல்ல சொல்ல போற நீதானே
பச்சை கிளி நீயே விட்டு பறந்தாயே
சொல்லாம கொள்ளாம என்னோட இல்லாம தள்ளாட விட்டுட்டியே
போ... போ... போ...


Sunday, December 16, 2012

வேட்டையாடு விளையாடு - பார்த்த முதல்


படம் : வேட்டையாடு விளையாடு (2006)
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : உன்னி மேனன், பாம்பே ஜெயஸ்ரீ
பாடல்வரிகள் : தாமரை








பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே
உன் விழியில் வழியும் பிரியங்களை
பார்த்தே கடந்தேன் பகல் இரவை
உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன்


காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடி பிடிப்பது உந்தன் முகமே
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி
காட்சிக்குள் நிற்பது உன் முகமே

என்னை பற்றி எனக்கே தெரியாத பலவும்
நீ அறிந்து நடப்பது வியப்பேன்
உனை ஏதும் கேட்காமல் உனது ஆசை அனைத்தும்
நிறைவேற்ற வேண்டும் என்று தவிப்பேன்

போகின்றேன் என நீ பல நூறு முறைகள்
விடை பெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனை போக சொல்லி
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்
கதவோரம் நானும் நிற்க சிரிப்பாய்

காட்டி கொடுக்கிறதே கண்ணே காட்டி கொடுக்கிறதே
காதல் வழிகிறதே கண்ணில் காதல் வழிகிறதே

ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்

உன் அலாதி அன்பினில் நனைந்தபின்
நனைந்தபின் நானும் மழையானேன்


உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்
தூக்கம் மறந்து நான் உன்னை பார்க்கும் காட்சி
கனவாக வந்தது என்று நினைத்தேன்

யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதுக்கிட வேண்டும்

கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்

பார்த்த முதல் நாளே உன்னை பார்த்த முதல் நாளே
காட்சி பிழை போலே உணர்ந்தேன் காட்சி பிழை போலே
ஒரு அலையாய் வந்து என்னை அடித்தாய்
கடலாய் மாறி பின் என்னை இழுத்தாய்
என் பதாகை தாங்கிய உன் முகம்
உன் முகம் என்றும் மறையாதே

Popular Posts