Friday, November 30, 2012

என்னவளே - அடி காதல் என்பது

படம்: என்னவளே (2000)
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: ஹரிஹரன்
பாடல்வரிகள்: வைரமுத்து







Download this MP3



அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்
சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்
கண்மனி காதல் மிருகம் உனக்குள் இல்லையா

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்


இடி ஒலி கேட்கும் போதிலும் வெடி ஒலி கேட்கும் போதிலும்
காதல் மிருகம் விழிக்காது கண் மூடி தூங்குமே
பூக்கள் மலரும் ஒசையில் புடவையின் சரசர ஒசையில்
காதல் மிருகம் திடுக்கிட்டு தலை தூக்கி பார்க்குமே
ஒரு முறை விழித்தபின் உறங்காதம்மா
இறை தேடும் மிருகம் தான் என்னை திண்ணுமா
நாம் இரண்டு பேரும் அதை அடக்க வேண்டும்
கொஞ்சம் வலிமை சேர்க்க வாமா
கண்மனி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்


காதல் மிருகம் என்பது ரத்தம் சதையா கேட்குது
உன் கூந்தல் பூங்காவில் ஒரு பூவை கேட்குது
மீண்டும் மிருகம் தூங்கவே காடா மலையா கேட்குது
இடுப்பில் உன் சேலை கொண்ட மடிப்பொன்று கேட்குது
மிருகம் தவிக்குதே வழி சொல்லவா
மிருகத்தை வதைப்பது குற்றம் அல்லவா
மடி தாங்கி கொடுக்க மெல்ல தடவி கொடுக்க
அது தூங்கி போகும் அல்லவா
கண்மனி மிருகம் கொண்டு தெய்வம் செய்வோம்

அடி காதல் என்பது தூங்கும் மிருகம்
மனசுக்குள் படுத்திருக்கும்
அதன் இரண்டு கண்களும் தூங்குவதில்லை
ஒரு கண் விழித்திருக்கும்

சகியே அது சாதுவான ஒரு சைவ பூனை போல்
உள்ளே ஒளிந்திருக்கும்
அந்த வேளை வந்ததும் விஸ்வருபம் கொண்டு
வெளியே குதித்துவிடும்
கண்மனி காதல் மிருகம் உனக்குள் இல்லையா



என்னவளே - சின்ன சின்ன

படம்: என்னவளே (2000)
இசை: S.A. ராஜ்குமார்
பாடியவர்கள்: S.P. பாலசுப்பிரமணியம், கிருஷ்ணராஜ்
பாடல்வரிகள்: வைரமுத்து





சய்ய சக்கா... சய்ய சக்கா...
சம்ம சக்கா... சம்ம சக்கா... சய்ய சக்கா...


சய்ய சக்கா... சய்ய சக்கா... சம்ம சக்கா...
சம்ம சக்கா... சம்ம சக்கா... சய்ய சக்கா...

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு

ம்ம்ம்.... ம்ம்ம்....

எந்த பூவிலும் தேன் துளி உண்டு
எடுத்து குடிக்கும் அறிவுள்ள வண்டு
வாடி கிடக்க வருந்தி துடிக்க வண்டுக்கு நேரமில்லை
யே... இருட்டை பார்த்து மலைப்பது மடமை
இருட்டை நெருப்பால் எரிப்பது திறமை
ஆதவன் செய்யும் வேலை தன்னை அகலும் செய்து விடும்

மண்ணில் எட்டு நாள் மட்டும் வாழ்ந்திடும்
பட்டாம் பூசி அழுவது கிடையாது
உன் நெஞ்சிலே சாந்தி கொள்
உன் நிழலையும் துன்பம் வந்து நெருங்காது
வாழும் ஆளை சார்ந்தது வாழ்க்கை என்பது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு



சய்ய சக்கா... சய்ய சக்கா... சம்ம சக்கா...
சம்ம சக்கா... சய்ய சக்கா... சய்...

பூத்து சிரிக்கும் பூக்களிலோடு
பனியின் துளியாய் பல்லாங்குழி ஆடு
வானம் பொழியும் மழையின் ஷ்வரில் நாளும் நீராடு
ஆ... உன்னை கடந்து போகிற போது
ஊட்டி மேகம் திருடி கொண்டோடு
பூவை உடைக்கும் காற்றை போல புகுந்து விளையாடு

இந்த ஜீவிதம் ஆனந்தம்
கவலைகள் என்று ஒன்று கிடையாது
வெண்ணிலா தேயலாம்
வெளிச்சத்தை வெட்டி கொள்ள முடியாது
மனித ராசி ஒன்றுதான் சிரிக்க தெரிந்தது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

சின்ன சின்ன சுகங்கள் வாழ்க்கையிலே
அங்கும் இங்கும் கொட்டி கிடக்கு
கண்ணிரண்டும் செவியும் திறந்து வைத்தால்
சுற்றி சுற்றி இன்பம் இருக்கு
புயல் வந்து மையம் கொண்டால்
பூவில் இதழில் புன்னகை இருக்கு
உள்ளம் பார்க்கும் பார்வை தானே இன்பம் என்பது

ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச
ச நி ச க ச நி ச... ச நி ச க ச நி ச...
ச நி ச ம க ம ரி க ரி க ச ரி ச நி ச

Thursday, November 29, 2012

Poonthotta Kaavalkaaran - Seenthiya Venmani


படம்: பூந்தோட்ட காவல்காரன் (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J. ஜேசுதாஸ், P. சுசீலா
பாடல்வரிகள்: கங்கைஅமரன்





சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


பெண்ணென்னும் வீட்டில் நீ செய்த யாகம்
கண் மூடிப்பார்த்தேன் எங்கும் இன்பம்

அன்பெனும் ஆற்றில் நீராடும் நேரம்
அங்கங்கள் யாவும் இன்னும் எண்ணும்

இன்றைக்கும் என்றைக்கும் நீ எந்தன் பக்கத்தில்

இன்பத்தை வர்ணிக்கும் என்னுள்ளம் சொர்க்கத்தில்

மெல்லிய நூலிடை வாடியதேன்
மன்மத காவியம் மூடியதேன்

அள்ளியும் கிள்ளியும் ஆயிரம் ஆசைகள்
அன்பெனும் கீர்த்தனை பாடியதேன்

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


தாய்தந்த பாசம் தந்தை உன் வீரம்
சேய் கொள்ள வேண்டும் அன்பே அன்பே

காலங்கள் போற்றும் கைவந்து காக்கும்
என் பிள்ளை தன்னை இங்கே இங்கே

வீட்டுக்கும் நாட்டுக்கும் நான் பாடும் பாட்டுக்கும்

எத்திக்கும் தித்திக்கும் என் இன்ப கூட்டுக்கும்

என் மகன் காவிய நாயகனே
என் உயிர் தேசத்து காவலனே

வாடிய பூமியில் கார்முகிலாய்
மழை தூவிடும் மானிடன் என் மகனே

சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு என் பொன்னம்மா
சேலாடும் கண்ணில் பாலூறும் நேரம்
செவ்வானம் எங்கும் பொன் தூவும் கோலம்
சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு என் கண்ணம்மா
செந்நிற மேனியில் என் மனம் பித்தாச்சு


Wednesday, November 28, 2012

இதயம் - இதயமே இதயமே


படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வாலி






இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...


பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...


என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...

இதயம் - பூங்கொடி தான்


படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P பாலசுப்பிரமணியம்
பாடல்வரிகள்: வாலி








பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து.... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்?
அது தானே குடந்தன்னில் எரிகின்ற தீபம்
மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்
மழை நீரைப் பொழியாமல் இருக்கின்ற மேகம்
சிலருக்கு சில நேரம் துணிச்சல்கள் பிறக்காது
துணிச்சல்கள் பிறக்காமல் கதவுகள் திறக்காது
காட்டாத காதலெல்லாம் மீட்டாத வீணையைப் போல்
ஓ... ஓ... ஓ........ ஓ... ஓ... ........

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா


தாய் கூட அழுகின்ற பிள்ளைக்குத் தானே
பசி என்று பரிவோடு பாலூட்ட வருவாள்
உன் வீட்டுக் கண்ணாடி ஆனாலும் கூட
முன் வந்து நின்றால் தான் முகம் காட்டும் இங்கே
மனதுக்குள் பல கோடி நினைவுகள் இருந்தாலும்
உதடுகள் திறந்தால் தான் உதவிகள் பெறக்கூடும்
கோழைக்குக் காதலென்ன? ஊமைக்குப் பாடலென்ன?
ஓ... ஓ... ஓ........ ஓ... ஓ... ........

பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பாட்டெடுக்க தாமதிக்க
வாடைக் காற்று பூப்பறித்து... போனதம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா
பூங்கொடி தான் பூத்ததம்மா
பொன்வண்டு தான் பார்த்ததம்மா

Tuesday, November 27, 2012

லவ் பேர்ட்ஸ் - மலர்களே மலர்களே


படம் : லவ் பேர்ட்ஸ் (1996)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : ஹரிஹரன், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து





மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழி வெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்... வா...ஆ


மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து
மார்பில் ஒளிந்து கொள்ள வா வா

மார்பில் ஒளிந்து கொண்டால் மாரன் அம்பு வரும்
கூந்தலில் ஒளிந்து கொள்ள வரவா

என் கூந்தல் தேவன் தூங்கும் பள்ளி அறையா அறையா?
மலர் சூடும் வயதில் என்னை மறந்து போவது தான் முறையா?

நினைக்காத நேரமில்லை காதல் ரதியே ரதியே
உன் பெயரை சொன்னால் போதும் நின்று வழி விடும் காதல் நதியே

என் சுவாசம் உன் மூச்சில் உன் வார்த்தை என் பேச்சில்

ஐந்தாறு நூற்றாண்டு வாழ்வோம் என் வாழ்வே வா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா
உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழிவெள்ளம்
விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்
கண்ணோடும் நீ தான்... வா..


பூவில் நாவிரிந்தால் காற்றில் வாய் திறந்தால்
காதல் காதல் என்று பேசும்

நிலா தமிழ் அறிந்தால் அலை மொழி அறிந்தால்
நம் மேல் கவி எழுதி வீசும்

வாழ்வோர் வளர்பிறை தானே வண்ண நிலவே நிலவே
வானோடு நீலம் போல இணைந்து கொண்டது தான் உறவே

உறங்காத நேரம் கூட உந்தன் கனவே கனவே
உணோடு உயிரை போல உறைந்து போனது தான் உறவே

மறக்காது உன் ராகம் மரிக்காது என் தாகம்

உனக்காக உயிர் வாழ்வேன் வா என் வாழ்வே வா
மலர்களே மலர்களே இது என்ன கனவா
மலைகளே மலைகளே இது என்ன நினைவா


உருகியதே... எனதுள்ளம்
பெருகியதே... விழி வெள்ளம்

விண்ணோடும் நீ தான்
மண்ணோடும் நீ தான்

கண்ணோடும் நீ தான்... வா...

Monday, November 26, 2012

என்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு


படம் : என்றும் அன்புடன் (1992)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : மனோ
பாடல்வரிகள்: வாலி






ஆ... ஆ... ஆ... 
ஆஆ... ஆஆஆ...  ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆஆ... 
ஆஆ... ஆஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆ... ஆஆஆ... 

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்


துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பதை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்


அன்னை மடிதனில் சில நாள்... அதை விட்...

அன்னை மடிதனில் சில நாள்
அதை விடுதொரு சில நாள்
தின்ணை வெளியினில் சில நாள்
உண்ண வழியின்றி சில நாள்
நட்பின் அரட்டைகள் சில நாள்
நம்பி திரிந்ததும் பல நாள்
கானல் நீரினில் சில நாள்
கடல் நடுவிலும் சில நாள்
கன்னி மயக்கதில் திருநாள்
கையில் குழந்தையும் அதனால்
ஓடி முடிந்தது காலங்கள் காலங்கள்
பூங்கொடியே…

துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்



துள்ளும் அலையென அலைந்தேன்
நெஞ்சில் கனவினை சுமந்தேன்
வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தேன்
வானம் எல்லை என நடந்தேன்
காதல் வேள்விதனில் விழுந்தேன்
கேள்விக்குறி என வலைந்தேன்
உன்னை நினைத்திங்கு சிரித்தேன்
உண்மை கதைதனை மறைத்தேன்
பதில் சொல்லிட நினைத்தேன்
சொல்ல மொழியின்றி தவித்தேன்
வாழ்கின்ற வாழ்வெல்லாம் நீர்க்குமிழ் போன்றது
பூங்கொடியே...


துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
காலங்கள் ஓடுது பூங்கொடியே பூங்கொடியே
இன்பதை தேடுது பூங்கொடியே பூங்கொடியே
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்
துள்ளி திரிந்ததொரு காலம்
பள்ளி பயின்றதொரு காலம்


ஆயுத எழுத்து - சண்ட கோழி கோழி

படம் : ஆயுத எழுத்து (2004)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : A.R.ரஹ்மான், மதுஸ்ரீ
பாடல்வரிகள்: வைரமுத்து


http://i298.photobucket.com/albums/mm253/blogspot_images/Ayutha%20Ezhuthu/Aaythaezhuthu.jpg



ஹ்ம் ஹ்ம்மா... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா...
ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா ஹ்ம்...
ஹ்ம் ஹ்ம்மா... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா...
ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா ஹ்ம்...
ஹ்ஹ்ஹ்... ஹ்ம் ஹ்ம்மா... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா ஹ்ம்...

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்சா நெஞ்சுகுள்ளே கய்ய முய்யா
நீ ரெண்டு முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்சா தள்ளி படுமைய்யா
ரெண்டு முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்சா தள்ளி படுமைய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... ஆ...
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... யா...
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா


வாங்கி போட்டேன் வெத்தலை செவக்கலை சாமி
வாயி முத்தம் குடுத்தா செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோனும் நல்ல வழி காமி
ஓ... ஒட்டு திண்ண மேலே தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே வளரட்டும் வயிரு
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா அய்யா... ஆ...
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்சா நெஞ்சுகுள்ளே கய்ய முய்யா


ஒய்... ஒய்... ஒய்... ஒய்... ஒய்... ஒய்... ஒய்...ஒ.... ஒ....
ஒய்... ஒய்... ஒய்... ஒய்... ஒ.... ஒ....
ஒய்... ஒ.... ஒ... ஒய்... ஒய்... ஒ.... ஒ....
ஒய்... ஒய்... ஒய்... ஒய்... ஒய்...  ஒ.... ஒ....
ஒ.... ஒ.... ஒய்... ஒய்... ஒய்...  ஒய்... ஒய்... ஒ.... ஒ....
ஒ.... ஒய்... ஒய்... ஒய்... ஒ.... ஒ.... ஒ....
ஒ.... ஒய்... ஒய்... ஒய்... ஒ.... ஒ.... ஒ....

மச்சு வீடு வேணாம் மெட்டு கட்டு போதும்
மெத்தையேதும் வேணாம் ஒத்த பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து ராத்திரிக்கு போதும்
ஓ.. சைவ முத்தம் கொடுத்தா ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு செத்து போக மாட்டேன்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா  அய்யா... யா...
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

ஹ்ம் ஹ்ம்மா... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா...
ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... 
ஹ்ம் ஹ்ம்மா... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா...
ஹ்ம் ஹ்ம்மா.... ஹ்ம்மா... ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்...


கற்பூர முல்லை - பூங்காவியம்


படம் : கற்பூர முல்லை (1991)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : K.J.ஜேசுதாஸ், P.சுசீலா & K.S.சித்ரா
பாடல்வரிகள்: வாலி





பூங்காவியம் பேசும் ஓவியம்
பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்


பாட்டுதான் தாலாட்டுதான் கேட்கக்கூடும் என நாளும்
வாடினாள் போராடினாள் வண்ணத்தோகை நெடுங்காலம்
தாய் முகம் தரிசனம் தரும் நாள் இது
சேய் மனம் உறவெனும் கடல் நீந்துது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
பாசம் மீறும்போது பேசும் வார்த்தை ஏது
ஓ... ஓஓஓஓ... மயக்கத்தில் மனம் சேர்ந்தது


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ


யார் மகள் இப்பூமகள் ஏது இனி இந்தக் கேள்வி
கூட்டிலே தாய் வீட்டிலே வாழும் இனி இந்தக் குருவி
பாடலாம் தினம் தினம் புது கீர்த்தனம்
நாளெல்லாம் தளிர் விடும் இந்தப் பூவனம்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
வானம் பூமி வாழ்த்தும் வாடைக் காற்றும் போற்றும்
ஓ... ஓஓஓஓ... புதுக்கதை அரங்கேறிடும்


பூங்காவியம் பேசும் ஓவியம்
ஆனிப்பொன் தேரோ ஆரிரோ ஆரோ
வெள்ளிப்பன்னீரோ ஆரிரோ ஆரோ
பூங்காவியம் பேசும் ஓவியம்

Friday, November 23, 2012

இதயம் - பொட்டு வைத்த

படம்: இதயம் (1991)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ்
பாடல்வரிகள்: வாலி





பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காத்து பனி காத்து
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ

பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா


Thursday, November 22, 2012

Iruvar - Hello Mister Ethirkatchi

படம் : இருவர் (1997)
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர் : ஹரிணி
பாடல் வரி : வைரமுத்து




ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு
காதலா காதலா உனை நான் விடமாட்டேன்
கைத்தளம் பற்றுவேன் பிரிய விடமாட்டேன்
கண்கள் மீனாட அழகு மீதாட விடவே விடமாட்டேன்
ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு


கண்ணை நான் பிரிந்தால் காதல் பூ உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப்போர் மூளுமே
நீ என்னை மறந்தால் நில்லாமல் மறைந்தால்
என் கண்கள் பாலைவனமாகுமே
பருவங்கள் சந்தித்தால் பிரிவொன்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என்னாளும்
கம்பன் பார்த்தால் காவியம் உருவாகும்

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு


மண்ணை வேர்கள் பிரிந்தாலும்
விண்ணை நீலம் பிரிந்தாலும்
கண்ணை மணிகள் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்
சங்கம் தமிழைப் பிரிந்தாலும்
சத்தம் இசையைப் பிரிந்தாலும்
தாளம் சுருதியைப் பிரிந்தாலும்
உனை நான் பிரியேன்

உன்னோடு வாழத்தான் என் அன்னை பெற்றாலோ
உன்னோடு சேரத்தான் விதி மன்னன் இட்டானோ
உன்னைப் பார்த்த நாள் தான் பொன் நாளோ

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு
காத்து காத்து நாளாச்சு பதினெட்டு வயசாச்சு

ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி
கேள்விக்கு பதிலும் என்னாச்சு

பூக்களை பறிக்காதீர்கள் - அடி அம்மாடி


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal




Download this MP3


தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
தோழிக்கு தான் கல்யாணம்... ஊரெல்லாம் கும்மாளம்
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
சாமி மேல சத்தியமா... மால மாத்து பக்குவமா
மல மேல வாழும் மகராசி வாழ்தனும்
சிலை ஏறி வாழும் செல்லியம்மா வாழ்தனும்

யே... யே.... யே..... யே யே யே....
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


சந்தோச ஊஞ்சலிலே சதிராடும் பொன் மயிலே

ஆ... ஆ... ஆ... ஆ...

கல்யாண ஜோரினிலே காலும்தான் தரையில் இல்லை
சொந்தங்களை பாத்து சுற்றங்களை சேத்து நீ சிரிக்க
வாழ்த்துறத கேட்டு வசந்தமா பூத்து நீ குலுங்க
புது போதையில் துள்ளும் மதி
வாழ்க்கை பாதைக்கு சொல்வேன் சேதி
காணும் உலகத்தில் வெளிச்சம் பாதி
ஆனா உலகத்தில் இருக்கே மீதி

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....
லலி... லலி... லலி லலி.... லலி லலி... லலி லலி... லா.....

ஏதோதோ போட்டு வச்சி பதமாக காய்ச்சி வைப்ப

ஆ... ஆ... ஆ... ஆ...

ராசாவும் பால் குடிக்க ரோசா நீ மூடி வைப்ப
ஆசையில மிதந்து ஆயிரம் சுமந்து நீ இருக்க
சமயத்த பாத்து இருப்பத குடிக்க பூனை வர
அட பொண்ணு நீ ஜாக்கிரத
இல்ல பாலெல்லாம் தீரும் கத
இது பொல்லாத உலகம் புள்ள
இத புரியாட்டா வாழ்வே இல்ல

அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு
நீ போகும் வீட்டுக்குள்ள பெரியோர மதிக்கனும்
உரியோர துதிக்கனும்டி
கட்டுனவன் மனசுல கரும்பாக இனிக்கனும்
அரும்பாக மணக்கனும்டி
அடி அம்மாடி சின்ன பொண்ணு
நா சொல்லுறத கேளு நின்னு


ஜாதிமல்லி - மறக்க முடிய வில்லை...


படம்: ஜாதிமல்லி (1993)
இசை: மரகதமணி
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல்வரிகள்: வைரமுத்து





மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

ஹா.... ஹா.... ஹா...

ஐந்தில் அறிந்த ச ரி க ம ப த நீ மறக்க முடியவில்லை
ஆறு வயதில் ஏறிய மேடை மறக்க முடியவில்லை
அன்னை தந்த பட்டு சேலை மறக்க முடியவில்லை
அது ரத்தம் சிந்தி நனைந்த நாளை மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

மறக்க தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க தான் நினைகின்றேன் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...

பட்டாம்பூச்சி பிடித்த நாட்கள் மறக்க முடியவில்லை
பாலும் பழமும் பழைய பாடல் மறக்க முடியவில்லை
முதல் முதலா வைத்த மீசை மறக்க முடியவில்லை
என் முகம் தொலைந்து போன நாளை மறக்க முடியவில்லை....
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
ஹா.... ஹஹா... ஹா ஹா.......  ம்ம்ம்...

மழை ஆடிய எங்கள் வீதியில் அலையாடிய தண்ணீர் மேலே
விளையாடிய காகித கப்பல் மறக்க முடியவில்லை

நான் ஆடிய காகித கப்பல் தண்ணீரில் மூழ்கும் முன்னே
கண்ணீரில் மூழ்கிய சோகம் மறக்க முடியவில்லை
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
இந்த மனதை தள்ளி வைத்து இருக்க முடியவில்லை

மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...
மறக்க முடியவில்லை... மறக்க முடியவில்லை...


Wednesday, November 21, 2012

வெப்பம் - காற்றில் ஈரம்


படம் : வெப்பம் (2011)
இசை: ஜோஷ்வா  ஸ்ரீதர் 
பாடியவர்கள் : கார்த்திக், 
ஸ்ரீசரண்
பாடல் வரி : நா.முத்துகுமார்






காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?
இன்றென்ன இத்தனை இன்பம் இதயக்கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே...

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?


ஓ... ஒரு நாள் இந்த ஒரு நாள் உயிரோடு இருந்தாலும் வாழும்
பயணம் இந்த பயணம் இது தொடர்ந்திட வேண்டும்
அருகில் உனதருகில் நான் வாழும் நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம் இது உறைந்திட வேண்டும்
ம்...மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உலகிங்கே
கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித்துணையைக் கேட்கிறதே வா வா....

ஓ... நம் நெஞ்சில் ஓரம் ஏன் இங்கு இதனை ஈரமோ?
நம் கண்களில் ஓரமா புதுக் கனவுகள் நூறும்
இது என்ன இது என்ன இந்த நாள் தான் திருநாளா?
இதற்காக இதற்காக காத்திருந்தோம் வெகு நாளா ?


ஓ... இன்றென்ன இத்தனை இன்பம் இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம் கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று உதட்டின் மேலே பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே...

காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை வரைப் போவோமா?
நேற்று நாளை அது பொய்யானதோ?
இன்று மட்டும் இங்கு மெய்யானதோ?
மேகம் அலையும் அந்த வானம் வரைப் போவோமா?

Tuesday, November 20, 2012

சின்ன மாப்பிள்ளை - காதோரம்

படம்: சின்ன மாப்பிள்ளை (1993)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S. ஜானகி
பாடல்வரிகள்: வாலி







காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதைய்யா

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி

உன் முகத்த பார்க்கையில
என் முகத்த நான் மறந்தேன்


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காதோரம் லோலாக்கு.....


நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி

உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி

நீ தொடத்தானே நான் பொறந்தேன்
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காதோரம் லோலாக்கு...


வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை

என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு

நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதைய்யா


உன் முகத்த பார்க்கையில
என் முகத்த நான் மறந்தேன்


காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதைய்யா

காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி

Popular Posts