Saturday, August 25, 2012

படையப்பா - மின்சார பூவே

படம் : படையப்பா (1999)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
வரிகள் : வைரமுத்து
பாடியவர்கள் : ஸ்ரீநிவாஸ், நித்யஸ்ரீ மகாதேவன்

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்
மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும்
காலையில் உன் கண்களில் நான் வெயில் காயவேண்டும்
சகியே... சகியே... சகியே...
என் மீசைக்கும் ஆசைக்கும் பூசைக்கும் நீ வேண்டும்

மின்சார கண்ணா
மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்
கூந்தலில் விழும் பூக்களை நீ மடி ஏந்த வேண்டும்
நான் விடும் பெருமூச்சிலே நீ குளிர் காய வேண்டும்
மதனா... மதனா... மதனா...
என் பூவுக்கும் தேவைக்கும் சேவைக்கும் நீ வேண்டும்
மின்சார கண்ணா

ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம் உன்னிடத்தில் கண்டேன்
என் பாதத்தில் பள்ளிக்கொள்ள உனக்கொரு அனுமதி தந்தேன்
என் ஆடைதாங்கிக் கொள்ள என் கூந்தல் ஏந்திக் கொள்ள
உனக்கொரு வாய்ப்பல்லவா
நான் உண்ட மிச்ச பாலை நீ உண்டு வாழ்ந்து வந்தால்
மோட்சங்கள் உனக்கல்லாவா
வானம் வந்து வளைகிறதே வணங்கிட வா

மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும்
என்னோடு வாராய் என் ஆசை ஓசை கேளாய்

வெண்ணிலவை தட்டி தட்டி செய்து வைத்த சிற்பம் ஒன்று கண்டேன்
அதன் விழிகளில் வழிவது அமுதல்ல விஷம் என்று கண்டேன்
அதன் நிழலையும் தொடுவது பழியென்று விலகி விட்டேன்
வாள் விழியால் வலை விரித்தாய் வஞ்சனை வெல்லாது
வலைகளிலே மீன் சிக்கலாம் தண்ணீர் என்றும் சிக்காது
வா என்றால் நான் வருதில்லை
போ என்றால் நான் மறைவதில்லை
இது நீ நான் என்ற போட்டி அல்ல
நீ ஆணையிட்டு சூடிக் கொள்ள ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல

மின்சார கண்ணா என் மன்னா என் ஆணை கேட்டு
என் பின்னே வாராய் என் ஆசை ஓசை கேளாய்

விக்ரம் - மீண்டும் மீண்டும் வா

படம்: விக்ரம் (1986)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P.பாலசுப்ரமணியம் & S.ஜானகி

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
பால் நிலா ராத்திரி... பாவை ஓர் மாதிரி...
அழகு ஏராளம்... அதிலும் தாராளம்...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

ஆண்மை என்னும் வார்த்தைக்கேற்ற தோற்றம் நீதானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த தேகம் இதுதானா

செந்நிறம் பசும்பொன்னிறம் தேவதை வம்சமோ
சேயிடை விரல் தீண்டினால் சந்திரன் அம்சமோ

தொடங்க

மெல்லத் தொடங்க

வழங்க

அள்ளி வழங்க

இந்த போதைதான் இன்ப கீதைதான் அம்மம்மா... ஆஹ்...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...
மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

விரகம் போலே உயிரை வாட்டும் நரகம் வேறேது
சரசக் கலையைப் பழகிப் பார்த்தால் விரசம் கிடையாது

தேன் தரும் தங்கப் பாத்திரம் நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி பார்க்குமோ சாத்திரம்

கவிதை

கட்டில் கவிதை

எழுது

அந்திப் பொழுது

கொஞ்சும் பாடல்தான் கொஞ்சம் ஊடல்தான் அம்மம்மா... ஹா...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

மீண்டும் மீண்டும் வா... வேண்டும் வேண்டும் வா...

பால் நிலா ராத்திரி.. பாவை ஓர் மாதிரி

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

அழகு ஏராளம்.. அதிலும் தாராளம்

Popular Posts