Friday, October 21, 2011

Arputham - Nee Malara

படம் : அற்புதம் (2002)
இசை :  சிவா
பாடியவர்
கள் : K.S.சித்ரா, உன்னிகிருஷ்ணன்
பாடல் வரிகள் : பா.விஜய்




(Right click & Save link as)



நீ மலரா மலரா மலரானால்
எந்தன் பேரே பூ வாசம்


நீ மழையா மழையா மழையானால்
எந்தன் பேரே மண் வாசம்


ஒரே சுவாசமே... ஜோடி ஜீவன் வாழுமே...

உயிரே... உயிரே...


பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே


நீ கூட எனக்கும் ஒரு தாயே 

நீ மலரா மலரா மலரானால்
எந்தன் பேரே பூ வாசம்


வாழாமலே வாழ்ந்த நாள் 
எந்த நாளோ?


பார்க்காமல் நாம் இருவரும் 
இருந்த நாளே


அட காதல் என்பதென்ன 
இன்ப சிகிச்சை


இது இரண்டு நபர் ஒன்றாய்
எழுதும் பரீட்சை


தினம் உன் பேரேயே நான் 
கூறியே உயிர் வாழ்கிறேன்


நீ மலரா மலரா மலரானால்
எந்தன் பேரே பூ வாசம்



காற்றோடு நான் 
ஈரமாய் சேர்கிறேன்


மரமாகி நான் 
ஈரத்தை ஈர்க்கிறேன்


என் அந்தபுரம் எங்கும் 
சாரல் அலைகள்


என் நந்தவனம் எல்லாம் 
ஈர இலைகள்

ஒரு மழையோடு தான் 
வெயில் சேர்ந்ததே நம் காதலே

நீ மலரா மலரா மலரானால்
எந்தன் பேரே பூ வாசம்

நீ மழையா மழையா மழையானால்
எந்தன் பேரே மண் வாசம்

ஒரே சுவாசமே... ஜோடி ஜீவன் வாழுமே...

உயிரே... உயிரே


பிறந்தாயே எனக்காய் பிறந்தாயே

நீ கூட எனக்கும் ஒரு தாயே 

Saturday, October 15, 2011

சதுரங்கம் - என்ன தந்திடுவேன்

படம் : சதுரங்கம் (2004)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : கார்த்திக், ஸ்ரீலேகா பார்த்தசாரதி
பாடலாசிரியர்: யுகபாரதி






சொல்ல வந்ததை சொல்ல வந்ததை சொல்லவில்லை
சொல்லும் வரை சொல்லும் வரை காதல் தொல்லை

என்ன தந்திடுவேன்... நான் என்னை தந்திடுவேன்

உள்ளம் தந்திடுவேன்... நான் உயிரை தந்திடுவேன்

நீ வானவில் தந்தால் நான் வானம் தந்திடுவேன்

நீ ஓரிடம் தந்தால் நான் உலகை தந்திடுவேன்

உன் ஆயுள் காலம் தீரும் போது என் ஆயுள் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன்... நான் என்னை தந்திடுவேன்

உள்ளம் தந்திடுவேன்... நான் உயிரை தந்திடுவேன்

விரல்கள் நீ தந்தால் நான் ஸ்பரிசம் தந்திடுவேன்
விழிகள் நீ தந்தால் நான் கனவு தந்திடுவேன்

நொடிகள் நீ தந்தால் நான் யுகங்கள் தந்திடுவேன்
விதைகள் நீ தந்தால் நான் விருட்சம் தந்திடுவேன்

நீ கோப பார்வை பார்க்கும் போது கொஞ்சல் தந்திடுவேன்

என் தோளில் வந்து நீயும் சாய தொட்டில் தந்திடுவேன்

நீ பார்த்திடும் போது பாராமல் நான் பார்வை தந்திடுவேன்

நீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்

என்ன தந்திடுவேன்... நான் என்னை தந்திடுவேன்

உள்ளம் தந்திடுவேன்... நான் உயிரை தந்திடுவேன்

தன தோம் தன தன தோம்
தன தன தோம் தன தன தோம்

தன தோம் தன தன தோம்
தன தன... ஆ ஆ ஆ

இறகு நீ தந்தால் நான் தோகை தந்திடுவேன்
கைகள் நீ தந்தால் உயிர் ரேகை தந்திடுவேன்

பூமி நீ தந்தால் நான் பூக்கள் தந்திடுவேன்
கிளைகள் நீ தந்தால் நான் கிளிகள் தந்திடுவேன்

உன் நெற்றி வருடி கேசம் ஒதுக்க காற்று தந்திடுவேன்

நீ இருட்டில் நடக்க எந்தன் விழியில் வெளிச்சம் தந்திடுவேன்

நீ ஜன்னலின் ஓரம் நின்றிடும் போது சாரல் தந்திடுவேன்

நீ தூங்கிடும் நேரம் லேசாய் கேட்கும் பாடல் தந்திடுவேன்

Saturday, October 8, 2011

Appu - Idam Tharuvaya

படம் : அப்பு (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன் & பாப் ஷாலினி
பாடல்வரிகள் : வைரமுத்து









இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே


தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்


பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே.....


இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே




இதய வீட்டில் ஓர் இடம் 
நீ கெஞ்சிக் கேக்கிறாய்
வீட்டின் உள்ளே காற்றில்லை 
என்றால் என் செய்வாய்


இதய வீட்டில் காற்றில்லையா 
என்ன செய்குவேன்
உந்தன் மூச்சு பிச்சையிலே 
தான் நான் வாழ்வேன்


வீட்டை விட்டு வெளியேறு
ஆணைகள் இட்டால் என் செய்வாய்


இருப்பவருக்கே மனை சொந்தம் என்று
ஒரு சட்டம் நான் இடுவேன்


இடம் ஒன்று கொடுத்தால் மடம் ஒன்று பிடிக்கும்
கள்ளக் கண்ணாளன் நீ என்று கண்டேன்
தரவே தர மாட்டேன்


இடம் தருவாயா....
இடம் தருவாயா மனசுக்குள்ளே
இடம் தருவாயா மனசுக்குள்ளே



தர மாட்டேன் தர மாட்டேன் இடம் தர மாட்டேன்
உள்ளே சென்றால் மனசை விட்டு வர மாட்டாய்


பகலில் வீட்டின் காவலன் ஆவேன்
இரவில் எப்போதும் சேவகன் ஆவேன்
விளக்காய் விழித்திருப்பேன் அன்பே.....



இதயம் என்னும் மாளிகையில் நூறு வாசலே
எந்த வழி புகுவது என்று கேக்கின்றேன்


கண்கள் என்னும் வாசல் வழி புகுந்த கள்வனே
நுழைந்து கொண்டு வாசல் வழியா கேக்கின்றாய்


வீட்டுக்குள்ளே ஒளிந்திருக்கும்
கள்வனைக் காட்டிக் கொடுப்பாயா


கண் கதவை சாத்திக்கொள்வேன்
காலம் முழுதும் இருப்பாயா


இதயம் போலொரு அழகிய வீடு
எங்கு சென்றாலும் அடைவது ஏது
எனக்கு இடம் தருவாயா அன்பே


இடம் ஒன்று தந்தேன்...
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே...
இடம் ஒன்று தந்தேன் மனசுக்குள்ளே...


தந்தாயே தந்தாயே தந்தாயே
இதய வீட்டில் அத்தனை அறைகள் தந்தாயே


அரண்மணை கதவுகள் மொத்தம் அடைத்தேன்
எல்லா ஜன்னலும் சாத்தி முடித்தேன்
தப்பிக்க முடியாது அன்பே...

Saturday, October 1, 2011

Vaagai Sooda Vaa - Sara Sara Saara Kathu

படம் :  வாகை சூடவா (2011)
இசை : ஜிப்ரான்
பாடியவர்க‌ள் : சின்மயி
பாடல் வரிக‌ள்: வைரமுத்து




சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே


எங்க ஊரு பிடிக்குதா... எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல... சுட்ட ஈரல் மணக்குதா
முட்டை கோழி பிடிக்கவா... முறை படி சமைக்கவா
எலும்புங்க கடிக்கயில்... என்ன கொஞ்ச நினைக்க வா
கம்மஞ்சோறு ருசிக்க வா... சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடகத்தா ரசம் வச்சு மடக்க தான் பாக்குறேன்
ரெட்டை தோசை சுட்டு வச்சு காவ காக்குறேன்
முக்கண்ணு நொங்கு நான் விக்கிறேன்
மண்டு நீ கங்கைய கேக்குற

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே

புல்லு கட்டு வாசமா... புத்திக்குள்ள வீசுற
மாட்டு மணி சத்தம்மா... மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுற... கையளவு மனசுல
கையெழுத்து போடுற... கன்னி பொண்ணு மார்புல
மூனு நாளா பாக்கல... ஊரில் எந்த பூவும் பூக்கல
ஆட்டு கல்லு குழியில ஒறங்கி போகும் பூனையா
உன்னை வந்து பாத்து தான் கிறங்கி போறேன்யா
மீனுக்கு ஏங்குற கொக்கு நீ
கொத்தவே தெரியல மக்கு நீ


சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...

சர சர சார காத்து வீசும் போது
சார பாத்து பேசும் போது
சார பாம்பு போல நெஞ்சம் சத்தம் போடுதே...


இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

இத்து இத்து இத்து போன நெஞ்சு தைக்க
ஒத்த பார்வை பாத்து செல்லு
மொத்த சொத்த எழுதி தாரேன் மூச்சு உட்பட...

டீ போல நீ... என்ன ஏன்... ஆத்துற

காட்டு மல்லிக பூத்திருக்கு காதலா காதலா
வந்து வந்து ஓடிபோகும் வண்டுக்கு என்ன காச்சலா

Popular Posts