Tuesday, August 30, 2011

நிலாவே வா - நீ காற்று நான் மரம்


படம் : நிலாவே வா (1998)
இசை : வித்யாசாகர்
பாடியவர் :  ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து








நீ காற்று... நான் மரம்...
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்



நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்
நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்


நீ அலை நான் கரை
என்னை அடித்தாலும் ஏற்று கொள்வேன்


நீ உடல் நான் நிழல்
நீ விழ வேண்டாம் நான் விழுவேன்


நீ கிளை நான் இலை
உன்னை ஒட்டும் வரைக்கும் தான் உயிர் தரிப்பேன்


நீ விழி நான் இமை
உன்னை சேரும் வரைக்கும் நான் துடிதிருப்பேன்


நீ சுவாசம் நான் தேகம்
நான் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்



நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்



நீ வானம் நான் நீலம்
உன்னில் நானாய் கலந்திருப்பேன்


நீ எண்ணம் நான் வார்த்தை
நீ சொல்லும் பொழுதே வெளிபடுவேன்


நீ வெயில் நான் குயில்
உன் வருகை பார்த்து தான் நான் இசைப்பேன்


நீ உடை நான் இடை
உன்னை உறங்கும் பொழுதும் நான் உடுத்திருப்பேன்


நீ பகல் நான் ஒளி
என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்



நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்


நீ மழை நான் பூமி
எங்கு விழுந்தாலும் ஏந்தி கொள்வேன்


நீ இரவு நான் விண்மீன்
நீ இருக்கும் வரை தான் நான் இருப்பேன்


நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்


Monday, August 29, 2011

Kalki - Ezhudhugiren Oru

படம் : கல்கி(1996)
இசை : தேவா
பாடியவர்க‌ள் : K.S. சித்ரா, அனுராதா ஸ்ரீராம்
பாடல் வரிக‌ள் : கவியரசர் இளந்தேவன்



Kalki (1996).jpg





முத்து முத்து மகளே
முகம் காணாத மகளே
மாதங்கள் பத்து மனதினில் சுமந்து
கற்பனையில் பெற்ற கண்மனியே
நான் உனக்கு கவிதையில் எழுதும் கடிதம்


எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்
வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
மலடியின் மகளே மகளேனும் கனவே
மடியினிலே நீ வா
எழுதுகிறேன் ஒரு கடிதம்
பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


முன்னூறு நாள் கர்ப்பத்திலே வாராத பெண் நீயடி
என்னாளுமே நான் பொம்மை தான் என்றாலும் தாய் தானடி
உலாவும் வானம் பாடியாய் பண்பாடி வாழ்க கண்ணே
புறாவை போல சாந்தமாய் பண்பாடு போற்று பெண்ணே
நாளொரு மேன்மை நீ பெறுவாய்
நான் பெற்ற இன்பம் யார் பெறுவார்
பெறாமலே பெறும் சுகம் நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


சிந்தாமணி என் கண்மனி சிற்றாடை நீ கட்டடி
என் மாளிகை முற்றத்திலே பொன் ஊஞ்சல் நீயாடடி
குலாவும் அன்பு கோகிலம் எங்கேயும் கானம் பாடு
கனாவில் கூட சோம்பலே இல்லாமல் ஞானம் தேடு
நல்லவளாக நடை போடு வல்லவளாகிட தடை ஏது
விழாமலே விழும் மழை நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...


எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்...
பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வடி
கொல்லாமலே கொல்வாரடி குற்றங்கள் சொல்வாரடி
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் நேரில் மோது
பெறாத வெற்றி இல்லையே என்றே நீ வேதம் ஒது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டுமடி
உரிமைக்கு போரிட தேவையடி
தொடாமலே சுடும் கனல் நீயே


வானத்து மலரே வையத்து நிலவே
வாழ்கையின் பொருளே வா
மலடியின் மகளே மகளேனும்
கனவே மடியினிலே நீ வா

பாறையில் மலர்ந்த தாமரையே
இரவினில் எழுந்த சூரியனே
எழாமலே எழும் நிலா நீயே
எழுதுகிறேன் ஒரு கடிதம்... எழுதுகிறேன் ஒரு கடிதம்....

விண்ணுக்கும் மண்ணுக்கும் - உனக்கென உனக்கென


படம் : விண்ணுக்கும் மண்ணுக்கும் (2001)
இசை : S.A ராஜ்குமார்
பாடியவர் : S.P பாலசுப்ரமணியம், சுஜாதா
பாடல் வரி : பா.விஜய்









உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே


திருவிழா போல காதல் தான்
அதில் நீயும் நானும் தொலைவோமா
தினசரி செய்திதாள்களில்
நம்மை தேடும் செய்தி தருவோமா
ஸ்ரீராமஜெயத்தை போல் உனது பெயரை
தினம் எழுதிப் பார்க்கிறேன்
கிளி ஒன்றை வாங்கி உன் பெயரைக் கூறி
தினம் சொல்ல கேட்கிறேன்
அடி... ஒரு கோடி கொலுசில் உன் கொலுசின் ஓசை
உயிர் வரை கேட்கிறதே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


கடலாக நீயும் மாறினால்
அதில் மூழ்கி மூழ்கி அலையாவேன்
நெருப்பாக நீயும் மாறினால்
அதில் சாம்பலாகும் வரம் கேட்பேன்
அரிதாரம் பூசும் ஒரு வானவில்லை
பரிசாகக் கேட்கிறேன்
அகல் தீபமாகி ஆகாய நிலவை
உறவோடுப் பார்க்கிறேன்
அடி பொய்யென்ற போதும்
உன்னோடு பேசும் கனவுகள் வேண்டுகிறேன்


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே
உயிரென உணர்வென கலந்தேனே
இதயத்தை இதயத்தை இழந்தேனே
இமைகளில் கனவுகள் சுமந்தேனே


உனக்கென உனக்கெனப் பிறந்தேனே

Sunday, August 28, 2011

டைம் - தவிக்கிறேன் தவிக்கிறேன்

படம்: டைம் (1999)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: ஹரிஹரன், பவதாரணி
பாடல் வரி: பழனிபாரதி










Download this MP3


தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே
நான் அனுப்பும் பூ வாசம்........

நீ அனுப்பும் பூ வாசம்
என் மூச்சில் உன் மூச்சை சேர்கின்றேதே
தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் தீட்டுவேன்
அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும்

ஸ்வரம் ஏழு போதவில்லை உன் பேரை ஸ்வரம் ஆக்குவேன்
அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும்

ஓடி வா ஓடி வா இயங்கவில்லை இதயத்தில் ஒரு பாதி

தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி

காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே....

முதல் முதலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ
நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும்

குல தெய்வம் நேரில் பார்க்கும் பக்தனை போல் நான் காணுவேன்
ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அழைக்கும்

மாற்றினாய் மாற்றினாய் சிறகின்றி பறக்கின்ற பூவாக

மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக

காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

ஓவியத்தில் பார்த்தாலும்....
ஓவியத்தில் பார்த்தாலும் அன்பே உன் கன்னங்கள் சிவக்கின்றதே

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே

ஓ... துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே

Time - Kadhal Neethana

படம்: டைம் (1999)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
பாடல் வரி: பழனிபாரதி








காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா
தெரிந்ததே உன் முகம் 
மறந்ததே என் முகம்
வழிந்ததே சந்தனம் 
நனைந்ததே குங்குமம்
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா
நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு
வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா


எந்தன் குரல் கேட்டால் 
என்ன தோன்றுது உனக்கென்ன தோன்றுது?

ஒ... நேரில் பார்க்கச் சொல்லி 
என்னை தூண்டுது அது என்னை தீண்டுது

கேட்காத குயிலில் ஓசை கேட்குதே 
உன் வார்த்தையில்

நான் பேசும் பொய்யும் கவிதை ஆகுதே 
நம் காதலில்

கேலண்டரில் தேதிகளை 
எண்ணுகின்றேன் நாளும்

தூரத்திலே கேட்கின்றதே 
நாதஸ்வரம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா


நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா



என்ன கனவு கண்டாய்

நீ வந்தாய் முத்தம் தந்தாய்

பதிலுக்கென தந்தாய்

போ... போ... போ...
சொல்ல மாட்டேன் போ

கனவில் நீ செய்த குறும்பை 
நேரிலே 
நான் செய்யவா?

கனவின் முத்தங்கள் காயவில்லையே 
அதை சொல்லவா?

பார்க்காமலே கேட்காமலே 
போகின்றதே காலம்

சொர்க்கத்திலே சேர்கின்றதே 
உன் ஞாபகம்..

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா

நெஞ்சம் இது ஒன்று தான் 
அங்கும் இங்கும் உள்ளது
உனக்கதை தருகிறேன் 
உயிரென சுமந்திடு

வானமும் என் பூமியும் உன்னிடம்

காதல் நீ தானா காதல் நீ தானா
உன்னைக் காணத்தான் 
கண்கள் கொண்டேனா

Friday, August 26, 2011

ஆட்டோகிராப் - நினைவுகள்

படம் : ஆட்டோகிராப் (2004)
இசை : பரத்வாஜ்

பாடியவர் :  
உன்னிமேனன்
பாடல் வரி : சேரன்






நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்


காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு
எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி
என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனைப் பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

பூக்களை பறிக்காதீர்கள் - மாலை எனை

படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், S. ஜானகி
பாடல் வரி : T. ராஜேந்தர்

Pookalai Pareekatheergal



மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை எனை வாட்டுது
மணநாளை மனம் தேடுது

விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழி வாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னைத் தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதயமும் தூங்காதா
தாகமும் தணியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை எனை வாட்டுது

மணநாளை மனம் தேடுது


உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
உன் கோவில் சேர பூத்திட்ட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் எந்நாள்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா
மடியைத் தலையணை ஆக்கிடவா
இரு கரம் சேர்த்திடவா
இல்லை எனையே ஈர்த்திடவா

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

மாலை நமை வாட்டுது
மணநாளை இமை தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது

மணநாளை இமை தேடுது

பூக்களை பறிக்காதீர்கள் - சோலைகளெல்லாம்


படம் : பூக்களை பறிக்காதீர்கள் (1986)
இசை : T. ராஜேந்தர்
பாடியவர் : S. P. பால சுப்பிரமணியம், K.S. சித்ரா
பாடல் வரி : T. ராஜேந்தர்



சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ... 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஓ... 
காதல் ஊர்வலம் இங்கே 
கன்னி மாதுளம் இங்கே 
சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ.. 
குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ... 

காதல் ஊர்வலம் இங்கே
கன்னி மாதுளம் இங்கே

விழியெனும் அருவியில்
நனைகிறேன் குளிர்கிறேன்

கவியெனும் நதியினில்
குதிக்கிறேன் குளிக்கிறேன்

மரகத வீணை உன் சிரிப்பிலே
மயக்கிடும் ராகம் கேட்கிறேன்

மன்னவன் உந்தன் அணைப்பிலே
மான் என நானும் துவள்கிறேன் 

வாழையிலை போல நீ ஜொலிக்கிறாய்

காளை விருந்துக்கு எனையழைக்கிறாய்

காதல் ஊர்வலம் இங்கே

கன்னி மாதுளம் இங்கே

ஆஹ...ஹா... ஆ.. ஆ... ஹ... ஹ... ஹா...
காதலி அருகிலே இருப்பதே ஆனந்தம்

காதலன் மடியிலே கிடப்பதே பரவசம்

நட்சத்திரம் கண்ணில் சிரிக்குதா ஹஹ்ஹா...
மின்னி மின்னி என்னைப் பறிக்குதா

புத்தகம் போல் தமிழைச் சுமக்கிறாய்
பக்கம் வந்து புரட்ட அழைக்கிறாய்

நீ வெட்கத்தில் படிக்க மறுக்கிறாய்

நீ சொர்க்கத்தை மிஞ்ச நினைக்கிறாய்...

காதல் ஊர்வலம் இங்கே
ததத்தா ததத துது...

கன்னி மாதுளம் இங்கே
ரதத்தா ததத ரதத்தா.. 

சோலைகளெல்லாம் பூக்களைத் தூவ சுகம் சுகம் ஆ...

குயில்களின் கூட்டம் பாக்களைப் பாட இதம் இதம் ஆ...

காதல் ஊர்வலம் இங்கே

பபப்ப பபப பபப்ப 
கன்னி மாதுளம் இங்கே

ரரர.. ரரர.. ருருரு...

Popular Posts