Saturday, April 30, 2011

அவன் இவன் - ஒரு மலையோரம்



படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  விஜய் ஜேசுதாஸ், Baby பிரியங்கா,
                         Baby ஸ்ரீனிசா & Baby நித்யஸ்ரீ
பாடல் வரி : 
நா.முத்துகுமார்











ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு
செல்லம் கொஞ்சி நீ பேச
உள்ளமுருகி நான் கேட்க
அந்த நிமிடம் போதுமடா
இந்த ஜென்மம் தீருமடா ஒ... ஹோ...


ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு
உன் கை கோர்த்து என் தலை சாய்க்க
அங்கு வேண்டுமடா என் கூடு


பெண்ணே முதல் முறை 
உன் அருகிலே வாழ்கிறேன்
போதும் போதும் விடு
நினைவிலே தோய்கிறேன்


என்னானது எந்தன் நெஞ்சம்
ஏன் இந்த மாற்றமோ
பெண்ணானதும் நாணம் வந்து
தன் வேலையை காட்டுமோ
உன் எதிரிலே.. ஏ... ஏ... ஏ...


எதுவுமே பேசிட வேண்டாம்
மௌனங்கள் ஆயிரம் பேசுமே


என் உள்ளிருந்து நீ பேச
இன்னும் என்ன நான் பேச


இந்த மயக்கம் போதுமடி
இன்னும் நெருக்கம் வேண்டுமடி ஒ.... ஹோ...


ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம்
அதன் அடிவாரம் ஒரு வீடு


உன்னை காணும் வரை
நான் கனவிலே வாழ்ந்தேன்
உன்னை கண்டேன் பெண்ணே
உன் நினைவிலே வாழ்கிறேன்


என் தனிமையின் ஓரம் வந்து
இனிமைகள் ஊட்டினாய்
என் தாயிடம் பேசும் போதும் 
வெறுமையை கூட்டினாய்
உன் காதலிலே… ஏ... ஏ... ஏ...


மனமது புகையினை போலே
மறைத்து யாருமே இல்லையே


என்னுள் நீ சேர்ந்திருக்க
எங்கே எனை நான் மறைக்க


இந்த வார்த்தை போதுமடி..
எந்தன் வாழ்க்கை மாறுமடி..
பெண்ணே....

அவன் இவன் - ராசாத்தி போல



படம் : அவன் இவன் (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  ஹரிசரண்
பாடல் வரி : 
நா.முத்துகுமார்










ஹே... ராசாத்தி தீ... தீ நான் உன்ன தேடி வருவா
நீ கேட்டத எல்லாம் தரவா தரவா
ரோசா பூ போல நீ பாத்தா போதும் மெதுவா 
நா செத்து போவேன் சருகா சருகா


அடி ஆத்தி என் கண்ணுல
சில நாளா வந்து கொல்லுற
உன்னால நா தூங்கல
சோறு தண்ணி இறங்கல
வாடி அடி வாடி என்ன தாலாட்ட



ராசாத்தி போல அவ என்ன தேடி வருவா
நா கேட்டத எல்லாம் தருவா தருவா
ரோசா பூ போல அவ சிரிச்சா போதும் தலைவா
நா செத்து போவேன் மெதுவா மெதுவா


காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே
காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி
கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே
கட்டுப்பாட்ட தான் மீறி
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்
போட தெரியல வேலி


ஹேய் பெண்ணாய் நீ வந்ததும் 
அடி ஆணாய் நான் வந்ததும்
எங்கேயோ முடிவானதோ
என்னை நீ பார்த்ததும்
அடி உன்னை நான் பார்த்ததும்
முன் ஜென்ம தொடர்பானதோ
யார் வந்து தடுத்தாலும்
என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி
கண்ண மூடி படுத்தாலும்
கனவெல்லாம் நீ தானே
இறந்தாலும் இறக்காதது இந்த காதலே
புரியாதது புதிரானது
அழிந்தாலுமே அழியாதது நிலையானது


காட்டு சிறிக்கியே காட்டு சிறிக்கியே
காத்து கிடக்குறேன் வாடி
நேத்து பாத்தது நெஞ்சில் இருக்குதே
என்ன கொல்லுதே போடி





Thursday, April 28, 2011

பூ - ஆவாரம் பூ



படம் : பூ (2008)
இசை : S.S.குமரன்

பாடியவர் :  சின்மயி
பாடல் வரி : 
நா.முத்துகுமார்








ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

காற்றில் ஆடி தினந்தோறும்
உனது திசையை தொடருதடா
குழந்தை கால நியாபகத்தில்
இதழ்கள் விரித்தே கிடக்குதடா
நெடுநாள் அந்த நெருக்கம்
நினைத்தே அது கிடக்கும்
சரகுகள் சத்தம் போடும்
தினம் சூழ்நிலை யுத்தம் போடும்
அதன் வார்த்தை எல்லாம் மெளனமாகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

ஆயுள் முழுதும் தவம் கிடந்தே
ஒற்றை காலில் நிற்குதடா
மாலை ஆகி தவழ்ந்திடவே
உனது மார்பை கேட்குதடா
பனியில் அது கிடக்கும்
நீயும் பார்த்தால் உயிர் பிழைக்கும்
வண்ணங்கள் எல்லாம் நீ தான்
அதன் வாசங்கள் எல்லாம் நீ தான்
நீ விட்டு சென்றால் பட்டுப் போகும்

சொந்த வேரோடு தான் கொண்ட காதலினை
அது சொல்லாமல் போனாலும் புரியாதா

ஆவாரம் பூ அந்நாளில் இருந்தே
யாருக்கு காத்திருக்கு
அந்தி பகல் மழை வெயில் சுமந்தே
உனக்காக பூத்திருக்கு

அமர்க்களம் - மேகங்கள் என்னை



படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்

பாடியவர் :  S.P.B
பாடல் வரி : 
வைரமுத்து








மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் 
மூச்சு வரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆக மொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல 
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


பிரிவொன்று நேருமென்று தெரியும் பெண்ணே
என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்
எரியும் உடலென்று தெரியும் பெண்ணே
என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


கண்ணிமையும் சாமரங்கள் வீசும் காற்றில்
என் காதல் மனம் துண்டுத் துண்டாய் உடையக் கண்டேன்
துண்டு துண்டாய் உடைந்த மனத் துகளையெல்லாம்
அடி தூயவளே உனக்குள் தொலைத்து விட்டேன்


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


செவ்வாயில் ஜீவராசி உண்டா என்றே
அடி தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும்
உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் 
அது தெரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்
எவ்வாறு கண்ணிரெண்டில் கலந்து போனேன் 
அடி எவ்வாறு மடியோடு தொலைந்து போனேன்
இவ்வாறு தனிமையில் பேசிக்கொண்டேன் 
என் இரவினைக் கவிதையாய் மொழிபெயர்த்தேன்


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


மூடி மூடி வைத்தாலும் விதைகளெல்லாம்
மண்ணை முட்டி முட்டி முளைப்பது உயிரின் சாட்சி
ஓடி ஓடிப் போகாதே ஊமைப் பெண்ணே
நாம் உயிரோடு வாழ்வதற்குக் காதல் சாட்சி


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு


மேகங்கள் என்னைத் தொட்டுப் போனதுண்டு
சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு
தேகங்கள் ஒன்றிரண்டு கடந்ததுண்டு
மனம் சில்லென்று சில போது சிலிர்த்ததுண்டு
மோகனமே உன்னைப் போல என்னை யாரும் 
மூச்சுவரை கொள்ளையிட்டுப் போனதில்லை
ஆகமொத்தம் என் நெஞ்சில் உன்னைப் போல 
எரி அமிலத்தை வீசியவர் எவருமில்லை

Tuesday, April 26, 2011

தீனா - சொல்லாமல் தொட்டு



படம் : தீனா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :  ஹரிஹரன்
பாடல் வரி : வாலி








சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


ஒ... காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்
நரக சுகம் அல்லவா
நெருப்பை விழுங்கி விட்டேன்
ஒ... அமிலம் அருந்தி விட்டேன்


நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்
மருந்தை ஏனடி தர மறந்தாய்
வாலிபத்தின் சோலையிலே
ரகசியமாய் பூ பறித்தவள் நீ தானே


சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்


யே... பெண்களின் உள்ளம் படு குழி என்பேன்
விழுந்து எழுந்தவன் யார்
ஆழம் அளந்தவன் யார்
ஒ... கரையை கடந்தவன் யார்


காதல் இருக்கும் பயத்தினில் தான்
கடவுள் பூமிக்கு வருவதில்லை
மீறி அவன் பூமி வந்தால்
தாடியுடன் தான் அலைவான் வீதியிலே....

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

ஒரு நாளைக்குள்ளே மெல்ல மெல்ல
உன் மௌனம் என்னை கொல்ல கொல்ல
இந்த காதலினால் காற்றில் பறக்கும் காகிதம் ஆனேன்

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்
என் காதல் தேவதையின் கண்கள்
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

Popular Posts