Tuesday, March 29, 2011

மின்சார கனவு - வெண்ணிலவே



படம் : மின்சார கனவு (1997)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  ஹரிஹரன், சாதனாசர்கம்

பாடலாசிரியர் : 
வைரமுத்து











வெண்ணிலவே வெண்ணிலவே 
விண்ணைத்தாண்டி வருவாயா 
விளையாட ஜோடி தேவை... ஹேய்
வெண்ணிலவே வெண்ணிலவே 
விண்ணைத்தாண்டி வருவாயா 
விளையாட ஜோடி தேவை... ஹேய்



வெண்ணிலவே வெண்ணிலவே 
விண்ணைத்தாண்டி வருவாயா 
விளையாட ஜோடி தேவை 
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே 

உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் 



இது இருளல்ல அது ஒளியல்ல 

இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் 

இது இருளல்ல அது ஒளியல்ல 
இது ரெண்டோடும் சேராத பொன் நேரம் 

தலை சாயாதே விழி மூடாதே 
சில மொட்டுக்கள் சட்டென்று பூவாகும் 
பெண்ணே... பெண்ணே... 
பூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே 
புல்லோடு பூ மேகம் ஓசை கேட்கும் பெண்ணே 
நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம் 
பாலூட்ட நிலவுண்டு 



வெண்ணிலவே வெண்ணிலவே 
விண்ணைத்தாண்டி வருவாயா 
விளையாட ஜோடி தேவை 
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே 
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் 




எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு 
கையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு 


இதை எண்ணி எண்ணி இயற்கையை வியக்கிறேன் 
எட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு 


பெண்ணே... பெண்ணே...
பூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும் 
பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும் 


அட உலகை ரசிக்க வேண்டும் நான் 
உன் போன்ற பெண்ணோடு...



வெண்ணிலவே வெண்ணிலவே 
விண்ணைத்தாண்டி வருவாயா 
விளையாட ஜோடி தேவை 
இந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே 
உன்னை அதிகாலை அனுப்பி வைப்போம் 

Thursday, March 24, 2011

திருமலை - நீயா பேசியது



படம் : திருமலை (2003)
இசை : வித்யா சாகர்

பாடியவர் :  சங்கர் மகாதேவன்

பாடலாசிரியர் : 
நா.முத்துகுமார்







நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 


நீயா பேசியது.... நீயா பேசியது....
நீயா பேசியது.... நீயா பேசியது....



நீ என்பது எதுவரை எதுவரை
நான் என்பது எதுவரை? எதுவரை
நாம் என்பதும் அதுவரை அதுவரை தான் 
வாழ்வென்பது ஒரு முறை ஒரு முறை 
சாவேன்பதும் ஒரு முறை ஒரு முறை 
காதல் வரும் ஒரு முறை ஒரு முறை தான் 


ஏதோ நான் இருந்தேன் 
என்னுள்ளே காற்றாய் நீ கிடைத்தாய் 
காற்றை மொழி பெயர்த்தேன் 
அன்பே சொல் மூச்சை ஏன் பறித்தாய்
இரவிங்கே பகல் இங்கே தொடு வானம் போனது எங்கே
உடல் இங்கே உயிர் இங்கே தடுமாறும் ஆவி எங்கே ?
உருகினேன் நான் உருகினேன்
இன்று உயிரில் பாதி கருகினேன் 
நீயா பேசியது என் அன்பே நீயா பேசியது


வேரில் நான் அழுதேன்
என் பூவோ சோகம் உணரவில்லை 
வேஷம் தரிக்கவில்லை
முன் நாளில் காதல் பழக்கமில்லை 
உனக்கென்றே உயிர் கொண்டேன் 
அதில் ஏதும் மாற்றம் இல்லை 
பிரிவென்றால் உறவு உண்டு 
அதனாலே வாட்டம் இல்லை 
மறைப்பதால் நீ மறைப்பதால் 
என் காதல் மாய்ந்து போகுமா

நீயா பேசியது.. என் அன்பே நீயா பேசியது
தீயை வீசியது என் அன்பே தீயை வீசியது
கண்களிலே உன் கண்களிலே 
பொய் காதல் நாடகம் ஏனடி
அன்பினிலே மெய் அன்பினிலே 
ஓர் ஊமை காதலன் நானடி 

நீயா பேசியது.... நீயா பேசியது....

மதுர - கண்டேன் கண்டேன்



படம் : மதுர (2004)
இசை : வித்யா சாகர்

பாடியவர் : சாதனாசர்கம், மது பாலகிருஷ்ணன்
பாடல் வரி : 
யுகபாரதி











கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 
கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன் 


இரு விழியினிலே அவன் அழகுகளை 
மிக அருகினிலே அவன் இனிமைகளை 
தின்றேன் தின்றேன் 
தெவிட்டாமல் நான் தின்றேன்


கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 
கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன்... கொண்டேன்....


நீ வளையல் அணியும் கரும்பு 
நான் அழகை பழகும் எறும்பு 


ஆ... நீ தழுவும் பொழுதில் உடும்பு 
நாள் முழுதும் தொடரும் குறும்பு 


சுடிதாரை சூடிச்செல்லும் பூக்காடு 
தொடும் போது தூறல் சிந்தும் மார்போடு 


பகல் வேஷம் தேவையில்லை பாய்போடு 
பலி ஆடு நானும் இல்லை தேன்கூடு 


ஒரு விழி எரிமலை 
மறு விழி அடைமழை பரவசம் உயிரோடு 




மேல் இமைகள் விரதம் இருக்க 
கீழ் இமைகள் பசியில் துடிக்க


ம்..ம்...கால் விரலில் கலைகள் வசிக்க 
கை விரலில் கலகம் பிறக்க 


எனை மோதி போகும் தென்றல் தீ மூட்ட 
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட 


தணியாத தாகம் உன்னை தாழ்பூட்ட 
கனவோடு நீயும் வந்து போர் மீட்ட 


ஜனனமும் மரணமும் 
பலமுறை வரும் என
தலையணை நினைவூட்ட 


கண்டேன் கண்டேன் 
எதிர்காலம் நான் கண்டேன் 


கொண்டேன் கொண்டேன் 
உயிர் காதல் நான் கொண்டேன் 


இரு விழியினிலே அவன் அழகுகளை 


மிக அருகினிலே அவன் இனிமைகளை 


தின்றேன் தின்றேன் 
தெவிட்டாமல் நான் தின்றேன்...

காதல் கொண்டேன் - மனசு ரெண்டும்



படம் : காதல் கொண்டேன் (2003)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  
சங்கர் மகாதேவன்
பாடல் வரி : நா.முத்துகுமார்





மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே 


மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே 
நரம்பில் ஒரு நதி பாயுதே 
இது என்ன வேட்கை 
காதல் வலி உடல் காயுதே 
இது என்ன வாழ்க்கை 
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே 



மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே 


காதல் சருகான பின்பு 
மோகம் வந்தாலே சாபம் 
கண்ணில் முள் வைத்து மூடி 
தூங்க சொன்னாலே பாவம் 
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி 
மருந்து போல குடிப்பேன் 
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன் 
உன் பாத சுவடுக்குள் 
சுருண்டு விழுந்து மரிப்பேன் 
உடல் சீறுதே நிறம் மாறுதே 
வலி ஏறுதே இது என்ன கலவரமோ 



மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே 



மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே 



நிலவின் ஒளியில் அலைகள் எரியுமா 
அலையின் வேதனை நிலவு அறியுமா 
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி 
உடலே உடலே உறைந்து போய்விடு 
மனமே மனமே இறந்து போய்விடு 
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு 
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே 
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே 
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே 
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே 
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே 
அதை மறைக்காதே...
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே 

Wednesday, March 23, 2011

அக்னி நட்சத்திரம் - தூங்காத விழிகள்


படம் : அக்னி நட்சத்திரம் (1988)
இசை : இளையராஜா

பாடியவர் : 
S.ஜானகி, K.J.யேசுதாஸ்
பாடல் வரி : வாலி





தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 
செம்பூ மஞ்சம் விரித்தாலும் 
பன்னீரைத் தெளித்தாலும் 
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 
தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

மாமர இலை மேலே.. ஆ... ஆ... ஆ... 
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 
பூமகள் மடி மீது நான் தூங்கவோ 
மாமர இலை மேலே மார்கழி பனிபோலே 
பூமகள் மடி மீது நான் தூங்கவோ 

ராத்திரி பகலாக ஒருபோதும் விலகாமல் 
ராஜனை கையேந்தி தாலாட்டவோ 

நாளும் நாளும் ராகம் தாளம் 
சேரும் நேரம் தீரும் பாரம் 

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... 

தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 
செம்பூ மஞ்சம் விரித்தாலும் 
பன்னீரைத் தெளித்தாலும் 
ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 
தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

ஆலிலை சிவப்பாக அங்கமும் நெருப்பாக 
நூலிடை கொதிப்பேறும் நிலை என்னவோ 

ஆதியும் புரியாமல் அந்தமும் தெரியாமல் 
காதலில் அரங்கேறும் கதை அல்லவோ

மாதுளம் கனியாட மலராட கொடியாட 
மாருதம் உறவாடும் கலை என்னவோ 

வாலிபம் தடுமாற ஒருபோதை தலைக்கேற 
வார்த்தையில் விளங்காத சுவையல்லவோ 

மேலும் மேலும் மோகம் கூடும் 

தேகம் யாவும் கீதம் பாடும் 
ஆஆ...ஆஆ...ஆ.. 

தூங்காத விழிகள் ரெண்டு 

உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

செம்பூ மஞ்சம் விரித்தாலும் பன்னீரைத் தெளித்தாலும் 

ஆனந்தம் எனக்கேது அன்பே நீ இல்லாது 

தூங்காத விழிகள் ரெண்டு 
உன் துணை தேடும் நெஞ்சம் ஒன்று 

Monday, March 21, 2011

குள்ளநரி கூட்டம் - விழிகளிலே விழிகளிலே



படம் : குள்ளநரி கூட்டம் (2011)
இசை : செல்வகணேஷ்

பாடியவர் :  
கார்த்திக், சின்மயி
பாடல் வரி : 
நா.முத்துகுமார்



 







விழிகளிலே விழிகளிலே 
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...


விழிகளிலே விழிகளிலே 
புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே....


இன்பதில் இது என்ன வகை இன்பமோ
இன்பதில் இது என்ன வகை இன்பமோ
நடந்து போகையில் பறக்குது மனது


துன்பதில் இது என்ன வகை துன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது


இதுவரை எனக்கு இதுபோல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்


கனவுகள் அனைத்தும் முன் போல் இல்லை
புதிதாய் இருக்குது எனக்கும்


உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே....


சொந்ததில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்


மொத்ததில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்


இது என்ன கனவா நிஜமா இதற்கு
யாரிடம் கேட்பேன் விளக்கம்


இது என்ன பகலா இரவா நிலவின்
அருகில் சூரிய வெளிச்சம்


உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம்.... ஏங்கும்
விழிகளிலே....


விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்


அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்


உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்


எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்


விழிகளிலே...


விழிகளிலே விழிகளிலே
புது புது மயக்கம் யார் தந்தார்


அருகினிலே வருகையிலே
புது புது தயக்கம் யார் தந்தார்


7G Rainbow Colony - January Madham



படம் : 7G ரெயின்போ காலனி (2004)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : 
மாதங்கி, குணால்
பாடல் வரி : நா.முத்துகுமார்






ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் 
கண்ணும் கண்ணும் மோதும் 
பெண்மை இங்கு மாறும் 
என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய 
என் உள்ளே உள்ளே உள்ளே 
புது மின்சாரங்கள் பாய 
என் அச்சம் மடம் நாணம் எல்லாம் 
சிக்கிக்கொண்டு சாக 


ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் 
கண்ணும் கண்ணும் மோதும்
இப்பெண்மை இங்கு மாறும்




மெய்யா பொய்யா என் தேகம் இங்கே 
பையா பையா உன் வீரம் எங்கே 


கட்டில் கட்டில் அது தேவையில்லை 
கண்ணால் தொட்டால் நீ கன்னி இல்லை 


காமம் இல்லா காதல் அது காதல் இல்லை 
கையை கட்டி நிக்க இது கோவில் இல்லை 
வண்டு வரா பூக்கள் அது பூக்கள் இல்லை 
ஆதி வாசி ஆணும் பெண்ணும் வெட்கப்படவில்லை 


மார்கழி மாதம் ஒ மையல் கொள்ளும் நேரம் 
மூடு பனிகுள்ளே நிலவுகள் சுடும் 


முதல் முறை இங்கே ஒரு காயம் இனிக்கும் 
முகத்திலே வெட்கம் ஒரு கோலம் கிறுக்கும் 
ஒரு விழி உன்னை வேண்டாமென்றால் 
மறு விழி உன்னை வேண்டும் 
ஒரு கை உன்னை தள்ள பார்த்திடும் 
மறு கை உன்னை தேடும் 
என் ஈர கூந்தல் உள்ளே 
உன் விரல் வந்து தேட 
என் காது மடல் எல்லாம் 
உன் உஷ்ண முத்தம் கேட்க 
என் அச்சம் மடம் நாணம் எல்லாம் 
சிக்கிக்கொண்டு சாக 



மார்கழி மாதம் ஒ மையல் கொள்ளும் நேரம் 
மூடு பனிகுள்ளே நிலவுகள் சுடும் 


என் பின்னங்கழுத்திலே உன் உதடுகள் மேய 
என் உள்ளே உள்ளே உள்ளே 
புது மின்சாரங்கள் பாய 
என் அச்சம் மடம் நாணம் எல்லாம் 
சிக்கிக்கொண்டு சாக 


ஜனவரி மாதம் ஒ பனி விழும் நேரம் 
கண்ணும் கண்ணும் மோதும் 
பெண்மை இங்கு மாறும் 

Popular Posts