Monday, February 28, 2011

ஒரு நாள் ஒரு கனவு - கஜுராஹோ



படம் : ஒரு நாள் ஒரு கனவு (2005)
இசை : இளையராஜா
பாடியவர் : ஹரிஹரன், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரி : பழனிபாரதி







கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா
துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா
நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்


கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே
கஜுராஹோ...ஓ... கஜுராஹோ...


என் தேகம் முழுவதும் மின்மினி மின்மினி ஓடுதே
மாயங்கள் செய்கிறாய் மார்பினில் சூரியன் காயுதே


பூவின்னுள் பனி துளி துருது துருது துருதே
பனியோடு தேந்துளி உருது உருது உருதே


காமனின் வழிபாடு உடலினை கொண்டாடு


ந ந ந ந ந.. நன நன ந ந நா


தீபம் போல் என்னை நீ ஏற்று
காற்றோடு காற்றாக அந்தரங்க வழி மிதக்கலாம்
கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே


கஜுராஹோ...ஓ... கஜுராஹோ


நீராக உன் உடல் நெளியுது வலையுது முழ்கவா
தண்டோடு தாமரை பூவினை கைகளில் ஏந்தவா


மேலாடை நீயேன மேனியில் நான் உனை சூடவா
நீ தீண்டும் போதினில் மோகன ராடினம் ஆடவா


பகலுக்கு தடை போடு இரவினை எடை போடு


ல ல ல ல ல.. ல ல ல லா லா லா


எங்கே நான் என்று நீ தேடு
ஈரங்கள் காயாமல் இன்ப ராக மழை பொழியுது



கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே

மெல்ல மெல்ல விரலில் திரன திம் தனா

துள்ளுகின்ற பொழுதில் இனிய கீர்த்தனா

நான் உன்னுள்ளே உன்னுள்ளே சிலையின் மொழிகளை பழகலாம்


கஜுராஹோ கனவில் ஒர் சிற்பம் கண்ணில் மிதக்குதே
அறியாதோர் மனதிலே ரகசிய வாசல் திறக்குதே


கஜுராஹோ... கஜுராஹோ...

ரோஜாக் கூட்டம் - மொட்டுகளே




படம் : ரோஜாக் கூட்டம் (2002)
இசை : 
பரத்வாஜ்
பாடியவர் : ஹரிஹரன், சாதனாசர்கம்
பாடல் வரி : பழனிபாரதி







மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


நீ ஒரு பூ கொடுத்தால் அதை மார்புக்குள் சூடுகிறேன்
வாடிய பூக்களையும் பேங்க் லாக்கரில் சேமிக்கிறேன்


உன் வீட்டுத் தோட்டம் கண்டு இரவில் வந்து சேர்வேன் 
ரோஜாக்களை விட்டு விட்டு முட்கள் திருடிப்போவேன் 


நீ ஆகட்டும் என்று சொல்லி விடு உன் சட்டைப்பூவாய் பூப்பேன்


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
கண்மணியாள் தூங்குகின்றாள் காலையில் மலருங்கள் 
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது


காதலி மூச்சுவிடும் காற்றையும் சேகரிப்பேன்
காதலி மிச்சம் வைக்கும் தேனீர் தீர்த்தமென்பேன்


கடற்க்கரை மணலில் நமது பேர்கள் எழுதிப்பார்த்தேன்
அலை வந்து அள்ளிச் செல்ல கடலைக் கொல்லப்பார்த்தேன்


உன் நெற்றியில் வேர்வை கண்டவுடன் நான் வெயிலை
வெட்டப் பார்த்தேன் பார்த்தேன் பார்த்தேன்


மொட்டுகளே மொட்டுகளே மூச்சு விடா மொட்டுகளே
காதலன் தான் தூங்குகின்றான் காலையில் மலருங்கள்
பொன்னரும்புகள் மலர்கையிலே மென் மெல்லிய சத்தம் வரும்
என் காதலன் துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது

Sunday, February 27, 2011

பாட்டு வாத்தியார் - நீ தானே




படம் : பாட்டு வாத்தியார் (1995)
இசை : 
இளையராஜா
பாடியவர் : K.J.ஜேசுதாஸ், சொர்ணலதா,
பாடல் வரி : வாலி




ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...
ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...ம்ம்ம்ம்ம்ம் ...

நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்


நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்
உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்


ஊற்றுப் போலவே பாட்டு வந்ததே 
உன்னைக் கண்டதாலே ...
பாவை என்னையே பாட வைத்ததே 
அன்பு கொண்டதாலே
உன்னைப் பார்க்கையில் என்னைப் பார்க்கிறேன்
உந்தன் காந்தக் கண்ணில்
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன்
இன்று உந்தன் கையில்
எந்தன் ஆவல் தீருமோ
உந்தன் பாத பூஜையில்
இந்த ஜீவன் கூடுமோ
உந்தன் நாத வேள்வியில்
எண்ணம் நீ வண்ணம் நீ
இங்கு நீ எங்கும் நீ
வேதம் போலே உந்தன் பேரை
ஓதும் உள்ளம் தான்


நீ தானே நாள்தோறும் நான் பாட காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்


நாத வெள்ளமும் கீத வெள்ளமும்
வாரித்தந்த தேவி
நாளும் என்னையே வாழ வைக்கவே
வாசல் வந்த தேவி


வீணை தன்னையே கையில் ஏந்திடும்
ஞானவல்லியே ...நீ
வெள்ளைத் தாமரை பூவில் மேவியே
ஆளும் செல்வியே நீ
எந்தன் வாக்கு மேடையில்
இன்று ஆடும் வாணியே
எந்த நாளும் மேன்மையில்
என்னை ஏற்றும் ஏணியே
அன்னை நீ அல்லவா
இன்னும் நான் சொல்லவா
நீ தான் தெய்வம் நீ தான் செல்வம்
கீதம் சங்கீதம்


நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம்


உறவு ராகம் இதுவோ
இன்று உதயமாகி வருதோ
உனது தாகம் விளைய
இது அடிமையான மனதோ


நீ தானே நாள்தோறும் நான் பாடக் காரணம்
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம்

Saturday, February 26, 2011

நான் மகான் அல்ல - இறகைப்போலே



படம் : நான் மகான் அல்ல  (2010)
இசை : 
யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா
பாடல் வரி : யுகபாரதி



இறகைப்போலே அலைகிறேனே
உந்தன் பேச்சைக் கேட்கையிலே
குழந்தை போலே தவழ்கிறேனே
உந்தன் பார்வை தீண்டயிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னைத்தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே
உன் மூச்சுக்காற்றுப் பட்டதும்
அநியாயக் காதல் வந்ததே
அடங்காத ஆசைத் தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல்
போலே தொட்டுச்சென்றதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


கூட வந்து நீ நிற்பதும் கூடு விட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்
பாதி மட்டுமே சொல்வதும் மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்
நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே



கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்


ஹே என்னானதோ ஏதானதோ இல்லாமல் போச்சே தூக்கமும்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை ஓ ஹோ ஹோ
என் மீதிலே உன் வாசனை எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே என்னை சேராமல் வாழ்வில்லை ஓ ஹோ ஹோ
நீ என்னைக் காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னை கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே


கண்ணோரம் காதல் வந்தால் கண்ணீரும் தித்திப்பாகும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேறொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

Friday, February 25, 2011

பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன்




படம் : பிரிவோம் சந்திப்போம்  (2008)
இசை : 
வித்யாசாகர்
பாடியவர் : கார்த்திக், ஸ்வேதா
பாடல் வரி : யுகபாரதி


கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் காதலை 
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் 
கொண்டேன் ஆவலை 


கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் காதலை 
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் 
கொண்டேன் ஆவலை 


பட்டின் சுகம் வெல்லும் விரல் 
மெட்டின் சுகம் சொல்லும் குரல் 
எட்டித் தொட நிற்கும் அவள் 
எதிரே எதிரே 


பிள்ளை மொழி சொல்லை விட 
ஒற்றை பனை கள்ளை விட 
போதை தரும் காதல் வர 
தொலைந்தேன் தொலைந்தேன் 
தொலைந்தேன் தொலைந்தேன் 
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் 


கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் காதலை 
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் 
கொண்டேன் ஆவலை 


மோதும் மோதும் 
கொலுசொலி ஏங்கும் ஏங்கும் 
மனசொலியை பேசுதே 


போதும் போதும் 
இதுவரை யாரும் கூறா 
புகழுரையே கூசுதே 


பேசாத பேச்செல்லாம் பேச பேச நிம்மதி


பேசாது போனாலும் நீ என் சங்கதி 


கெஞ்சல் முதல் கொஞ்சல் வரை 
விக்கல் முதல் தும்மல் வரை 
கட்டில் முதல் தொட்டில் வரை 
அவளை அவளை அவளை அவளை 


கண்டேன் கண்டேன் கண்டேன்
கண்டேன் காதலை 


கொண்டேன் கொண்டேன் கொண்டேன்
கொண்டேன் ஆவலை 


காணும் காணும் 
இருவிழி காதல் பேச 
இமைகளிலே கவிதைபடி 


ஏதோ ஏதோ 
ஒருவித ஆசை தோன்ற 
தனிமையிது கொடுமையடி 


நீங்காமல் நாம் சேர நீளமாகும் இப்புவி


தூங்காமல் கைசேர காதல் தங்குமே 


ரெட்டைகிளி அச்சத்திலே 
நெஞ்சுக்குழி வெப்பத்திலே 
சுட்டித்தனம் வெட்கத்திலே 
அடடா அடடா அடடா அடடா 


கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் காதலை 


கொண்டேன் கொண்டேன் 
கொண்டேன் கொண்டேன் ஆவலை 


பட்டின் சுகம் வெல்லும் விரல் 
மெட்டின் சுகம் சொல்லும் குரல் 


எட்டித் தொட நிற்கும் அவன் 
எதிரே எதிரே.. 


பிள்ளை மொழி சொல்லை விட 
ஒற்றை பனை கள்ளை விட 


போதை தரும் காதல் வர 
தொலைந்தேன் தொலைந்தேன் 
தொலைந்தேன் தொலைந்தேன் 
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் 


கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் 
கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன்

Popular Posts