Saturday, July 9, 2016

Kabali - Maya Nadhi

படம்: கபாலி (2016)
இசை: சந்தோஷ் நாரயணன்
பாடியவர்: அனந்து, பிரதீப் குமார், ஸ்வேதா மோகன்
பாடல்வரிகள்: உமா தேவி





நெஞ்சமெல்லாம் வண்ணம் பலவண்ணம் ஆகுதே
கண்களெல்லாம் இன்பம் கூடி கண்ணீர் ஆகுதே

நான் உனை காணும் வரையில் தாபத நிலையே
தேசங்கள் திரிந்தேன் தனியே தனியே

ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்
நான் என்னை உயிர்த்தேன் பிரிவில் பிரிவில்
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...


நீர் வழியே மீன்களை போல்
என் உறவை நானிழந்தேன்
நீ இருந்தும் நீ இருந்தும்
ஒரு துறவை நானடைந்தேன்
ஒளி பூக்கும் இருளே
வாழ்வின் பொருளாகி
வலி தீர்க்கும் வலியாய்
வாஞ்ஜை தரவா

மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...
யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


தேசமெல்லாம் ஆளுகின்ற‌
ஒரு படையை நான் அடைந்தேன்
காலமென்னும் வீரனிடம்
என் கொடியை நான் இழந்தேன்
மணலொரம் மழையாய்
மடிமீது விழவா... வா...
அணை மீறும் புணலாய்
மார் சாய்ந்து அழவா


மாயநதி இன்று... மார்பில் வழியுதே...
தூய நரையிலும்... காதல் மலருதே...

யானை பலமிங்கே... சீறும் உறவிலே...
போன வழியிலே... வாழ்க்கை திரும்புதே...


Popular Posts