Wednesday, October 30, 2013

ஆல் இன் ஆல் அழகு ராஜா - என் செல்லம்

படம்: ஆல் இன் ஆல் அழகு ராஜா  (2013)
இசை: S.தமன்
பாடியவர்கள்: ராகுல் நம்பியார்
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்







மபநிஸா ரிஸா... மபநிஸா ரிஸா...
கக ரிரி ஸஸ நிநி தநிஸா ரிஸா
மபநிஸா ரிஸா...  மபநிஸா ரிஸா...

என் செல்லம்... என் செல்லம்... 

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள சிக்கித் தவிச்சேன்
முன்னால... பின்னால...
எம் மனசுக்குள்ள தங்கம்... செல்லம்... வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப் புட்ட மெல்ல சாச்சுப் புட்ட
தங்கம்... செல்லம்... வெல்லம்...
ஹையோ என்ன தவிக்க விட்ட நெஞ்ச துடிக்க விட்ட...

யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

ஏ தொட்டு தொட்டு தொட்டு உன் நெஞ்ச தொட்டு தொட்டு 
இந்த காதலும் வந்து உன்னை ஒட்டி ஒட்டிக் கொண்டதா
விட்டு விட்டு விட்டு ஒரு காய்ச்சல் வைத்து விட்டு
இந்த காதலின் வெப்பம் உன்னை சுட்டு சுட்டு சென்றதா

யாருக்கும் சொல்லாம உன் நெஞ்சுக்குள்ள எடம் புடிச்சேன்
உன்னால... தன்னால...

மபநிஸா நிஸா நிஸா...
மபநிஸா பநிஸா ரிரிஸா நிஸா பநி
மபநிஸா பநிஸா கரிமா ரிஸாநிஸா
மபநிஸா பநிஸா ஸாநிபா மப காமரி...


உன் அழக... உன் அழக... உன் அழக... உன் அழக...
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அடி கிழக்க பாத்து மேற்கப் பாத்து தனியா நின்னேனே
உன் அழக பாத்து மனச பாத்து மயங்கிப் போனேன் நானே
அலையில்லா கடலப் போல அசையாம நின்னேனே
கர மேல உன்னப் பாத்து தெச மாறி வந்தேனே
எனக்குள்ளே என்னத் தேடி புதுசாகப் பிறந்தேனே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

மபநிஸா... மபநிஸா... மபநிஸா...
மபநிஸா... மபநிஸா... மபநிஸா...


அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
அத அங்கத்தட்டி இங்கத்தட்டி ஆட்டம் போடாதே
அடி வலயப்பட்டி தவிலு சத்தம் மனசுக்குள்ளே கேட்டேன்
மழ பெய்ஞ்ச தரையப் போல புது வாசம் தந்தாயே
புரியாத வாசம் இந்த பெண் வாசம் என்றாயே
தடையில்லா மின்சாரம் போல் தினந்தோறும் வந்தாயே
யாரோ நீ யாரோ உன் பேர சொல்லிடத் தானே
கிட்டத் தட்ட கொன்னு புட்ட

என் செல்லம்... ஓ... என் செல்லம்... ஓ...


Desingu Raja - Nelaavattam Nethiyile

படம்: தேசிங்கு ராஜா (2013)
இசை: D.இமான்
பாடியவர்: உன்னிகிருஷ்ணன், ஹரிணி
பாடல்வரிகள்: யுகபாரதி







நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...  

தானே தந்தானே தந்தானேனே
தந்தானானேனா
தானே தானா தந்தானேனே
தானே தனதனனே தந்தானேனே தா



கொல்லைய கூட்ட பழகுனேன்
கூடத்த கூட்ட பழகுனேன்
உங்கள கூட்ட பழகலையே முன்னாடி
நீங்க கொல்லைய கூட்ட வருவீகளோ பின்னாடி


வெத்தல மடிக்க பழகுனேன்
வேட்டிய மடிக்க பழகுனேன்
மறந்திட பழகலையே முன்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி
நீ பொடவ மடிக்க கெளம்புறியே என்னாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வச்சா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல

நெலா வட்டம்... நெஞ்சுக் குழி...


ஏ... ஏ... ஏ...
ஓ ஏலே ஏலே னானே ஏலே ஏலே னானே
ஏலே ஏலே னானே ஏலே ஏலே
ஓ ஏலேலா தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே ஏலேலா
ஓ ஏலேலா தந்தானே ஏலேலா தந்தானே
தந்தானே ஏலா தந்தானே ஏலா
தந்தானே ஏலேலா


வெங்காயம் நறுக்க பழகுனேன்
வெள்ளரி நறுக்க பழகுனேன்
உங்கள நறுக்க பழகலையே முன்னாடி
நீங்க ஒறவ நறுக்க வருவதென்ன அப்பாடி

கட்டில வாங்க பழகுனேன்
மெத்தைய வாங்க பழகுனேன்
ஒறங்கிட பழகலயே முன்னாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே அம்மாடி
நீ உசுர வாங்கி தொலைக்கிறியே யம்மாடி

நெலா வட்டம் நெத்தியிலே
நெஞ்சுக் குழி மத்தியில
ஒரே ஒரு முத்தம் வைய்யி கோசல
அந்த முத்ததுக்கு ஈடா தரேன் காதல

கெடா வெட்டி பொங்கையிலே
கேப்பக் கூழு கிண்டையில
ஒரே ஒரு முத்தம் தந்தா போதல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல
அந்த முத்ததுக்கு ஈடேயில்ல ஊருல
தா தந்தா னனா னனானானா னானனா
தான தந்தா தந்தா னனானானா னானனா



தேசிங்கு ராஜா - அம்மாடி அம்மாடி

படம் : தேசிங்கு ராஜா (2013)
இசை : D. இமான்
பாடியவர் : ஸ்ரேயா கோஷல்
பாடல்வரிகள் : யுகபாரதி






அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே..... ஹே... ஹே...

ஹே... அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே... ஹே... ஹே...


என்னை நான் பெண்ணாக எப்பொழுதுமே உணரல
உன்னாலே பெண்ணானேன் எப்படியடா தெரியல
விலகி இருந்திட கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் மூடினால் தவறுதான் இதிலே
ஏனடா இது ஏனடா கள்வனே பதில் கூறடா
ஹே... ஹே..... ஹே... ஹே...


சொல்லாமல் தொட்டாலும் உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காத உன் குறும்புகள் பிடிக்குதே
அணிந்த உடைகளும் நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி இன்றுதான் இதயம் கேட்கிறதே
கூடுதே அனல் கூடுதே தேகமே அதில் மூழ்குதே...
ஹே... ஹே..... ம்... ம்...

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒருதரம் பாக்கவா
ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா
யம்மாடி யம்மாடி நீ தொடங்க தொலைந்திடவா
இழந்ததை மீட்கவா ஓ... இரவலும் கேட்கவா ஓ...
ஹே... ஹே..... ஹே... ஹே...


Sunday, October 27, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - பாக்காத பாக்காத

படம்: வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013)
இசை: D.இமான்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், பூஜா வைத்யநாத்
பாடல்வரிகள்: யுகபாரதி






பாக்காத பாக்காத... அய்யய்யோ பாக்காத...

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன்
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத
நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்
நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்
இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...


ஓ.. எப்போ பாரு உன்ன நெனச்சு
பச்ச புள்ள போலே எளச்சு

கண்ணுக்குள்ள வச்சு பாக்கும் உறவா
உள்ள வர உன்ன பாப்பேன் தெளிவா

செக்க செவந்து நான் போகும்படி தான்
தன்ன மறந்து ஏன் பாக்குற

என்ன இருக்குது என்கிட்டனு 
என்னை முழுங்க நீ பாக்குற 

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...


எட்டி பாத்தா என்ன தெரியும்
உத்து பாரு உண்மை புரியும்

தள்ளி இருந்து நீ பாத்தா சரியா 
பக்கத்துல வந்து பாரேன் மொறையா

என்னத்துக்கு என்னை பாக்குறேன்னு
அப்ப திட்டிபுட்டு போனவ

கட்டி கொள்ள உன்னை பாக்குறேனே
கூரை பட்டு எப்போ  வாங்குவ

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன் 

பாக்காத பாக்காத அய்யய்யோ பாக்காத

நீ பாத்தா பறக்குறேன் பாத மறக்குறேன் 
பேச்ச குறைக்குறேன் சட்டுனுதான்

நான் நேக்கா சிரிக்கிறேன் நாக்க கடிக்கிறேன்
சோக்கா நடிக்கிறேன் பட்டுனுதான்

இந்த ஒரு பார்வையால தானே நானும் பாழானேன்

பாக்காத பாக்காத...

அய்யய்யோ பாக்காத...

Popular Posts