Thursday, February 28, 2013

பூச்சூடவா - காதல் காதல் காதல்

படம் : பூச்சூடவா(1997)
இசை : சிற்பி
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல் வரிகள் : பழனிபாரதி







காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க

என் கன்னம் சிவக்க
காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
என் கன்னம் சிவக்க

நான் கொஞ்சம் அணைக்க


எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது
கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே

உள்ளம் கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது
கிஸ் மீ என்றது உன்னாலே

இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும்

நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும்

மூடி வைக்கும் போது ஆசை ஜன்னல் திறக்கும்


காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
நான் கொஞ்சம் அணைக்க

என் கன்னம் சிவக்க


காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே
கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே

காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில்
நனையாத பாகங்கள்  எதுவுமில்லை

மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும்

உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும்

நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும்


காதல் காதல் காதல்
என் கண்ணில் மின்னல் மோதல்
என் நெஞ்சில் கொஞ்சும் சாரல்
நீ பார்க்கும் பார்வையில்
மனம் காதல் ஃபீவரில்
என் கன்னம் சிவக்க


நான் கொஞ்சம்... ஹா... ஹா... ஹா...


Vazhthugal - Kannil Vanthathum

படம் : வாழ்த்துகள் (2008)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : ஹரிசரண்
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்



Image result for Vazhthugal





கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே
கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


உன்னுடைய கால் கொலுசு எங்க வீட்டில் கேட்டிடுமா
உன்னுடைய புன்சிரிப்பு என் உதட்டில் பூத்திடுமா
உன்னுடைய கைவிரலை என் விரல்கள் பிடித்திடுமா
உன்னுடைய இதயத்திலே என் துடிப்பு ஒலித்திடுமா
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்


உன்னுடைய பூ முகத்தை பார்த்து கொண்டே நான் இருப்பேன்
உன்னுடைய ஞாபகத்தை விட்டு விட்டால் நான் இறப்பேன்
உன்னுடைய நினைவுகளை உள்ளுக்குள்ளே தேக்கி வைத்தேன்
என்னிடத்தில் எதுவும் இல்லை உயிர் மட்டும் பாக்கி வைத்தேன்
உயிரே உயிரே உனக்காய் வாழ்கிறேன்

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி
காதல் சொன்னதும் நீதான்
காயம் தந்ததும் நீதான் கண்மணி
நினைவை தந்ததும் நீதான்
இன்று நெருப்பை தந்ததும் நீதான் கண்மணி
உன்னை பிரிந்து போகையிலே
உள்ளம் எரிந்து போகுதடி உயிரே உயிரே

கண்ணில் வந்ததும் நீதான்
கண்ணீர் தந்தும் நீதான் கண்மணி கண்மணி


Monday, February 25, 2013

Kadhal Desam - Thendrale Thendrale

படம் : காதல் தேசம் (1996)
இசை : A.R.ரஹ்மான்
பாடியவர்கள் : உன்னிகிருஷ்ணன், மனோ
பாடல்வரிகள் : வாலி




ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்.... ம்ம்.... ம்ம்
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
கரையின் மடியில் நதியும் தூங்கும்
கவலை மறந்து தூங்கு
இரவின் மடியில் உலகம் தூங்கும்
இனிய கனவில் தூங்கு
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோயானேன் உயிரும் நீயானேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ எனை நீ சேராயோ
தூங்க வைக்கும் நிலவே தூக்கமின்றி
நீயே வாடினாயோ

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு


மாலை வானில் கதிரும் சாயும்
மடியில் சாய்ந்து தூங்கடா
பூமி யாவும் தூங்கும் போது
பூவை நீயும் தூங்கடா
மலரின் காதல் பனிக்கு தெரியும்
என் மனதின் காதல் தெரியமா
சொல்ல வார்த்தை கோடி தான்
உனை நேரில் கண்டால் மௌனம் ஏன்
தூங்க வைக்க பாடினேன்
நான் தூக்கமின்றி வாடினேன்

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு

தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு
ம்ம்ம்ம் ம்ம்ம்ம்.... 



Saturday, February 23, 2013

Aahaa - Mudhal Mudhalil

படம் : ஆஹா (1997)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன், சித்ரா
பாடல்வரிகள் : வாலி






முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா.......
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே  


நந்தவனம் இதோ இங்கே தான்
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்
நல்லவளே அன்பே உன்னால் தான்
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்
நொடிகொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
நொடிகொரு தரம் உன்னை நினைக்க வைத்தாய்
அடிக்கடி என்னுடல் சிலிர்க்க வைத்தாய்
முதல் பார்வை நெஞ்சில் எங்கும்
உயிர் வாழுமே உயிர் வாழுமே
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே  


ஆ.... உத்தரவே இன்றி உள்ளே வா
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்
அந்த நொடி அன்பே என் ஜீவன்
வேறெங்கு போனது பாரடி உன்னில்
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
உன்னை கண்ட நிமிஷத்தில் உறைந்து நின்றேன்
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்
என் சுவாச காற்றில் எல்லாம்
உன் ஞாபகம் உன் ஞாபகம்

முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே  
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை காதல் போல ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே வந்து சேர்ந்ததா
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே

Friday, February 22, 2013

மங்காத்தா - என் நண்பனே

படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : யுவன், மதுஸ்ரீ
பாடல்வரிகள் : வாலி





என் நண்பனே என்னை ஏத்தாய்... ஓ
என் பாவமாய் வந்து வாய்த்தாய்
உன் போலவே நல்ல நடிகன்... ஓ
ஊரெங்கிலும் இல்லை ஒருவன்
நல்லவர்கள் யாரோ தீயவர்கள் யாரோ
கண்டுக் கொண்டு கன்னி யாரும்
காதல் செய்வது இல்லையே
கங்கை நதி எல்லாம் கானல் நதி என்று
பிற்பாடு ஞானம் வந்து லாபம் என்னவோ

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்துக் கொள்ளடி என் தோழியே
உண்மைக  காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே


வலக்கையைப் பிடித்து வளைக்கையில் விழுந்தேன்
வலக்கரம் பிடித்து வலம் வர நினைத்தேன்
உறவெனும்  கவிதை உயிரினில் வரைந்தேன்
எழுதிய கவிதை என் முதல் வரி முதல் முழுவதும் பிழை
விழிகளில் வலி விழுந்தது மழை எல்லாம் உன்னால் தான்
இது போன்ற நியாயங்கள் எனக்கேன் இந்தக் காயங்கள்
கிழித்தாய் ஒரு காதல் ஓவியம் ஓ ...
முருகன்  முகம் ஆறு தான் மனிதன் முகம் நூறு தான்
ஒவ்வொன்றும் வேறு வேறு நிறமோ
என்  நண்பனே என்னை ஏய்தாய்

காதல்  வெல்லுமா காதல் தோற்குமா
யாரும் அறிந்ததில்லையே என் தோழியே
காதல் ஓவியம கிழிந்து போனதால்
கவலை ஏனடி இதுவும் கடந்திடும்


அடிக்கடி எனை நீ அணைத்ததை அறிவேன்
அன்பெனும் விளக்கை அணைத்ததை அறியேன்
புயல் வந்து சாயத்த மரம் ஒரு விறகு
உனக்கெனத் தெரியும் என் இதயத்தில் வந்து
விழுந்தது இடி இளமனம் எங்கும் எழுந்தது வலி
யம்மா... யம்மா...
உலகில் உள்ள பெண்களே உரைப்பேன் ஒரு பொன்மொழி
காதல் ஒரு கனவு மாளிகை... ஓ
எதுவும் அங்கு மாயம் தான்
எல்லாம் வர்ணஜாலம் தான்
நம்பாமல் வாழ்வதேன்றும் நலமே

காதல் என்பது கனவு மாளிகை
புரிந்து கொள்ளடி என் தோழியே
உண்மைக காதலை நான் தேடித் பார்க்கிறேன்
காணவில்லையே என் தோழியே ....


மங்காத்தா - கண்ணாடி நீ

படம் : மங்காத்தா (2011)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள் : S.P.B.சரண், பவதாரணி
பாடல்வரிகள் : நிரஞ்சன் பாரதி




கண்ணாடி நீ கண்ஜாடை நான்
என் வீடு நீ உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ உன் தேவை நான்
என் பாடல் நீ உன் வார்த்தை நான்
என் பாதி நீ உன் பாதி நான்
என் ஜீவன் நீ உன் தேகம் நான்
என் கண்கள் நீ உன் வண்ணம் நான்
என் உள்ளம் நீ உன் எண்ணம நான்


கண்ணோடு வா நீ ஹே ஹே
மோக தாளம் போடு நீ ஹே ஹே
ராஜா இன்று வானோடு மேகங்கள்
தீண்டாமல் தொட்டுச் செல்ல
என் மேனி நீ உன் ஆடை நான்
என் பேச்சு நீ உன் மேடை நான்
என் பாதை நீ உன் பாதம் நான்
என் தென்றல் நீ உன் வாசம் நான்


என்னை நீ இன்று உணர்ந்து கொண்டே
உன்னை என்னோடு தொடர்ந்து நான் கண்டேன்

ஏதோ ஏதேதோ நடந்து நான் நின்றேன்
வானம் மேலே தான் பறந்து நான் சென்றேன்

உன் கண்கள் ஓயாமல் என் நெஞ்சைத் தீயில் தள்ள

கண்ணாடி நீ... கண்ஜாடை நான்
என் வீடு நீ... உன் ஜன்னல் நான்
என் தேடல் நீ... உன் தேவை நான்
என் பாடல் நீ... உன் வார்த்தை நான்


தூரம் எல்லாமே உடைந்து போக
பாரம் எல்லாமே வளர்ந்து நோயாக
வீரம் கொண்டாடும் கலைஞன் ஆக
ஈரம மண் மேலே விழுந்து தீ ஆக
தீராத போர் ஒன்று நீ தந்து என்னை வெல்ல

என் மேனி நீ... உன் ஆடை நான்
என் பேச்சு நீ... உன் மேடை நான்
என் பாதை நீ... உன் பாதம் நான்
என் தென்றல் நீ... உன் வாசம் நான்


Wednesday, February 20, 2013

வேதம் - கொஞ்சிக் கொஞ்சி

படம் : வேதம் (2001)
இசை : வித்யாசாகர்
பாடியவர்கள் : S.P.பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள் : வைரமுத்து








கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


இரண்டு வரிகளில் திருக்குறள் இருந்திட காரணமிருக்கிறதே 
கணவன் ஒரு வரி மனைவி ஒரு வரி அர்த்தம் கிடைக்கிறதே 
யார் பெரிதென்ற எண்ணங்கள் வேண்டாம் சிந்தித்துப்பாருங்களே 
சரிசமமாய் உள்ள துண்களில்தானே நிற்கும் கோபுரங்கள் 
சந்தேகம்தான் தீயை வைக்கும் நம்பிக்கைதான் தீபம் வைக்கும் 
இந்த விண்னும் மண்னும் உள்ள நாள் வாழ்க 



கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ் போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலை போல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவி போல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம்



அவர் அவர் எண்ணம் அவரவர்க்குண்டு ஆதிக்கம் வேண்டாமே
ஒரு தனிப்பட்ட சுதந்திரம் இருவருக்கிடையில் அவசியம் இருக்கட்டுமே 
ஒருவருக்கொருவர் பாசம் தந்து நண்பர்கள் ஆகுங்கள்
ஒவ்வொருநாளும் ஒருமுறையேனும் ஒன்றாய் உண்ணுங்கள்
கொஞ்சம் நீங்கள் விட்டுத்தந்தால் சொர்க்கம் உங்கள் வீட்டைத்தட்டும் 
காலம் எல்லாம் உங்கள் நெஞ்சில் பூப்பூக்கும் 


கொஞ்சிக் கொஞ்சிப் பேசிவரும் தமிழ்போல 
அஞ்சி அஞ்சி வீசிவரும் அலைபோல 
நெஞ்சில் என்றும் தங்கும் சங்கக்கவிபோல 
நூறு ஜென்மம் சேர்ந்திருக்க வாழ்த்துகிறோம் 
பூத்துவுகிறோம் 


பிதாமகன் - இளங்காத்து வீசுதே

படம் : பிதாமகன் (2003)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : ஸ்ரீராம் பார்த்தசாரதி
பாடல்வரிகள் : பழனிபாரதி




இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே
கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே


பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்
நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல
ஒன்னுக்கொன்னு தான் இணைஞ்சு இருக்கு
உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு
அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னமடி இந்த நிலம் போல
சிலருக்குத் தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்ல
யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்ல
உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே
குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல

இளங்காத்து வீசுதே இசை போல பேசுதே
வளையாத மூங்கிலில் ராகம் வளைஞ்சு ஓடுதே
மேகம் முழிச்சு கேக்குதே


ஓ... மனசுல என்ன ஆகாயம்
தினம்தினம் அது புதிர் போடும்
ரகசியத்தை யாரு அறிஞ்சா
அதிசயத்தை யாரு புரிஞ்சா
விதை விதைக்கிற கை தானே
மலர் பறிக்குது தினம்தோறும்
மலர் தொடுக்க நாரு எடுத்து
யார் தொடுத்தா மாலையாச்சு
ஆலம் விழுதிலே ஊஞ்சல் ஆடும் கிளி எல்லாம்
மூடும் சிறகிலே மெல்ல பேசும் கதை எல்லாம்
தாலாட்டு கேட்டிடாமலே
தாயின் மடியைத்தேடி ஓடும் மலைநதி போல

கரும்பாறை மனசுல மயில் தோகை விரிக்குதே
மழைச்சாரல் தெறிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
புல்வெளி பாதை விரிக்குதே வானவில் குடையும் பிடிக்குதே
மணியின் ஓசை கேட்டு மனக்கதவு திறக்குதே
புதிய தாளம் போட்டு உடல் காத்தில் மிதக்குதே


Monday, February 18, 2013

கருப்பசாமி குத்தகைதாரர் - உப்பு கல்லு தண்ணீருக்கு

படம்:கருப்பசாமி குத்தகைதாரர் (2007)
இசை : தினா
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ






ஓ......
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்த சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது
தேதி தாள போல வீணே நாளும் கிழியறேன் - நான்
தேர்வு தாள கண்ணீரால ஏனோ எழுதறேன்
இது கனவா... இல்லை நிஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே

உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்த சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது

ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

மீசை வைத்த அன்னை போல உன்னைக் காண்கிறேன் - நீ
பேசுகின்ற வார்த்தை எல்லாம் வேதம் ஆகுதே
பாழடைந்த வீடு போல அன்று தோன்றினேன் - உன்
பார்வை பட்ட காரணத்தால் கோலம் மாறுதே
கட்டில் உண்டு மெத்தை உண்டு ஆன போதிலும்
உன் பாசம் கண்டு தூங்கவில்லை எனது விழிகளே
தென்றல் உண்டு திங்கள் உண்டு ஆன போதிலும்
கண் நாளும் இங்கு தீண்டவில்லை உனது நினைவிலே
உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப் பட்டது


இது கனவா... இல்லை நிஜமா...
தற்செயலா... தாய் செயலா...
நானும் இங்கு நானும் இல்லையே


ஏதும் இல்லை வண்ணம் என்று நானும் வாடினேன் - நீ
ஏழு வண்ண வானவில்லாய் என்ன மாத்துன
தாயும் இல்லை என்று உள்ளம் நேற்று ஏங்கினேன் - நீ
தேடி வந்து நெய்த அன்பால் நெஞ்ச தாக்கின
கத்தியின்றி ரத்தமின்றி காயபட்டவள்
உன் கண்கள் செய்த வைத்தியத்தால் நன்மை அடைகிறேன்
மிச்சம் இன்றி மீதம் இன்றி சேதப்பட்டவள்
உன் நிழல் கொடுத்த தைரியத்தால் உண்மை அறிகிறேன்


உப்பு கல்லு தண்ணீருக்கு ஏக்கப்பட்டது - என்
கண்ணு ரெண்டும் கண்ணீருக்கு வாக்கப்பட்டது
ஒத்த சொல்லு புத்திக்குள்ள மாட்டிக்கிட்டது - நீ
தப்பி செல்ல கூடாதுன்னு கேட்டு கிட்டது


Sunday, February 17, 2013

7G Rainbow Colony - Idhu Enna Matram

படம்: 7G ரெயின்போ காலனி (2002)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: P.B.ஸ்ரீனிவாஸ்
பாடல்வரிகள்: நா.முத்துகுமார்





இது என்ன மாற்றம் இறைவனின் தோற்றம்
இரு விழி பார்வை விளக்குகள் ஏற்றும்
பெண்மையின் மாயம் ரகசியம் பேசும்
அடை மழை வந்தால் குடை என்ன செய்யும்

அணைக்கின்ற போது எரிகின்ற தீயோ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

அணைக்கின்ற போது எரிகின்ற தீயோ
பாதையின் ஓரம் பனி தின்னும் பூவோ

இதயத்தின் ஓரம் தினம் தினம் ஏக்கம்
பூவொன்று பூக்கும் யார் சொல்ல கூடும்
யுகம் யுகமாக இவள் முகம் பார்க்க


Kaadhal Kondein - Nenjodu Kalanthidu

படம்: காதல் கொண்டேன் (2003)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: உன்னி கிருஷ்ணன், சுஜாதா
பாடல்வரிகள் : நா.முத்துகுமார்






நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே


கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முகமூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா


நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே


காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
என் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை


ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வாயா?
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே


Kadhal Samrajyam - Iru Kangal Sollum

படம்: காதல் சாம்ராஜ்யம் (2002)
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பால்ராம், கோபிகா பூர்ணிமா
பாடல்வரிகள்: அகத்தியன்







இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான் ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை


நந... நநந... நநந... நந... நநந... நநந..
நந... நநந... நநந... நந... நந... நநநநநந..

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே

நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே

கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே

நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை


ஏன் சிரிக்கிறேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்

நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா

நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே

உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே


என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே


இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை


Saturday, February 16, 2013

சீனு - வணக்கம் வணக்கம்

படம் : சீனு (2000)
இசை : தேவா
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடல்வரிகள் :  வாலி





வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அப்பாவுக்கு வணக்கம்
அண்ணனுக்கு ஒரு வணக்கம்
எனக்கு அது அர்த்தமுள்ள குரு வணக்கம்
மெல்லிசையை ரசிப்பதற்கு சபையில்
இங்கு உள்ளவருக்கு பொது வணக்கம்
தமிழே தமிழே தாய் மொழியே மொழியே
எந்நாளும் சொல்வேன் கோடி வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அப்பாவுக்கு வணக்கம்


யே....... ஆஆஆஆ.... ஆஆஆஆ.......

இந்த சபையில் ஒரு சின்னங்சிறிய குயில்
இசையை அரங்கேற்றுது
அட வந்த இடத்தில் இந்த விந்தை நிகழ்வது என்ன
குயிலும் அறியாதது
இந்த மக்கள் வாழ்த்துக்களை மொத்தம் வாங்கி
கொள்ள மனசு துடிக்கின்றது
உங்கள் உள்ளந்தோறும் புது வெள்ளம் பாய்ச்சி
இசை அமுது வழிக்கின்றது
என்னை அறியாமல் எனக்கும் தெரியாமல்
எழுந்த நாதம் இது தான்
மின்னல் அடிக்காமல் மேகம் இடிக்காமல்
பொழியும் கீத மழை தான்
பூந்தமிழே தேன் தமிழே உன் மடியில் நான் தானம்மா

வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அப்பாவுக்கு வணக்கம்... ம்ம்ம்....


என்றும் பாடும் நதி கொஞ்சம் ஒய்வெடுத்து
இருக்கு ஒரு ஒரமா
இரு கண்கள் என நினைத்து எங்கள் குலம் வளர்க்கும்
இசையின் தடம் மாறுமா
அட எந்த கீர்த்தனமும் எந்த கன்னிகளும்
தமிழில் இல்லாததா
அட எந்த தாளங்களும் எந்த ராகங்களும்
தமிழன் சொல்லாததா
அர்த்தம் தெரியாமல் மொழியும் புரியாமல்
இசைக்கும் பாடல் எதற்கு
சொந்த மொழியென்றும் சொந்த இசையென்றும்
இருக்கும் போது நமக்கு
பூந்தமிழே தேன் தமிழே என் உயிரும் நீ தானம்மா

வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம் என்
அப்பாவுக்கு வணக்கம்
அண்ணனுக்கு ஒரு வணக்கம்
எனக்கு அது அர்த்தமுள்ள குரு வணக்கம்
மெல்லிசையை ரசிப்பதற்கு சபையில்
இங்கு உள்ளவருக்கு பொது வணக்கம்
தமிழே தமிழே தாய் மொழியே மொழியே
எந்நாளும் சொல்வேன் கோடி வணக்கம்

வணக்கம் வணக்கம் வணக்கம்
என் அம்மாவுக்கு வணக்கம்
வணக்கம் வணக்கம் வணக்கம் என்
அப்பாவுக்கு வணக்கம்


Popular Posts