Monday, June 25, 2012

முத்துகாளை - அந்த கஞ்சி கலயத்த




படம் : முத்துகாளை (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வாலி









ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..


அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே..
தொங்கும் மணி கட்டும் தேரா
தொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.. யே... யே..


புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா


கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்


உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே


வளையல் கைய வலச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே


நெஞ்ச துருவி துருவி துளைய போட்டு பருவ பசிய ஊட்டுறியே


இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டதிந்த மயிலே ஹே.. ஹே.. ஹே


மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான் ஜோடி
விலகாது கூடி... இனியும்
ஓஓ...... ஓஓ.... ஓஓ....


மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்


உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்


இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்


உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் பாடுபட்டுருக்கேன்


காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்


கழுத்தில் முணு முடிய போடு பேசாது சாதிசனம்


இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்


இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பது கண்டதிந்த மயிலே
தொங்கும் மணி கட்டும் தேரு
தொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே பாரு
இங்கு உன விட்டா யாரு


கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே ஹே.. ஹே... ஹே...

Nizhalgal - Madai Thirandhu

படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து



Image result for Nizhalgal



தன நன....  தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா...  தன நன..நன.... நா...
தன நன... நா...  தன நன..நன.... நா...

ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....


லல... லா... லல... லலலா....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....
லல... லா... லல... லலலா....

Nizhalgal - Ponmalai Pozhuthu

படம்: நிழல்கள் (1980)
இசை: இளையராஜா
பாடியவர்: S.P பாலசுப்ரமணியம்
பாடல்வரிகள்: வைரமுத்து




ஹே... ஓ.... ம்... லல.... லல... லா
பொன்மாலைப்பொழுது
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ம்ம்ம்.. ஹே... ஹா.... ... ம்ம்ம்ம்....


ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்
ராத்திரி வாசலில் கோலமிடும்
வானம் இரவுக்குப் பாலமிடும்
பாடும் பறவைகள் தாளமிடும்
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது


வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
வானம் எனக்கொரு போதிமரம்
நாளும் எனக்கது சேதி தரும்
ஒரு நாள் உலகம் நீதி பெறும்
திருநாள் நிகழும் தேதி வரும்
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
வானமகள் நாணுகிறாள்
வேறு உடை பூணுகிறாள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது
ஹா ஹா... ஏ... ஓ... ஹா... ல ல லா....
ம் ம்... ஏ... ஓ... ஹா... ம் ம்.... ம்...

Saturday, June 16, 2012

படிக்காதவன் - ஒரு கூட்டுக் கிளியாக



படம் : படிக்காதவன் (1985)
இசை : இளையராஜா
பாடியவர் : மலேசியா வாசுதேவன்
பாடல் வரி: வைரமுத்து








ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக பாடு... பண்பாடு...
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும் கூடு... ஒரு கூடு...
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக பாடு... பண்பாடு...
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும் கூடு... ஒரு கூடு...



செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்

செல்லும் வழியெங்கெங்கும் பள்ளம் வரலாம்
உள்ளம் எதிர்பாராமல் வெள்ளம் வரலாம்
நேர்மை அது மாறாமல் தர்மம் அதை மீறாமல்
நாளும் நடை போடுங்கள் ஞானம் பெறலாம்



சத்தியத்தை நீங்கள் காத்திருந்தால்
சத்தியம் உங்களைக் காத்திருக்கும்
தாய் தந்த அன்புக்கும் நான் தந்த பண்புக்கும்
பூமாலை காத்திருக்கும்

ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக பாடு... பண்பாடு...
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும் கூடு... ஒரு கூடு...



நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்

நெல்லின் விதை போடாமல் நெல்லும் வருமா
வேர்வை அது சிந்தாமல் வெள்ளிப் பணமா
வெள்ளை இளஞ்சிட்டுக்கள் வெற்றிக் கொடி கட்டுங்கள்
சொர்க்கம் அதைத் தட்டுங்கள் விண்ணைத் தொடுங்கள்



பேருக்கு வாழ்வது வாழ்க்கையில்லை
ஊருக்கு வாழ்வதில் தோல்வியில்லை
ஆனந்தக் கண்ணீரில் அபிஷேகம் நான் செய்தேன்
என் கண்ணில் ஈரமில்லை

ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக பாடு... பண்பாடு...
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும் கூடு... ஒரு கூடு...
என்னென்ன தேவைகள் அண்ணனைக் கேளுங்கள்

ஒரு கூட்டுக் கிளியாக
ஒரு தோப்புக் குயிலாக பாடு... பண்பாடு...
இரை தேடப் பறந்தாலும்
திசை மாறித் திரிந்தாலும் கூடு... ஒரு கூடு...



Saturday, June 9, 2012

உன்னால் முடியும் தம்பி - இதழில் கதை



படம்: உன்னால் முடியும் தம்பி (1988)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S.P. பாலசுப்ரமணியம், K.S.சித்ரா
பாடல் வரி : கவிஞர் முத்துலிங்கம்







இதழில் கதை எழுதும் நேரமிது
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....


மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ.....
மனதில் சுகம் மலரும் மாலையிதுது


இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும் 
நெருங்கிட இனிமையும் பிறக்குது
இதழில் கதை எழுதும் நேரமிது


காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்


நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்


இனிய பருவமுள்ள இளங்குயிலே
இனிய பருவமுள்ள இளங்குயிலே
ஏன் இன்னும் தாமதம் 
மன்மதக் காவியம் என்னுடன் எழுது


நானும் எழுதிட இளமையும் துடிக்குது
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது


ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி


காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே


காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ


மாலை மண மாலை இடும் வேளை தனில்
தேகம் இது விருந்துகள் படைத்திடும்


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....


மனதில் சுகம் மலரும் மாலையிது




தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே


பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா


அழகைச் சுமந்து வரும் அழகரசி
அழகைச் சுமந்து வரும் அழகரசி
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ


நாளும் நிலவது தேயுது மறையுது
நங்கை முகமென யாரதைச் சொன்னது


மங்கை உன் பதில் மனதினைக் கவருது
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது


காமன் கனைகளைத் தடுத்திடவே
காதல் மயில் துணை என வருகிறது


மையல் தந்திடும் வார்த்தைகளே
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது


மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
ஜீவ நதி அருகினில் இருக்குது
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ...


இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ....
இதழில் கதை எழுதும் நேரமிது

Poovilangu - Aathadi Paavadai

படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து


Image result for POOVILANGU





ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட....

அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே...யே.. யே
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே...யே...யே
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
... குளிக்குது ரோசா நாத்து
... தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட

Wednesday, June 6, 2012

பூவெல்லாம் உன் வாசம் - திருமண மலர்கள்



படம் : பூவெல்லாம் உன் வாசம் (2001)
இசை : வித்யா சாகர்
பாடியவர் : ஸ்வர்ணலதா
பாடல் வரி :  வைரமுத்து







திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

தாலி கொள்ளும் பெண்கள் தாயை நீங்கும் போது
கண்ணோடு குற்றாலம் காண்பதுண்டு
மாடி கொண்ட ஊஞ்சல் மடிமேல் கொஞ்சும் பூனை
சொல்லாமல் போகின்ற சோகம் உண்டு
அந்த நிலை இங்கே இல்லை அனுப்பி வைக்க வழியே இல்லை
அழுவதற்கு வாய்ப்பே இல்லை அதுதான் தொல்லை
போனவுடன் கடிதம் போடு புதினாவும் கீரையும் சேரு
புத்திமதி சொல்லும் தாயின் மொழியே இல்லை
ஏன் என்றால் சுவர் தான் உண்டு தூரம் இல்லை
இப்படி ஓர் நல்லுறவு வாய்த்திடுமா
வீட்டுக்குள் விண்மீன்கள் காய்த்திடுமா

திருமண மலர்கள் தருவாயா
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே

கன்னம் கிள்ளும் மாமி காதை திருகும் மாமா
என்போல சொந்தங்கள் யார்க்கு உண்டு
மாதம் பத்து செல்ல மழலை பெற்றுக்கொள்ள
அம்மம்மா தாய் வீடு ரெண்டு உண்டு
பாவாடை அவிழும் வயதில் கைறு கட்டிவிட்டவன் எவனோ
தாலி கட்ட வந்தவன் அவனே உறவானவன்
கொழுசு இடும் ஓசை கேட்டே மனசில் உள்ள பாஷை சொல்வாய்
மழை நின்ற மலரை போல பதமானவன்
உறவெல்லாம் ஒன்றாய் ஒன்றாய் கூடியவன்
தெய்வங்களும் எங்களைதான் நேசிக்குமே
தேவதைகள் வாழ்த்து மடல் வாசிக்குமே

திருமண மலர்கள் தருவாயா
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
நதியும் கரையும் அருகே
நானும் அவனும் அருகே
பிறந்த இடம் புகுந்த இடம் வேறு இல்லை
ஞாயிறுக்கும் திங்களுக்கும் தூரம் இல்லை

Monday, June 4, 2012

நண்பன் - என் ப்ரெண்ட போல



படம் : நண்பன் (2012)
இசை : ஹாரீஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கீரிஷ், சுசீத் சுரேஷன்
பாடல்வரி : விவேகா









என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்
நட்பாலே நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர பொங்க வச்சான்


தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்பு தான் உயர்ந்தது பத்து படி
உன் நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம்
வான் மேகம் போலே நின்றோம்
புதுப் பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டுச் சென்றாய்
ஒரு தாயை தேடும் பிள்ளையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம்


என் ப்ரெண்ட போல யாரு மச்சான்
அவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான்
நீ எங்க போன எங்க மச்சான்
என எண்ணி எண்ணி ஏங்க வச்சான்




Sunday, June 3, 2012

Kannukkul Nilavu - Roja Poonthottam

படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,
பாடலாசிரியர்: பழனி பாரதி





ரோஜா பூந்தோட்டம்....
காதல் வாசம்... காதல் வாசம்...

ரோஜா பூந்தோட்டம் 
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் 
மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் 
தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் 
பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் 
சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் 
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் 
மௌன ராகம் மௌன ராகம்



விழியசைவில் உன் இதழ் அசைவில்
இதயத்திலே இன்று 
ஒரு இசைதட்டு சுழலுதடி

ஓ... ஓ... ஓ...

புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் இன்று 
உன் காதலில் கிடைத்ததடி

ஓ... ஓ... ஓ...
காதலை நான் தந்தேன் 
வெட்கதை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் 
வெட்கதை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் 
இளமை சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் 
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் 
மௌன ராகம் மௌன ராகம்

உன்னை நினைத்து 
நான் விழிந்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண 
நிலவுக்கு துணையிருந்தேன்

ஓ... ஓ... ஓ...

நிலவடிக்கும் கொஞ்சம் 
வெயில் அடிக்கும்
பருவ நிலை அதில் 
என் மலருடன் சிலிர்திருந்தேன்
ஓ... ஓ... ஓ...

சூரியன் ஒரு கண்ணில் 
வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் 
வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் 
உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் 
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் 
மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு இலையிலும் 
தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் 
பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் 
சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் 
காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் 
மௌன ராகம் மௌன ராகம்

Popular Posts