Sunday, September 25, 2011

ஆனந்தம் - என்ன இதுவோ

படம் : ஆனந்தம் (2001)
இசை : S.A.ராஜ்குமார்
பாடியவர்கள் : ஹரிஹரன்
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்





என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் சுவாசிக்க காற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளி பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி என் தலையணை நீயென நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால் அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய்

என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்


This part is in audio
************************************************
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்ந்ததாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும்
சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் சுவாசக் காற்று தேவையா
************************************************


என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ... தென்றல் பெண்ணே இது காதல் தானடி
உன் கண்களோடு இனி மோதல் தானடி

கண்ணெதிரே தோன்றினாள் - சந்தா ஓ சந்தா

படம்: கண்ணெதிரே தோன்றினாள் (1998)
இசை: தேவா
பாடியவர்: ஹரிணி







சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனி மேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழையில்லையே
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


ஆணின் இனம் அது கிளை மாதிரி
பெண்ணின் இனம் அது வேர் மாதிரி
கிளை பேசினால் அதை ஊர் கேட்குமே
வேர் பேசினால் அதை யார் கேட்பது
இன்று நானே வெட்க திரை கிழித்தேன்
என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன்
விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது
உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது



சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்


ஒரு பூவிலும் மனம் பார்க்காதவள்
உன் வேர்வையில் புது மனம் பார்க்கிறேன்
குயில் பாடலில் மனம் மசியாதவள்
ரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன்
எல்லாம் இந்த காதல் செய்த மாயம்
என்னை போல வெண்ணிலவும் தேயும்
பாவை உன்னை கேட்க நினைத்த பரிசு ஒன்று அறிவாயா
உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா
என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா



சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
உள்ளுக்குள் காதல் கொடி வளர்த்தாள்
மொட்டுக்கள் முட்ட கண்டு துடித்தாள்
மொட்டுக்கு மூடியிட்டு மறைத்தாள்
இனிமேலும் திரை போட வழியில்லையே
உன் காதல் பிழையில்லையே

சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்

Tuesday, September 20, 2011

பாரதி கண்ணம்மா - பூங்காற்றே




படம்: பாரதி கண்ணம்மா (1997)
இசை: தேவா
பாடியவர் : K.J யேசுதாஸ்









பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மனம் கலங்குவதேனம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு




வெறும் கோவில் இங்கே ஏன்மா விளக்கேற்றினாய்
விளங்காத காதல் பாட்டை அரங்கேற்றினாய்
விளையாத மண்ணில் ஏன்மா விதை தூவினாய்
வெயில் கால கானல் நீரில் வலை வீசினாய்
அறியாமல் பிழை செய்தாய்
மணலாலே சிலை செய்தாய்
அடி பாரதி கண்ணம்மா இது பாழ்பட்ட மண்ணம்மா
பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு




வரும் ஜென்மம் நானும் நீயும் உறவாடலாம் 
வலையாடும் கைகள் தொட்டு விளையாடலாம் 
இடைவேளை போலே இந்த பிரிவாகலாம் 
இப்போது காதல் வேண்டாம் விடை கூறலாம் 
இளம் பூவே வருந்தாதே 
உலகம் தான் திருந்தாதே 
அடி பாரதி கண்ணம்மா நீ பாரத பெண்ணம்மா



பூங்காற்றே பூங்காற்றே பூவிடம் நீ செல்லு
காதோரம் நான் கூறும் சேதியை நீ சொல்லு
காதலர்கள் வாழ்வதில்லை கல்லறை சொல்கிறது
காதல் மட்டும் சாவதில்லை காவியம் சொல்கிறது
அடி பாரதி கண்ணம்மா மனம் கலங்குவதேனம்மா



தேவா - ஒரு கடிதம்



படம் : தேவா (1995)
இசை : தேவா
பாடியவர் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்







ஒரு கடிதம் எழுதினேன் அதில் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி என்னை காதலி ப்ளீஸ்


ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்
காதலி ஆ... ஹா... ஹா... ஹா... 
என்னை காதலி யே... ஹே... ஹே... ஹே...
காதலி ஆ... என்னை காதலி ஆ... ஹா... ஹா... ஹா... ஹா... 
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்


கண்ணே உன் காலடி மண்ணை திருநீறு போலே
நான் அள்ளி பூசிடுவேனே என் நெஞ்சின் மேலே
அன்பே என் ஆலயம் என்று உன் வாசல் தேடி
அன்றாடம் நான் வருவேனே தேவாரம் பாடி
ஆறுகால பூஜை செய்யும் ஏழை கொண்ட ஆசை
என் வேதம் உந்தன் காதில் கேட்குமோ
காதலி... காதலி 
என்னை காதலி... என்னை காதலி
காதலி ஆ... என்னை காதலி ஆ... 
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்


நான் வாங்கும் சுவாசங்கள் எல்லாம் நீ தந்த காற்று
நீ இன்றி வாழ்ந்திட இங்கு எனக்கேது மூச்சு
ஆகாயம் நீர் நிலம் யாவும் அழகே உன் காட்சி
அலை பாய்ந்து நான் இங்கு வாழ அவை தானே சாட்சி
நீயில்லா நானே குளிர் நீரில்லாத மீனே
நீர் ஓடை போல கூட வேண்டுமே
காதலி மை டார்லிங் என்னை காதலி ப்ளீஸ்
காதலி என்னை காதலி
ஒரு கடிதம் எழுதினேன் என் உயிரை அனுப்பினேன்
அந்த எழுத்தின் வடிவிலே நான் என்னை அனுப்பினேன்

Friday, September 16, 2011

தென்காசிப்பட்டினம் - மயிலிறகே


படம்: தென்காசிப்பட்டினம் (2002)
இசை: சுரேஷ் பீட்டர்ஸ்
பாடியவர்: மனோ, சொர்ணலதா
பாடல்: வாலி










மயிலிறகே... மயிலிறகே...

மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

ஹே.. மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


மாடத்தில் மஞ்சத்தில் இன்பம் இல்லை
மன்னா உன் மனசுக்குள் இடம் பிடித்தேன்
ஊராரும் வேறாரும் காணாமலே
கண்ணா உன் உள்ளத்தை படம் பிடித்தேன்



மயிலிறகே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மன்னா உன் தோள்களில் தொத்தி கொள்ள
மன்றாடும் பிள்ளை இது
கண்ணா நீ கைகளில் ஏந்தி கொள்ள
கண் மூடும் பிள்ளை இது

எனது பார்வையில் எதிரில் தோன்றிடும்
எதுவும் உன் காட்சி தான்
அழகே நீயும் என் மனதில் பாய்கிற
ஆசை நீர் வீழ்ச்சி தான்

நீ சொன்னால் தீக்குள்ளே விரலை வைப்பேன்
நீ சொன்னால் முள்ளை என் விழியில் வைப்பேன்
நான் சொன்னால் கூட நான் கேட்க மாட்டேன்
நீ சொன்னால் நாள் கிழமை பார்க்க மாட்டேன்

ஒ... மானே மானே மனதுக்குள்ளே
உனையின்றி இனிமேலே ஞாபகமில்லை
மயிலிறகே... மணிகிளியே...
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

பழி வாங்கி போனது பல ராத்திரி
உன்னால் நான் தூக்கம் கெட்டேன்
பனி வாடை காற்றோடு விவரம் சொல்லி
உனக்காக தூது விட்டேன்

தூது வந்தது தகவல் தந்தது
தனிமை பொல்லாதது
உன் போல் என் மனம் உருகும் சங்கடம்
வெளியில் சொல்லாதது

எவருக்கு எவரென்று இறைவன் வைத்தான்
அவரோடு அவன் இங்கு அவனே சேர்த்தான்
உனதென்றும் எனதென்றும் இனி இல்லையே
உனக்குள்ளே நான் வந்தேன் தனியில்லையே

என் அன்பே அன்பே காதோடு சொல்
கல்யாண பூமாலை நீ தரும் நேரம்

மயிலிறகே... மயிலிறகே...
மயிலிறகே... மயிலிறகே...


மணிகிளியே... மணிகிளியே...
மணிகிளியே... மணிகிளியே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா

மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா

மயிலிறகே... மயிலிறகே...

மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா

மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா


Thursday, September 15, 2011

தெய்வத் திருமகள் - ஆரிரோ ஆராரிரோ


படம்: தெய்வத் திருமகள் (2011)
இசை: G.V. பிரகாஷ் குமார்
பாடியவர்: ஹரிசரண்
பாடல்: நா.முத்துக்குமார்





 



Download this MP3
(Right Click & Save Link As)



ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
ஓ.... தாயாக தந்தை மாறும் புது காவியம்
ஓ... இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிர் ஓவியம்
இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓர் உயிர் ஆகுதே
கருவறை இல்லை என்ற போதும் சுமந்திட தோணுதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே...


ஆரிரோ ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு


முன்னம் ஒரு சொந்தம் வந்து மழை ஆனதே
மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
இது போல் ஆனந்தம் வேறில்லையே
கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே



Popular Posts