Sunday, July 31, 2011

பாண்டித்துரை - மல்லியே சின்ன

படம் : பாண்டித்துரை (1992)
இசை : இளையராஜா
பாடியவர் :  
மனோ, சொர்ணலதா
பாடல் வரி : கங்கை அமரன்










தன்னன்னா தினம் தன்னன்னா
தினம் தன்னன்னன்னன்னா...


தன்னன்னா தினம் தன்னன்னா
தினம் தன்னன்னானன்னா...

தன்னானாதனா தன்னானாதனா ஒ... 


தன்னன்னா தினம் தன்னன்னா
தினம் தன்னன்னன்னன்னா... 


மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே எந்தன் அருமருந்தே
வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஒ....


மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே
அல்லியே இன்ப வள்ளியே உந்தன் அருமருந்தே




மாலைக்கும் தாலிக்கும் வந்தது யோகம்

ஆஹ்... ஆஹ்... ஆஹ்... ஆஹ்
காலைப் பொன் மேகங்கள் மந்திரம் கூறும்


ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்
சேலைக்குள் சோலைப் பூ வாசம்
சேர்ந்திடும் மாசம் தை மாசம்


வேளைக்கு வேளை உன் மோகம்
விட்டு விடாமல் கை கூடும்


ஆனந்த வேகத்தில் நான் வந்த நேரத்தில்
ஆடி வரும் குளிர்க் காற்றே


பூவேன்ற தேகத்தில் நாம் நின்ற கோலத்தில்
பாடி வரும் புது ஊற்றே


நீராடும் உடல் போராடும் உன்னை தேடும் ஒ...


மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே


அல்லியே இன்ப வள்ளியே உந்தன் அருமருந்தே




சொக்கி நின்றாள் இந்த சொக்கனின் மீனாள்

ஆஹ்... ஆஹ்... ஆஹ்... அஹ்
சூடிக் கொண்டாள் என்னை சொர்க்கத்தில் ஆண்டாள்

ம்ம்... ம்ம்... ம்ம்... ம்ம்
வாரிக் கொண்டாடும் கண் ஜாடை
வஞ்சி நீராடும் பொன் ஓடை

கோதைப் பொன் மேனி பூ மேடை
மேடைக்கு நான் தான் பொன்னாடை

நீ தொட்ட பாகங்கள் தேன் மொட்டு கோலங்கள்
தேடியதால் கனியானேன்


வாய் விட்டு நாள் ஒன்று கேட்கின்றேன் தாவென்று
பாய் விரித்தேன் அடி மானே

அங்கங்கள் பசும் தங்கங்கள் அள்ளும் நேரம் ஒ...


மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே


அல்லியே இன்ப வள்ளியே உந்தன் அருமருந்தே


வண்டாடும் மலர்ச் செண்டாடும் குழலாடும் ஒ...


மல்லியே சின்ன முல்லையே எந்தன் மரிக்கொழுந்தே


அல்லியே இன்ப வள்ளியெ உந்தன் அருமருந்தே

Saturday, July 30, 2011

Inaintha Kaigal - Anthi Nera Thendral

படம் : இணைந்த கைகள் (1990)
இசை : மனோஜ் பட்நாகர்

பாடியவர்க‌ள் :  S.P. பாலசுப்பிரமணியம், ஜெயசந்திரன்

பாடல் வரிக‌ள்: ஆபாவாணன்












அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



உயிர் கொடுத்த தந்தை இங்கே
உரு கொடுத்த அன்னை அங்கே
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ளும் சொந்தம் எங்கே


தாலாட்ட அன்னை உண்டு
சீராட்ட தந்தை உண்டு
இன்பதுன்பம் எது வந்தாலும்
பங்கு கொள்ள நண்பன் உண்டு
ஒரு தாயின் பிள்ளை போல
உருவான சொந்தம் கொண்டு
வரும் காலம் யாவும் வெல்ல
இணைந்த கைகள் என்றும் உண்டு



அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



ஆராரோ... ஆரிராரிராராரோ...
ஆரிராராரோ... ஆரிராரிராராரோ...



உன் மகனை தோளில் கொண்டு
உரிமையோடு பாடுவதென்று
அந்நாளில் துணையாய் நின்று
பங்குக் கொள்ள நானும் உண்டு


தத்துப் பிள்ளை இவனை கண்டேன்
தாய்மை நெஞ்சம் நானும் கொண்டேன்
பத்து திங்கள் முடிந்த பின்னே
முத்து பிள்ளை அவனை காண்பேன்
உறங்காத கண்ணில் இன்று
ஒளி வந்து சேரக் கண்டேன்
பரிவான நண்பன் தந்த
கனிவான தோள்கள் கண்டேன்


அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு
தங்கமகன் வரவைக் கேட்டு
தந்தை உள்ளம் பாடும் பாட்டு

அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு
அந்தி நேர தென்றல் காற்று
அள்ளி தந்த தாலாட்டு


Thursday, July 28, 2011

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - எங்கே எனது


படம் : கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் (2000)
இசை :A.R. ரஹ்மான்
பாடியவர்கள் : K.S. சித்ரா, ஸ்ரீநிவாஸ்
பாடல் வரி : வைரமுத்து






பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை 
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ
அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித் தாருங்கள்
இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரோழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் 
துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை 
உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒரு தரம் பார்த்தால்
அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒரு முறை தீண்டு
நூறு முறை பிறந்திருப்பேன்

பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்
பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன்
நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று
இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

ஒரே பார்வை அட ஒரே வார்த்தை அட 
ஒரே தொடுதல் மனம் வேண்டுதே
முத்தம் போதும் அந்த மூச்சின் வெப்பம்
அது நித்தம் வேண்டும் என்று வேண்டுதே
வேர்வை பூத்த உந்த சட்டை வாசம் இன்று
ஒட்டும் என்று மனம் ஏங்குதே
முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு
குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே... கேட்குதே…
பாறையில் செய்ததும் என் மனம் என்று
தோழிக்கு சொல்லியிருந்தேன்
பாறையின் இடுக்கில் வேர்விட்ட கொடியாய்
நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை
எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை

அள்ளித் தந்த வானம் - தோம் தோம்

படம் : அள்ளித் தந்த வானம் (2001)
இசை : வித்யாசாகர்

பாடியவர்கள் : ஹரிஹரன், K.S.சித்ரா









தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்


கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்


தீண்டித்தீண்டி தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்


ஆணிலுள்ள பெண்ணை கொஞ்சம்
பெண்ணிலுள்ள ஆணை கொஞ்சம்
கொஞ்ச சொல்லி கொஞ்ச சொல்லி
கொஞ்ச சொல்லி யாசித்தோம்


கொத்திக்கொத்தி பேசும் கண்ணை
திக்கித்திக்கி வாசித்தோம்


சுற்றிச்சுற்றி வீசும் காற்றை
நிற்கச்சொல்லி சுவாசித்தோம்


உன்னை என்னை துண்டித்தோம்
உயிரினில் ஒன்றாய் சந்தித்தோம்


மீண்டும் மீண்டும் சீண்டும் இதழை
முத்தம் செய்து தித்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்
தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி
சேரச்சொல்லி யாசித்தோம்


தீயில் உள்ள நீரை கொஞ்சம்
நீரில் உள்ள தீயை கொஞ்சம்
சேரச்சொல்லி சேரச்சொல்லி
சேரச்சொல்லி யாசித்தோம்


ஒற்றைச்சொல்லை சொல்லத்தானே
கோடிச்சொல்லை வாதித்தோம்


மெல்லப்பேசி மெல்லத்தொட்டு
மெதுவாய் வயதை சோதித்தோம்


நிழலையும் திருடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்


இன்னும் இன்னும் என்றே நம்மை
தின்னச்சொல்லி தித்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


தோம் தோம் தித்தித்தோம்
தொலைவில் இருந்தும் சந்தித்தோம்


கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்


கண்ணால் கண்ணில் கற்பித்தோம்
காதல் பாடம் ஒப்பித்தோம்


தீண்டித்தீண்டி தூண்டும் விரலை
திட்டிக்கொண்டே தித்தித்தோம்

Wednesday, July 27, 2011

தெனாவட்டு - எங்கே இருந்தாய்


படம் : தெனாவட்டு (2008)
இசை : ஸ்ரீகாந்த் தேவா
பாடகர் : ஹரீஸ் ராகவேந்திரா









எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


உன்னை பார்க்கும் முன்பு
நான் காகிதத்தில் வெண்மையடி
உன்னை பார்த்த பின்பு
நான் வானவில்லின் வண்ணமடி


தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்
பறிக்கத்தான் ஆளின்றி செடியில் உதிருமடி
உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்
கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி


என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்
வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றால்
விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய்


தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்


என் பெயரை கேட்டாலே உன் பெயரை சொல்கின்றேன்
எப்போதும் என் நினைவு உன்னை சுற்றுதடி
எதிரே யார் வந்தாலும் நீயென்று குழம்புகிறேன்
உன்னாலே என் மனதில் மின்னல் வெட்டுதடி


உயிரில் கலந்தாய் உணர்வில் உறைந்தாய்
எந்தன் நிழல் இன்று என்னை விட்டு விட்டு சென்று
உந்தன் பின்னே வந்து உன்னை தொடர்கிறதே


தோளில் சாயும் போது தோழி நீயடி
மடியில் சாயும் போது தாயும் நீயடி


எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்
எப்படி நீயும் என்னுள் வந்தாய்
கண்ணில் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்
நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

Tuesday, July 26, 2011

கானல் நீர் - முதல் காதல்



படம் : கானல் நீர் (2010)
இசை : 
பிரிட்டோ






முதல் காதல் மறக்காது கண்ணே
அது மறைத்தாலும் மறையாது நெஞ்சில்

முதல் காதல் மறக்காது கண்ணே
அது மறைத்தாலும் மறையாதே

கண்ணீர் இன்றி காதல் இல்லை புரியாதா
ஒ... காதல் இன்றி வாழ்வும் இல்லை தெரியாதா

கண்களில் உள்ள காதலை சொல்ல தான் வானமோ

சொன்னபின் அந்த காதலும் என்ன தான் ஆகுமோ

கண்ணீர் இன்றி காதல் இல்லை புரியாதா
ஒ... காதல் இன்றி வாழ்வும் இல்லை தெரியாதா

Popular Posts