Thursday, June 30, 2011

எல்லாமே என் காதலி - உயிரே உயிரே



படம் : எல்லாமே என் காதலி (1995)
இசை : M.M.கீரவாணி

பாடியவர் :  
மனோ, சித்ரா
பாடல் வரி: பிறைசூடன்











உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ
உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத
தெய்வ பந்தம் இதுவோ
கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத
உண்மை சொந்தம் இதுவோ
அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ
உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ


மனதினில் ஒ.. ஒ.. ஒ.. தீபமாக வந்த பொன் மானே 
விழிகளும்  ஒ.. ஒ.. ஒ.. தெய்வமாக காணும் பூந்தேனே 
உயிர் மொழி நீயடி உனகென்ன நானடி 
உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள் 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 


அன்பிலே வாழுதிங்கே இன்ப பேராலயம் 
மண்ணகம் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம் 
வானமே மாறினும் காலமே தேயினும் 
மனம் தான் தீண்டும் உயிர் காதல் மறையாது அழியாது 


உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ


உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ 


உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத 
தெய்வ பந்தம் இதுவோ 


கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத 
உண்மை சொந்தம் இதுவோ 


அந்த தெய்வீக பந்ததில் உண்டான உறவிது 
உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 

அமர்க்களம் - உன்னோடு வாழாத



படம் : அமர்க்களம் (1999)
இசை : பரத்வாஜ்

பாடியவர் : K.S. 
சித்ரா
பாடல் வரி :  
வைரமுத்து









உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது


மெல்லிய ஆண்மகனைப் பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்
முடி குத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னைப் போலே ஆணில்லையே
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே மீன் நழுவதில்லையே
ஆம் நமக்குள் ஊடலில்லை


உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது


நீ ஒரு தீ என்றால் நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிறு
நீ ஒரு முள்ளேன்றால் நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிறு
நீ வீரமான கள்ளன் உள்ளுரும் சொல்லுது
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாடமாளிகை 
காதலோடு பேதமில்லை



உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது
பூவோடு பேசாத காற்றென்ன காற்று
ஒரு பூஞ்சோலை கேட்கின்றது
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானோ

அஞ்சலி - அஞ்சலி அஞ்சலி



படம் : அஞ்சலி (1990)
இசை : இளையராஜா

பாடியவர் : கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, பவதாரினி, 

                       வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், பார்தி பாஸ்கர், ஹரி பாஸ்கர்
பாடல் வரி :  வாலி









அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி 


அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி

அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

பொன்மணி சின்ன சின்ன 
கண்மனி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூ மேனி 
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


ஆகாயம் பூமி எல்லாம்
இறைவன் உண்டாக்கி வைத்து 
ஆசை தான் தீராமலே உன்னை தந்தானம்மா 
கண்ணே உன் மேல் மேகம் தான்
பன்னீர் தூவி நீராட்டும் 
துள்ளி தாவும் மான் குட்டி
சொல்லி சொல்லி தாலாட்டும் 
நடக்கும் நடையும் ஒரு பல்லாக்கு 
சிரிக்கும் சிரிப்பும் ஒரு மத்தாப்பு 
உனது அழகுகென்ன ராஜாத்தி
உலகம் நடந்து வரும் கைதட்டி 
வராமல் வந்த தேவதை 
உலாவும் இந்த வெள்ளி தாரகை 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி



பூப்போல கண்ணாலே தான்
பேசும் சிங்காரமே நீ
அன்னம் போல் நம்மோடு தான்
ஆடு எப்போதும் நீ
வானம் வாழும் ஏஞ்சல் தான்
வண்ணப் பாப்பா அஞ்சலி தான்
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான்
ஆடிப் பார்க்கும் அஞ்சலி தான்


நடந்து நடந்து வரும் பூச்செண்டு (பூச்செண்டு)
பறந்து பறந்து வரும் பொன்வண்டு (பொன்வண்டு)
எடுக்க எடுக்க இரு கைகொண்டு (கைகொண்டு)
இனிக்க இனிக்க வரும் கற்கண்டு
நிலாவை போல ஆடி வா
நில்லாமல் கூட நீயும் ஓடி வா


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி 
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

அம்மம்மா பிள்ளை கனி 
அங்கம் தான் தங்க கனி 

பொன்மணி சின்ன சின்ன 
கண்மனி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன் மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூ மேனி 
கண்படும் கண்படும் இந்த பொன் மேனி 


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி


அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
சின்ன கண்மனி கண்மனி கண்மனி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி
மின்னும் மின்மினி மின்மினி மின்மினி

சத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்



படம் : சத்தம் போடாதே (2007)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் : சங்கர் மகாதேவன்

பாடல் வரி :  நா.முத்துகுமார்










அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்


அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி


உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை..
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி


ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்


ரோஜாப்பூ கை ரெண்டும் காற்றோடு கதை பேசும்
உன் பின்னழகில் பௌர்ணமிகள் தகதிமிதா ஜதி பேசும்
எந்த நேரம் ஓயாத அழுகை
ஏன் இந்த முட்டிக்கால் தொழுகை


எப்போதும் இவன் மீது பால் வாசனை
என்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை
எந்த நாட்டை பிடித்து விட்டான்
இப்படியோர் அட்டினக்கால் தோரணை... தோரணை...



ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 



அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்


ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

நீ திண்ற மண் சேர்த்தால் வீடொன்று கட்டிடலாம்
நீ சிணுங்கும் மொழி கேட்டால் சங்கீதம் கற்றிடலாம்
தண்டவாளம் இல்லாத இரயிலை
தவழ்ந்த படி நீ ஓட்டிப் போவாய்

வம்பு தும்பு செய்கின்ற பொல்லாதவன்
கடவுள் போல் கவலைகள் இல்லாதவன்
ஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி
ஓடுகின்ற கண்ணனே புன்னகை மன்னனே

ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 


அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

அம்மு நீ... என் பொம்மு நீ
மம்மு நீ... என் மின்மினி

உனக்கு தெரிந்த மொழியிலே எனக்கு பேசத் தெரியலே
எனக்கு தெரிந்த பாஷை பேச உனக்கு தெரியவில்லை
இருந்தும் நமக்குள் இது என்ன புது பேச்சு
இதயம் பேச எதற்கிந்த ஆராய்ச்சி

ஜிஞ்ஜனிஞ்ஜ...  ஜிஞ்ஜனிஞ்ஜ... ஜிஞ்ஜனி 
மஞ்ஜனிஞ்ஜ...  மஞ்ஜனிஞ்ஜ... மஞ்ஜனி 

அழகு குட்டி செல்லம்
உன்னை அள்ளி தூக்கும் போது
உன் பிஞ்சு விரல்கள் மோதி
நான் நெஞ்சம் உடைந்து போனேன்

ஆளை கடத்திப் போகும்
உன் கன்னக்குழியின் சிரிப்பில்
விரும்பி மாட்டிக்கொண்டேன்
நான் திரும்பி போக மாட்டேன்

Sunday, June 5, 2011

கிழக்கு சீமையிலே - மானுத்து மந்தையில



இன்று காலை (05-06-11)
அக்காக்கு பொண்ணு பிறந்த 
சந்தோஷத்தில் இந்த பதிவு....


படம் : கிழக்கு சீமையிலே (1993)
இசை : 
A.R. ரஹ்மான்

பாடியவர் :  S.P. பாலசுப்ரமணியம்
பாடல் வரி : 
வைரமுத்து








மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே
தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


நாட்டுக்கோழி அடிச்சு
நாக்கு சொட்ட சமச்சி
நல்லெண்ண ஊத்தி குடு ஆத்தா


ஒ... மேலு காலு வலிச்சா
வெள்ளப்பூடு உரிச்சி
வெல்லம் கொஞ்சம் போட்டு குடு ஆத்தா


பச்ச ஒடம்புக்காரி...
பாத்து நடக்க சொல்லுங்க


பிள்ளைக்கு தாய்ப்பாலு
தூக்கிக் கொடுக்க சொல்லு


மச்சான திண்ணையில
போத்திப் படுக்க சொல்லு


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே


தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


ஆட்டுப்பால் குடிச்சா
அறிவழிஞ்சி போகுமுன்னு
எருமப்பால் குடிச்சா
ஏப்பம் வந்து சேருமுன்னு
காராம் பசு ஓட்டி வாராண்டி தாய் மாமன்


வெள்ளிச்சங்கு செஞ்சா
வெளக்கி வெக்க வேணுமுன்னு
தங்கத்தில் சங்கு செஞ்சி தாராண்டி தாய் மாமன்


பச்ச ஒடம்புக்காரி...
பாத்து நடக்க சொல்லுங்க


ஈ எறும்பு அண்டாம
எட்டி இருக்க சொல்லு
மச்சான ஈரத்துணி
கட்டி இருக்க சொல்லு


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
அய்யோ.. பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே



தாய்மாமன் சீர் சொமந்து வாராண்டி
அவன் தங்கக் கொலுசு கொண்டு தாராண்டி
சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே
ஒய்... சீரு சொமந்த சாதி சனமே
ஆறு கடந்தா ஊரு வருமே


மானுத்து மந்தையில
மாங்குட்டி பெத்த மயிலே
போடே... பொட்டபுள்ள பொறந்ததுன்னு
பொலிகாட்டில் கூவும் குயிலே

Popular Posts