Sunday, May 15, 2011

சிவா மனசுல சக்தி - ஒரு பார்வையில்



படம் : சிவா மனசுல சக்தி (2009)
இசை : 
யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  ரஞ்சித்
பாடல் வரி : நா.முத்துகுமார்









ஒரு பார்வையில் பூ கொடுத்தாய்
ஒரு வார்த்தையில் வாழ வைத்தாய் 
ஒரு மேகத்தை போல் எந்தன்
தேகத்தை மாற்றி வைத்தாய் 


இறகை போல் ஒரு வேகத்தில் வேகத்தில் 
வானத்தில் வானத்தில் செல்லுகின்றேன் 
நிலவை போல் உன்னை தூரத்தில் தூரத்தில் 
பார்க்கின்ற போதெல்லாம் துள்ளுகின்றேன் 


நீ எனது உயிராக நான் உனது உயிராக 
ஒர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம் 


நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி 
நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும் 


உயிரே நீ பார்த்தாலே 
உயிருக்குள் பூகம்பங்கள் தோன்றும் 
உன்னால் அடி உன்னாலே
உள்ளுக்குள் என்னென்னவோ ஆகும்

சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி



படம் : சிவா மனசுல சக்தி (2009)
இசை : 
யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  யுவன் சங்கர் ராஜா
பாடல் வரி : 
நா.முத்துகுமார்









ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால்.... ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே


ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்


திமிருக்கு மறு பெயர் நீ தானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே


கடும் விஷத்தினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தானே


ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்


உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழலுடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்


உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
அதை சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்க்கை
உன் மௌனத்தில் இருக்கும் என்ன வலிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்லு


ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்

கண்கள் இரண்டில் காதல் வந்தால்
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே

ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்


Friday, May 13, 2011

மந்திரப் புன்னகை - அன்பில்லாம கரைஞ்சது



படம் : மந்திரப் புன்னகை (2010)
இசை : வித்யா சாகர்

பாடியவர் :  
ஜெஸ்ஸி கிப்ட், மாயா

பாடல் வரி : யுகபாரதி











அன்பில்லாம கரைஞ்சது போதும்
ஆசை தீயில் எரிஞ்சது போதும்
தேடி தேடி தொலைஞ்சது போதும்
தேதி தாளா கிழிஞ்சது போதும்


நானும் இந்த உலகில்
பெண்ணாலே பட்டது போதும்
காணும் எல்லா உயிரும்
அவளாலே கெட்டது போதும் போதும்


அன்பில்லாம கரைஞ்சது போதும்
ஆசை தீயில் எரிஞ்சது போதும்
தேடி தேடி தொலைஞ்சது போதும்
தேதி தாளா கிழிஞ்சது போதும்


பேசிய பேச்சை கேட்டு
பிரியமே வைத்தது போதும்
பூசிய மையை பார்த்து
புன்னகை இழந்தது போதும்
சூடிய பூவை போல
வாடியே போனது போதும்
மூடிய சேலையாலே
முகவரி மறந்தது போதும்
தேவதை என்றே நம்பி
நாம் தீமையை புகைந்தது போதும்
காதலி பேரை சொல்லி
வீண் வேதனை அடைந்தது போதும்
புதையல் அவளே என்று
நாம் பூஜ்ஜியமானது போதும் போதும்


அன்பில்லாம கரைஞ்சது போதும்
ஆசை தீயில் எரிஞ்சது போதும்
தேடி தேடி தொலைஞ்சது போதும்
தேதி தாளா கிழிஞ்சது போதும்


வஞ்ஜனை செய்யும் பெண்ணை
கொஞ்சியே நின்றது போதும்
இம்சைகள் செய்யும் பெண்ணை
இன்பமே என்றது போதும்
உள்ளமே இல்லா பெண்ணை
செல்லமே என்பது போதும்
வெட்கமே கொள்ளா பெண்ணை
சொர்க்கமே என்பது போதும்


கண்ணே மணியே என்று
நாம் காயம் பெற்றது போதும்
கவலை கொண்டே நெஞ்சில்
நாம் கண்ணீர் விட்டது போதும்
மனதை திருடும் பெண்ணால்
நாம் மரணம் தொட்டது போதும் போதும்


அன்பில்லாம கரைஞ்சது போதும்
ஆசை தீயில் எரிஞ்சது போதும்
தேடி தேடி தொலைஞ்சது போதும்
தேதி தாளா கிழிஞ்சது போதும்

இந்தியன் - டெலிபோன் மணி போல்



படம் : இந்தியன் (1996)
இசை : A.R. ரஹ்மான்

பாடியவர் :  
ஹரிஹரன், ஹரிணி

பாடல் வரி : வைரமுத்து










டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா



டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா


நீயில்லை என்றால் வெயிலுமடிக்காது
துளி மழையுமிருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது


உன் பேரை சொன்னால் 
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே 
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி


நீரில்லை என்றால் 
அருவி இருக்காது மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால் 
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது


வெள்ளை நதியே 
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் 
கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு



டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா


உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தைத் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்


பெண்கள் வாசம் என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது


நீ போகும் தெருவில் ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்


புடவை கடையில் 
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது



டெலிபோன் மணி போல் சிரிப்பவள் இவளா
மெல்பௌன் மலர் போல் மெல்லிய மகளா
டிஜிட்டலில் செதுக்கிய குரலா
எலிசபெத் டெய்லரின் மகளா
சாகிர் ஹுசைன் தபலா இவள்தானா
சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் லேட்டஸ்ட் செல்லூலர் ஃபோனா
கம்ப்யூட்டர் கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா


Popular Posts