Thursday, January 27, 2011

காதல் மன்னன் - வானும் மண்ணும்

படம் : காதல் மன்னன் (1998)
இசை : பரத்வாஜ்
பாடியவர் :  
ஹரிஹரன், K.S. சித்ரா
பாடல் வரி : வைரமுத்து







வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே
ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ...

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே
மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

ஒரு மூங்கில் காடெரிய சிறு பொறி ஒன்று போதும்
அந்த பொறி இன்று தோன்றியதே

காதல் இடம் பார்ப்பதில்லை
அது இனம் பார்ப்பதில்லை
அது பொசுக்கென்று பூத்திடுதே


ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

நியாயமா இது பாவமா என்று சொல்ல யாரும் இங்கு இல்லை

மௌனமே மொழியானதால் அட பாஷை என்பதொரு தொல்லை
அடுத்தொன்று தோன்றவில்லை

வெண்ணிலா நீராற்றிலே என்றும் வீழ்ந்து பார்த்தவர்கள் இல்லை

பெண்ணிலா தங்க சேற்றிலே இன்று வீழ்ந்து போனதொரு தொல்லை
இலக்கணம் பார்க்கவில்லை

பிறக்கும் மொட்டுகள் தேதி பார்ப்பதுவும் இல்லை

உறவு மாறலாம் உந்தன் கையில் அது இல்லை


ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

எவ்விடம் மழை தூவலாம் என்று மேகம் யோசிப்பது உண்டோ

ஜாதகம் சுப யோகங்கள் கண்டு காதல் கூடுவது உண்டோ
உணர்ச்சிக்கு பாதை உண்டோ

விதியினும் காதல் வலியது இதில் வேறு வாதம் ஒன்று உண்டோ

காதலின் திசை ஆயிரம் அது கண்டு சொன்னவர்கள் உண்டோ
கனவுக்கு வேலியுண்டோ

காலம் சொல்லுவதை காதல் கேட்பதுவும் இல்லை

ஆசையென்ற நதி அணையில் நிற்பதுவும் இல்லை

ஒரு நீரோடை மீனுக்கு கரை மேலாசை வந்தது
இனி என்னென்ன நேர்ந்திடுமோ

வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே

மண்ணில் நீலம் ஒட்டிக் கொண்டதே

Karuthamma - Thenmerku Paruva Katru

படம் : கருத்தம்மா (1994)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர்கள் :  உன்னிகிருஷ்ணன், K.S.சித்ரா
பாடல் வரிகள் : வைரமுத்து





தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க



தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்
பெண்ணோடும் கண்ணோடும் நான் காண்கிறேன்


தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்
பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்


மழைத்துளி என்ன தவம்தான் செய்ததோ
மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே


மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ
நினைக்கையில் உள்ளூறக் கள்ளூறுதே

தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க



தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்

நீயெறும் நானெறும் இரு வார்த்தை ஒன்றாகி
நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே


ஆணென்றும் பெண்ணெறும் இரு வார்த்தை ஒன்றாகி
ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே


காதல் என்னும் மந்திரத்தின் மாயமென்ன
கல்லும் முள்ளும் இப்போது பூவானதே


வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து
யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே



தென்மேற்குப் பருவக் காற்று
தேனிப்பக்கம் வீசும் ஒரு சாரல் இன்பச்சாரல்
தெம்மாங்கு பாடிக்கொண்டு சிலுசிலுவென்று
சிந்துதம்மா தூறல் முத்துத்தூறல்
வெங்காட்டு பக்கக்கள்ளி சட்டென்று மொட்டுவிட
செங்காட்டு சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க

Wednesday, January 26, 2011

தாம்தூம் - அன்பே என்



படம் : தாம்தூம் (2008)
இசை : ஹரீஸ் ஜெயராஜ்

பாடியவர் :  
ஹரீஸ் ராகவேந்திரா
பாடல் வரி : நா.முத்துகுமார்



அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ....

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம்
மௌனத்தினிலே கலக்கும்

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண்ணுறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே

எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண்ணுறங்காமல்

கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்


Friday, January 21, 2011

ஸ்டைல் - காதலித்தால் ஆனந்தம்



படம் : ஸ்டைல் (2002)
இசை : பரணி

பாடியவர் :  ஹரிஹரன்

பாடல் வரி : பா.விஜய்



காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் 
அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் 
கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் 
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம் 


காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 


கடவுள் பிறக்கும் முன்னாலே
இங்கு காதல் பிறந்தது தன்னாலே 
இனியவளே இனியவளே இனியவளே ஹோ
பெண்கள் பிறந்த பின்னாலே
இன்ப அவஸ்தை பிறந்தது தன்னாலே 
என்னவளே என்னவளே என்னவளே ஹோ 


பூக்களிலே மிக பெரிய பூவேன வந்தவள் நீ தான் 
நதிகளிலே மிக சிறிய நதியேன வந்தவள் நீதான் 
கனவுகளின் ஹோய்..ஹோய்.. 
முகவரி நீ ஹோய்...ஹோய்.. 
கவிதைகளின் தாய் மொழி நீ எனக்கேன ஹோய்.. 



காதலித்தால் ஆனந்தம் கண்ணடித்தால் ஆனந்தம் 
சத்தமின்றி முத்தம் தந்தால் ரொம்ப ரொம்ப ஆனந்தம் 
பார்த்துக்கொண்டால் ஆனந்தம் பேசிக்கொண்டால் ஆனந்தம் 
அங்கங்கே தீண்டும்போது கோடி கோடி ஆனந்தம் 
கை பிடித்தால் ஆனந்தம் கட்டி அணைத்தால் ஆனந்தம் 
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் தம் தம் தம் தம் 

Roja - Kadhal Rojave

படம் : ரோஜா (1992)
இசை : A.R. ரஹ்மான்
பாடியவர் :  S.P. பாலசுப்பிரமணியம், சுஜாதா

பாடல் வரி : வைரமுத்து





காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்
காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே


தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்
வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்
மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்
வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே
நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்


வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

Thursday, January 20, 2011

காதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட



படம் : காதலுக்கு மரியாதை (1997)
இசை : இளையராஜா

பாடியவர் :  ஹரிஹரன்

பாடல் வரி : பழனி பாரதி





என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ


பூ விழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்


இரவும் பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினால்


நான் கேட்கும் பதில் இன்று வாராத
நான் தூங்க மடி ஒன்று தாராத
தாகங்கள் தாபங்கள் தீராத
தாளங்கள் ராகங்கள் சேராத
வழியோரம் விழி வைக்கிறேன்

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்


கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்


கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாடைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ
தத்தளிக்கும் மனமே தத்தை வருவாளா
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே

என்னை தாலாட்ட வருவாளோ.. வருவாளோ...
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ.. வருவாளோ..
தங்க தேராட்டம் வருவாளோ.. வருவாளோ..
இல்லை ஏமாற்றம் தருவாளோ.. 
வருவாளோ..

மெளனம் பேசியதே - சின்ன சின்னதாய்



படம் : மெளனம் பேசியதே (2002)
இசை : யுவன் சங்கர் ராஜா

பாடியவர் :  ஹரிஹரன், யுவன் சங்கர் ராஜா

பாடல் வரி : பா.விஜய்






சின்ன சின்னதாய் பெண்ணே..
என் நெஞ்சில் முட்களால் தைத்தாய்
என் விழியில் வாள் கொண்டு வீசி..
இள மனதில் காயங்கள் தந்தாய்..
துன்பம் மட்டும் என் உறவா... உனை காதல் செய்வதே தவறா...


உயிரே.... உயிரே....
காதல் செய்தால் பாவம்.. பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே... 
பெண்கள் கண்ணில் சிக்கும்... ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

காதல் வெறும் மேகம் என்றேன்.. அடை மழையாய் வந்தாய்... 
மழையோடு நனைந்திட வந்தேன்.. நீ தீயை மூட்டினாய்.... 
மொழியாக இருந்தேனே... உன்னால் இசையாக மலர்ந்தேனே... 


என் உயிரோடு கலந்தவள் நீ தான் .. ஹேய் பெண்ணே.. 
கனவாகி கலைந்ததும் ஏனோ.. சொல் கண்ணே.. 


மெளனம் பேசியதே... உனக்கது தெரியலையா.. 
காதல் வார்தைகளை.. கண்கள் அறியலையா... 




காதல் செய்தால் பாவம்.. பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே... 
பெண்கள் கண்ணில் சிக்கும்... ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...


துணை இன்றி தனியாய் சென்றேன்.. என் நிழலாய் வந்தாய்... 
விடை தேடும் மாணவன் ஆனேன்.. என் விடையும் நீயேன... 
வந்தாயே.. என் வழியில்.. காதல் தந்தாயே... உன் மொழியில்... 


என் நெஞ்சில் காதல் வந்து .. நான் சொன்னேன்.. 
உன் காதல் வேறோர் மனதில்.. எனை நொந்தேன்... 
கண்கள் உள்ளவரை... காதல் அழிவதில்லை... 
பெண்கள் உள்ளவரை... ஆண்கள் ஜெயிப்பதில்லை... 



காதல் செய்தால் பாவம்.. பெண்மை எல்லாம் மாயம்..
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே... 
பெண்கள் கண்ணில் சிக்கும்... ஆண்கள் எல்லாம் பாவம்...
உண்மை கண்டேன் உன்னால் பெண்ணே...

Popular Posts