Wednesday, September 8, 2010

வசீகரா - ஒரு தடவை சொல்வாயா



படம் :வசீகரா (2003)
இசை :S.A.ராஜ்குமார்
பாடியவர் :ஹரிஹரன், சின்மயி
பாடல் வரி : பா.விஜய்




ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே


நதியில் தெரியும் நிலவின் உருவம்
நதிக்குச் சொந்தமில்லை
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை
யாருக்கும் அமைவதில்லை


உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு
தானாய் விழுந்ததில்லை
உலக உருண்டை உடையும் போதும்
காதல் உடைவதில்லை


மின்மினி தேசத்து சொந்தக்காரன்
விண்மீன் கேட்பது தவறாகும்


வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்
வலியோடு போராடும் காதல் தானே
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று


நெருங்க நினைக்கும் நினைவை மறக்க
நெஞ்சம் நினைக்கிறது
கனவில் பூக்கும் பூக்கள் பறிக்க
பெண்மை அழைக்கிறது


கிளையை முறித்து போட்டு விடலாம்
வேரை என்ன செய்வாய்?
தரையை உடைத்து முளைக்கும் போது
அன்பே எங்கு செல்வாய்?


மல்லிகை பூக்கள் உதிர்வதெல்லாம்
மரத்தடி நிழலுக்குச் சொந்தமில்லை


உன்னோடு நான் வாழ போராடுவேன்
நீ இன்றி போனாலே தள்ளாடுவேன்
ஒரு தடவை சொல்வாயா
உன்னை எனக்குப் பிடிக்கும் என்று
ஒரு பார்வை பார்ப்பாயா
உன்னை எனக்கு பிடிக்கும் என்று
காதல் ஒரு புகையைப் போல
மறைத்து வைத்தால் தெரிந்துவிடும்
காதலில் தான் பூக்கள் மோதி
மலைகள் கூட உடைந்துவிடும்
உன்னை ஒளிக்காதே என்னை வதைக்காதே
என்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே

நானே ராஜா நானே மந்திரி - மயங்கினேன் சொல்ல



படம் :நானே ராஜா நானே மந்திரி (1986)
இசை :இளையராஜா

பாடியவர் : ஜெயச்சந்திரன், சுசீலா
பாடல் வரி : வாலி



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே



உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ 
துன்பக் கவிதையோ கதையோ?

இரு கண்ணும் என் நெஞ்சும்

இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?


மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்

மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?

மணவறையில் நீயும் நானும் தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?

ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான் 
உந்தன் உறவுதான் உறவு!

அந்த நாளை எண்ணி நானும்

அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்



மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாமல் வாழும் வாழ்வுதான் ஏனோ?

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் 
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம் 
பெறத் தவிக்குதே 


ஜுலி கணபதி - எனக்குப் பிடித்த பாடல்



படம் :ஜுலி கணபதி (2003)
இசை :இளையராஜா

பாடியவர் :ஸ்ரேயா கோஷல்

பாடல் வரி : நா.முத்துகுமார்




எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே



என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?



எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே


என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!

காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்.



எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே

வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ


நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்





எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
உதிர்வது... பூக்களா..?
மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

பையா - ஏதோ ஒன்று என்னை


படம் :பையா (2010)
இசை :யுவன் சங்கர் ராஜா
பாடியவர் :யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர் : நா.முத்து குமார்










ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே




என்னை உன்னிடம் விட்டு செல்கிறேன்
எதுவும் இல்லையே என்னிடத்தில்
எங்கே போவது யாரை கேட்பது
எல்லா பாதையும் உன்னிடத்தில்
ஏன் எந்தன் வாழ்வில் வந்தாய்
என் இரவையும்  பகலையும் மாற்றிபோனாய்
ஏன் இந்த பிரிவை தந்தாய்
என் இதயத்தில் தனிமையை ஊற்றிபோனாய்
உள்ளே உன் குரல் கேட்குதடி
என்னை என்னுயிர் தாக்குதடி
எங்கே இருக்கிறேன்  எங்கே நடக்கிறேன்
மறந்தேன் நான்


பெண்ணே உந்தன் ஞாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே


ஏதோ ஒன்று என்னை தாக்க
யாரோ போல உன்னை பார்க்க
சுற்றி எங்கும் நாடகம் நடக்க
பெண்ணே நானும் எப்படி நடிக்க
காலம் முழுதும் வாழும் கனவை
கண்ணில் வைத்து தூங்கினேன்
காலை விடிந்து போகும் நிலவை
கையில் பிடிக்க ஏங்கினேன்
பெண்ணே உந்தன் நியாபகத்தை
நெஞ்சில் சேர்த்து வைத்தேனே
உன்னை பிரிந்து போகையிலே
நெஞ்சை இங்கு தொலைத்தேனே

இதய தாமரை - ஒரு காதல் தேவதை



படம் : இதய தாமரை (1989)
இசை :சங்கர் கணேஷ்

பாடியவர் : S.P.பால சுப்பிரமணியம், K.S.சித்ரா
பாடலாசிரியர் : வைரமுத்து






ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்


ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

பூக்களின் கருவரையில் பிறந்தவள் நீயா........
பூவுக்குள் பூஜை செய்ய பிறந்தவன் நானில்லயா...
இதயத்தின் தாமரையில் இருப்பவன் நீயா?
தாமரைக்குள் வீடுகட்டி தந்தவள் நானில்லயா ?
ஓடோடி வந்ததால் உள்மூச்சு வாங்குது
உன் மூச்சில் அல்லவா என்முச்சும் உள்ளது...
ஒன்றானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்
ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்

யாருக்கு யார் உறவு யாரரிவாரோ......
என் பெயரில் உன் பெயரை இயற்கையும் எழுதியதோ..
பொன் மகள் மூச்சுவிட்டால் பூமலராதோ....
பூமகளின் வாய்மொழியே பூஜைக்கு வேதங்களோ...
கல்லுரி வாழ்கையில் காதல் ஏன் வந்தது....
ஆகாயம் எங்கிலும் நீலம் யார் தந்தது
இயல்பானது.......

ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்
ஒரு காதல் காவியம் கையோடு தந்தாள்..
கள்ளூரும் காலை வேளையில்...




Popular Posts